Dec 10, 2018, 3:20 PM IST
2016 மார்ச் 13இல், உடுமலைப்பேட்டை பேருந்து நிலையம் அருகே தனது காதல் கணவரை பறிகொடுத்த சமூகச் செயற்பாட்டாளரான கவுசல்யா, இன்று கோவையில் சக்தி என்பவரை மறுமணம் செய்துகொண்டார். இவர், நிமிர்வு பறை இசைக் குழுவை நடத்தி வருகிறார். சக்தியிடம் தான் கவுசல்யா பறை இசை கற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. கோவை பெரியார் படிப்பகத்தில் நடந்த இந்தத் திருமணத்தில் கவுசல்யா, சக்தியின் நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டனர். நேற்று நடந்த இந்த மருமணத்திற்கு நடிகர் சத்யராஜ் வஸ்த்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.