உடலுறவு என்பதும், மனிதனின் மனதிற்கும் சரி உடலுக்கும் சரி பல்வேறும் நன்மைகளை செய்யக்கூடியது என்பதை நாம் அறிவோம். பொதுவாக விருப்பப்பட்டு அதிக அளவில் உடலுறவு வைத்துக்கொள்பவர்களை விட, பெரிய அளவில் உடலுறவில் ஈடுபடாதவர்கள் மந்த நிலையில் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
சரி ஏன் உடலுறவு இவ்வளவு மகிழ்ச்சியை தருகின்றது?
ஒரு இன்பமான உடலுறவு என்பது மனிதனின் மூளையை தான் பெரிதும் சார்ந்துள்ளது. இது பாலியல் இன்பத்தை ஆதரிக்கும் ஹார்மோன்களை வெளியிடுகிறது மற்றும் தூண்டுதலை மகிழ்ச்சிகரமானதாக மாற்றுகிறது. கடந்த 2016ல் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், மூளை மிக முக்கியமான பாலியல் உறுப்பாக இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
உடலுறவின்போது, ஆணுறுப்பு, பெண்ணுறுப்பு மற்றும் இடுப்பு ஆகியவற்றில் உள்ள திசு இரத்தத்தால் நிரப்பப்படுகிறது. இது உடலின் இந்த பகுதிகளில் நரம்புகளின் உணர்திறனை அதிகரிக்கிறது. இந்த இரத்த ஓட்டம் டிரான்ஸ்யூடேட் எனப்படும் திரவத்தையும் உருவாக்குகிறது, இது தான் பெண்ணுறுப்பை லுபிரிகேட் செய்கின்றது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
உடல் முழுவதும் தசைகள் சுருங்க ஆரம்பிக்கும். இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் சிலர் வேகமாக சுவாசிக்கிறார்கள், சிலருக்கு தோல் கூட சிவந்துவிடும். சரியான தூண்டுதல் மற்றும் சரியான மனநிலையுடன் இருவரும் இருக்கும்போது, அந்த தம்பதி தங்கள் செக்ஸ் வாழ்க்கையில் உச்சக்கட்டத்தை அடையலாம்.
பெரும்பாலான பெண்களுக்கு, க்ளிட்டோரல் தூண்டுதலே அவர்கள் உணர்ச்சியின் உச்சியை அடைவதற்கான வேகமான, மற்றும் மிகவும் பயனுள்ள வழியாகும். இதுபோல உடலில் நடக்கும் பல ரசாயனம் மாற்றங்களே உடலுறவில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
தம்பதிகள் உச்சக்கட்டத்திற்கு சென்ற பிறகு, தசைகள் ஓய்வு நிலைக்கு வருகின்றன, மேலும் உடல் மெதுவாக அதன் முன்-விழிப்பு நிலைக்குத் திரும்பும். இந்த செயல்முறை ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபடுகின்றது. விந்து வெளியேறிய உடனேயே பெரும்பாலான ஆண்களால் உச்சக்கட்டத்தை அடைய முடியாது என்றாலும், பல பெண்களால் அது முடியும்.