Sexless Marriage Life : திருமணம் என்பது இரு மனம் இணையும் ஒரு இணை தருணம் என்பார்கள். ஆனால் அதனுள் பல்வேறும் சங்கடங்கள் வந்து செல்வது அனைவரும் அறிந்ததே.
இரு மனம் இணையும் ஒன்றைத்தான் திருமணம் என்று அழைப்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த திருமணத்தின் மூலம் எப்படி இரு மனங்கள் இணைகின்றதோ, அதேபோல இரு உடல்களும் இணைந்து உறவாடுகின்றன என்பதுதான் நிதர்சனமான உண்மை. திருமண வாழ்க்கை என்பது பல சுக துக்கங்கள் நிறைந்த ஒன்றுதான்.
ஆனால் அதில் தாம்பத்தியம் பொய்த்து போகும் போது பல மாறுதல்களை அந்த தம்பதிகள் சந்திக்க கூடும். படுக்கை அறையில் கணவனும் மனைவியும் உடலுறவு இல்லாமல் வாழ துவங்கும் பட்சத்தில், அவர்கள் மத்தியில் பிளவு ஏற்பட துவங்குகிறது. சாதாரண விஷயம்களுக்கு கூட பெரிய அளவில் கோபத்தோடு வாதிடும் நிலைக்கு அந்த தம்பதிகள் தள்ளப்படுகின்றனர்.
தம்பதிகளே எச்சரிக்கை.. இந்த வகை உடலுறவு ஆபத்தானதாம்..
இருவருக்கும் இடையேயான தகவல் தொடர்பு என்பது பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது, இதனால் மன உளைச்சலும், மன அழுத்தமும் அதிகரிக்க துவங்குகிறது. சிறு சிறு தவறுகளை பெரிதாக்கி ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வதோடு, மனரீதியாக காயப்படுத்திக் கொள்வதும் இதனால் அதிகரிக்கிறது. கணவனோ அல்லது மனைவியோ விருப்பப்பட்டு உறவுவைத்துக் கொள்ள வரும்பொழுது அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவிக்கிறார்கள் என்றால் வாழ்க்கையில் வெறுப்புணர்ச்சி மேலோங்கும்.
நாள்பட இந்த பிரச்சனை அதிகரிக்கும் பட்சத்தில் தூக்கமின்மை முதலில் அவர்களை ஆட்கொள்ளும். அதிக நேரம் தங்களுடைய செல்போன்களை பயன்படுத்த அவர்களை அது ஊக்குவிக்கும். இந்த சூழ்நிலையில் ஆதரவாக தங்களிடம் பேசும் அறியாதவர்களிடமும் தங்களுடைய மனம் விட்டு பேச தோன்றும், இது கணவனுக்கும் மனைவிக்கும் மிகப்பெரிய பிரிவினை ஏற்படுத்த சக்தி உடையது என்பதை அறியாமலேயே அவர்கள் அதை செய்து விடுவார்கள்.
உடலுறவின் மீதான ஆசை அதிகரித்தும் அது கிடைக்காத பட்சத்தில், அடல்ட் வீடியோக்களை பார்க்கும் பழக்கமும் அதிகமாகிவிடும் என்கிறார்கள் நிபுணர்கள். ஒரு கட்டத்தில் திருமணத்தில் கிடைக்காத இன்பங்களை திருமணம் தாண்டிய உறவுகளின் மூலம் திருப்திபடுத்திக்கொள்ள முயல்வார்கள் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
திருமண உறவில் தம்பதிகள் செய்யும் தவறுகள் இவை தான்.. எப்படி ரொமாண்டிக் உறவாக மாற்றுவது?