போதிய இடைவெளியில் தம்பதிகள் வைத்துக்கொள்ளும் உடலுறவு என்பது அவர்களுடைய உடலுக்கும் மனதிற்கும் நல்ல பல விஷயங்களை செய்ய வல்லது என்பதை நாம் அறிவோம். அது குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம்.
உடலுறவு என்பது பல நன்மைகளை கொடுக்க வல்லது, இந்நிலையில் இந்த பதிவில் குறிப்பாக ஆண்களுக்கு உடலுறவு மூலம் ஏற்படும் சில நன்மைகளை குறித்து விரிவாக காணலாம்.
மன அழுத்தம் குறையும்
போதிய இடைவெளியில் உடலுறவு கொள்ளும் ஆண்களுக்கு பெரிய அளவில் மன அழுத்தம் ஏற்படுவதில்லை என்று அமெரிக்காவின் உளவியல் சங்கம் அண்மையில் வெளியிட்ட ஒரு ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளது. மன அழுத்தத்தையும் சோர்வையும் ஒரு நல்ல உடலுறவு குறைக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.
ஆண்களுக்கு பிறப்புறுப்பு வலுப்பெறுகிறது
சரியான இடைவெளியில் உடலுறவு கொள்ளும் ஆண்களுக்கு, அவர்களுடைய பிறப்புறுப்பு பலமானதாக மாறுகிறது என்கிறது அமெரிக்காவின் ஜெர்னல் ஆஃப் மெடிசின்ஸ் வெளியிட்ட ஒரு ஆய்வு. அதிலும் குறிப்பாக 40 வயதை ஆண்கள் கடக்கும் பொழுது அவர்கள் வைத்துக் கொள்ளும் உடலுறவு அவர்களுடைய பிறப்புறுப்பை பெரிய அளவில் வலுப்படுத்துவதாக கூறப்படுகிறது.
தூக்கம்
பொதுவாக பகலில் கடுமையான வேலைகளை செய்யும் ஆண்களுக்கு இரவில் இயல்பாகவே நல்ல தூக்கம் வரும். இருப்பினும் தற்பொழுது முழுவதுமாக இயந்திர மயமாகிவிட்ட உலகத்தில், ஆண்களுக்கு உடல் ரீதியான வேலை என்பது பெரிய அளவில் குறைந்துவிட்டது. இதன் காரணமாக ஆண்கள் அவ்வப்பொழுது தங்கள் துணையுடன் வைத்துக் கொள்ளும் உடலுறவு என்பது அவர்களுக்கு நல்ல தூக்கத்தை தர வல்லது என்று கூறப்படுகிறது.
உடலுறவின் போது வலி அதிகம் வந்தால் 'இந்த" ட்ரிக்கை ட்ரை பண்ணுங்க..!!