உடலுறவின் போது தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது நல்லதா? இல்லை மோசமானதா? நிபுணர்கள் சொல்வதென்ன?

By Ansgar R  |  First Published Jan 11, 2024, 11:58 PM IST

Coconut Oil : உடலுறவுகொள்ளும் நேரத்தில் தேங்காய் எண்ணெயை லூப்ரிகண்டாக பயன்படுத்துபவர்களும் உண்டு. மேலும் பாலியல் செயல்பாடுகளின் போது இதை பயன்படுத்துவது நல்லதா? இல்லையா? என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.


உடலுறவின் போது லூப்ரிகேட் முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்காக சந்தையில் ஏராளமான லூப்ரிகண்டுகள் கிடைக்கின்றன. இருப்பினும், பலர் இயற்கையான லூப்ரிகண்டுகளை மட்டுமே பயன்படுத்துகின்றனர். இவற்றில் தேங்காய் எண்ணெய் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் உடலுறவுக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது பாதுகாப்பானதா? என்பதை அறிவது மிகவும் முக்கியம்.

லூப்ரிகேஷன் ஏன் முக்கியமானது?

Latest Videos

undefined

குறிப்பாக உடலுறவின் போது லூப்ரிகேஷன் மிகவும் முக்கியமானது. பலர் லூப்ரிகேஷன் இல்லாமல் உடலுறவில் ஈடுபடுகிறார்கள். இதன் காரணமாக ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் வலியை அனுபவிக்க நேரிடலாம். மேலும் பிறப்புறுப்பில் வெட்டுக்களையும் ஏற்பட வாய்ப்பளிக்கிறது. மேலும், உடலுறவின் போது ஏற்படும் அதிகப்படியான உராய்வு காரணமாக, மற்ற பிரச்சனைகளும் ஏற்படலாம். எனவே லூப்ரிகண்டை ஒருபோதும் தவிர்க்காதீர்கள். இது உங்கள் பாலியல் இன்பத்தையும் அதிகரிக்கிறது.

உடலுறவுக்குப் பிறகு பிறப்புறுப்பு வீக்கத்திற்கு இதுதான் காரணம்.. முழுவிவரம் இதோ!

தேங்காய் எண்ணெயை லூப்ரிகண்டாக பயன்படுத்துவது பாதுகாப்பானதா?

தேங்காய் எண்ணெயை பாலியல் லூப்ரிகண்டாக பயன்படுத்தலாம். மேலும் நீங்கள் பிறப்புறுப்பு வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்தால்.. கண்டிப்பாக தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துங்கள். இதன் ஈரப்பதமூட்டும் பண்புகள் பெண்ணுறுப்பு வறட்சியைக் குறைக்கின்றன. இது ஈரப்பதத்தை பராமரிக்கவும் உதவுகிறது. தேங்காய் எண்ணெய் உடலுறவை மென்மையாக்குகிறது. நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபடுவதும் பயனுள்ளதாக இருக்கும்.

குறிப்பாக நீங்கள் மாதவிடாய் காலத்தில் இருந்தால், தேங்காய் எண்ணெய் உங்கள் செக்ஸ் வாழ்க்கையை மிகவும் சுவாரஸ்யமாக்கும். சந்தையில் கிடைக்கும் லூப்ரிகண்டுகளில், பல ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இது ஒவ்வாமை மற்றும் சில எதிர்வினைகளை ஏற்படுத்துகிறது. அதனால் தான் தேங்காய் எண்ணெய் போன்ற இயற்கை மாற்றுகள் உங்களுக்கு நன்மை பயக்கும்.

மாதவிடாய் நெருங்கும்போது பெண்களுக்கு செக்ஸ் டிரைவ் அதிகரிப்பதற்கு என்ன காரணம் தெரியுமா..?

click me!