Latest Videos

உங்கள் உறவை பலப்படுத்த என்ன செய்யணும்? தவறாமல் இதை கடைபிடிக்கனும் - நிபுணர்கள் அட்வைஸ் இதோ!

By Ansgar RFirst Published Jan 14, 2024, 11:58 PM IST
Highlights

Tips to be more romantic with partner : உங்கள் வாழ்கை துணையுடன் நீங்கள் அதிக ரொமாண்டிக்காக இருக்க என்ன செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

ஒரு உறவில் நுழைந்த பிறகு, நீங்கள் ஒருவருக்கொருவர் பல விஷயங்களைச் செய்துகொள்ள வேண்டும். ஏனெனில் இவை உங்கள் உறவை முறியாமல் காப்பாற்றும். மேலும் அது உங்கள் இருவருக்கும் இடையே அன்பை அதிகரிக்கும். உங்கள் திருமண வாழ்க்கையை இனிமையாக்கும். ஆனால் இப்போதெல்லாம் பல தம்பதிகள் பிஸியான வாழ்க்கை முறையால் ஒருவருக்கொருவர் நேரத்தை ஒதுக்க முடியாமல் தவிக்கின்றனர். 

இதனால் இருவருக்கும் இடையே உள்ள தூரம் அதிகரிக்கிறது, தொடர்பு குறைகிறது, அது இது நாளடைவில் அவர்களுக்குள் சண்டையை உண்டாக்கும். அதனால் தான் எவ்வளவு பிஸியாக இருந்தாலும்.. உங்கள் துணைக்காக சில விஷயங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும். இவை உங்கள் பந்தத்தை வலுவாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், மேலும் மேலும் ரொமான்டிக்காகவும் உதவும். சரி அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

பாலியல் ஆசை அதிகரிக்க இந்த ஒரு மூலிகை போதும்...இது ஆண்களுக்கு ஒரு வரபிரசாதம்!

சில ஆண்கள் தங்கள் பிஸியான வாழ்க்கை முறையால் என்ன சாப்பிடுகிறார்கள் என்று கூட கவனிப்பதில்லை. ஆனால் மனைவிகள் தங்கள் கணவருக்குப் பலவகையான உணவுகளை அவர்கள் விரும்பியபடி சமைப்பார்கள். இந்த நேரத்தில் நீங்கள் நிச்சயமாக அவர்களை பாராட்ட வேண்டும். சின்ன விஷயமாக இருந்தாலும்.. இது அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. 

இன்றைய காலத்தில் பல தம்பதிகள் ஒருவருக்கொருவர் சரியாகப் பேசுவதைக் கூட நிறுத்திவிட்டனர். ஆனால் உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க, நீங்கள் ஒருவருக்கொருவர் தரமான நேரத்தை செலவிட வேண்டும். நீங்கள் இருவரும் ஒன்றாக இருக்க வேண்டிய தேதிகள் அல்லது நிகழ்வுகளை திட்டமிடுங்கள். 

இது உங்கள் இருவரையும் மேலும் இணைக்கும் உணர்வை ஏற்படுத்தும். அது இரவு நேர உணவோ, நடைப்பயிற்சியோ அல்லது வார இறுதி விடுமுறை என எதுவாக இருந்தாலும், ஒருவருக்கொருவர் நேரத்தை செலவிடுவது உங்கள் மனதை மேன்மைப்படுத்தும், அதே போல உங்கள் செக்ஸ் வாழ்க்கையையும் மேம்படுத்தும். 

நீங்கள் உங்கள் துணைக்கு கொடுக்கும் Surpriseகள் உங்களுக்கிடையில் உள்ள தூரத்தைக் குறைக்கிறது. உங்களுக்கிடையில் அன்பை அதிகரிக்க செய்கின்றது. அது பெரியதோ அல்லது சிறியதோ உண்மையில் Surpriseகள் உங்கள் உறவை மேலும் உற்சாகப்படுத்தும். இதைச் செய்வது உங்கள் துணையைப் பற்றி நீங்கள் சிந்திக்கிறீர்கள் என்பதையும், உங்கள் வாழ்க்கையில் அவர்களைப் பெற்றதில் மகிழ்ச்சியாக இருப்பதையும் காட்டுகிறது.

உங்கள் உறவு என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதற்கான அறிகுறிகள் இவை தான்..

click me!