முகத்தில் கரும்புள்ளி அசிங்கமா இருக்கா...? இந்த வீட்டு வைத்தியமே போதும்...!

By thenmozhi gFirst Published Sep 1, 2018, 3:34 PM IST
Highlights

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நம் அழகை வெகுவாக குறைக்கும். இதனை போக்க பலரும் மருத்துவமனை சென்று சில பல சிகிச்சை மேற்கொள்கின்றனர்.
 

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நம் அழகை வெகுவாக குறைக்கும். இதனை போக்க பலரும் மருத்துவமனை சென்று சில பல சிகிச்சை மேற்கொள்கின்றனர்.

ஒரு சிலருக்கு முகத்தில் கருப்பு அல்லது வெள்ளை நிறத்தில் சிறிய திரு குறு போன்று முகத்தின் தோன்றும். இதனால் முக அழகு பாதிக்கும். இது போன்ற பிரச்சனை, முகத்தில் அதிக எண்ணெய்  சுரப்பதால், ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதற்கு என்ன தீர்வு என்பதை பார்க்கலாம்..

பட்டை மற்றும் தேன் இவை இரண்டும் கலந்த கலவையை, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர, விரைவில் அந்த கரும்புள்ளிகள் நீங்கும். 

செய்முறை :

1 டேபிள் ஸ்பூன் பட்டை பொடியுடன் தேனை கலந்து பேஸ்ட் போல செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் இரவில் அப்ளை செய்து காலையில் மிதமான சூடுள்ள நீரில் கழுவி விட வேண்டும்.

ஓட்ஸ் பொடி ஒரு டேபிள் ஸ்பூன், சம அளவு தேன் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

இதேபோன்று, கிரீன் டீ இலையை நீரில் கலந்து, கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து கழுவ வேண்டும். இதனை தினமும் 2 முறை செய்து வந்தால், சருமத்தின் மென்மைத்தன்மை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் சில வழிகள்: 

1 டேபிள் ஸ்பூன் உப்பை சிறிய அளவு  நீரில் கலந்து நன்கு கரைந்த பின், கடலை மாவு சேர்த்து பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி நன்கு உலர்ந்த பின், வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இது போன்ற, பல முறைகளை நடைமுறைப்படுத்தி, கரும்புள்ளிகளை நீக்கலாம். 

click me!