உங்களுடைய பாலியல் வாழ்க்கையில் துன்பம் நீங்கி இன்பம் பெருகிட இயற்கையான முறையில் வழிமுறைகள் உள்ளன. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
முதுமை உங்களுடைய வலிமையை மட்டுமல்ல, வேட்க்கையையும் மாற்றுகிறது. வயது முதிர்ந்த பலர், தங்களுடைய உணவுத் தேவையை குறைத்துக்கொள்ள துவங்குவர். இதனால் அவர்களுடைய செக்ஸ் டிரைவும் குறையத் தொடங்கும். இதை தெரியாமல், தங்களுடைய பாலியல் வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுவிட்டதாக எண்ணி வருந்துவர். முதுமையின் காரணமாக உங்களது பாலியல் வேட்கை குறைகிறது என்பது உண்மை தான். அது இயற்கையான நிகழ்வும் கூட. ஆனால் உங்களுடைய துணைக்கு, இன்னும் அத்தகைய பக்குவம் வரவில்லை என்றால், பாலியல் வாழ்க்கை இன்புற்று இருக்க வேண்டும் என்பது தான் ஒரே வழி. அப்போது உடலுறவு மூலமாக துணையை திருப்திப்படுத்த முடியாத நிலை ஏற்படும், இதனால் தனது பாலியல் வாழ்க்கை கசந்துவிட்டதாக எண்ணி வருத்தம் அதிகரிக்கும். எனினும், உங்களுடைய பாலியல் வேட்கையை அதிகரிக்க இயற்கையான முறையில் சில தீர்வுகள் உள்ளன. அதுகுறித்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
க்ரீன் டீ
க்ரீன் டீ என்பது உடல் எடையைக் குறைக்கும் ஒரு பானம் மட்டுமல்ல, உங்கள் பாலியல் ஆசையையும் புதுப்பிக்கச் செய்யும் அற்புதமான பதார்த்தமும் கூட. கிரீன் டீயில் கேடசின்கள் எனப்படும் சேர்மங்கள் உள்ளன. இது உடலின் உறுப்புகளுக்கு ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. இதன்மூலம் செக்ஸ் டிரைவ் அதிகரிக்கிறது.
கருப்பு காப்பி
காபி என்பது மனநிலையை மேம்படுத்தும் பானமாக உள்ளது. காபியின் சுவையை பிடிக்காதவர்கள் கூட, அதனுடைய அற்புதமான மணத்தை அனுபவிக்காமல் இருக்க முடியாது. காபி என்பது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் செக்ஸ் டிரைவிற்கு நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த 2015-ம் ஆண்டு டெக்சாஸ் பல்கலைக்கழக சுகாதார அறிவியல் மையத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், தினமும் காபி சாப்பிடும் ஆண்களுக்கு, விறைப்புத்தன்மை குறைவதற்கான ஆபத்து மிகவும் குறைவு என்று தெரியவந்துள்ளது.
வாழைப்பழம் ஷேக்
ஆரோக்கியமான மற்றும் சுவை மிகுந்த வாழைப்பழத்தில் ஷேக் செய்து குடித்தால், அவ்வளவு மதுரமாக இருக்கும். இது உடலுக்கு வலிமையை கொடுப்பதை விடவும், செக்ஸ் உந்துதலை அதிகரிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. வாழைப்பழத்தில் ப்ரோமெலைன் என்சைம் உள்ளது, இது ஆண்களுக்கு லிபிடோ மற்றும் டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்கிறது. ஆண்மைக் குறைபாடு கொண்டவர்கள், தினசரி வாழைப்பழத்தை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
மாதுளைப் பழச்சாறு
மாதுளை சாறு இரு பாலினருக்கும் பாலியல் ஹார்மோன்களை அதிகரிப்பதில் முதன்மை வகிக்கிறது. இதுதொடர்பாக அமெரிக்காவில் உள்ள பெவர்லி ஹில்ஸ் கிளினிக்கில் நடத்தப்பட்ட ஆய்வில், மாதுளை சாறு உட்கொள்வது பாலியல் உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் தயவு செய்து மாதுளைப் பழங்களை வாங்கி வந்து சாறுப் பிழிந்து அருந்துங்கள். தயவுசெய்து பேக் செய்யப்பட்ட மாதுளைப் பழச்சாறுகளை அருந்தவேண்டாம்.
ரெட் வைன் (தேறல்)
ஆங்கிலத்தில் wine என்பதற்கு தமிழில் தேறல் என்று பொருள். மது பிரியர்களுக்கு மதுவை ரசிக்க எந்தவொரு காரணம் தேவையில்லை. அதில் கொண்டாடக் கூடிய மது வகைகளில் ஒன்று ரெட் வைன். இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாலியல் தூண்டுதலை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இரண்டு கிளாஸ் ரெட் ஒயின் உட்கொள்வது பெண்களின் செக்ஸ் டிரைவை அதிகரிக்கிறது. ஆண்களில், சிவப்பு ஒயின் டெஸ்டோஸ்டிரோனை அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் ரெட் வைனை அளவுடன் பருவதில் தான் நன்மை கிடைக்கிறது.