Condom Mistakes : ஆண்கள் ஆணுறைகளை பயன்படுத்தும் போது செய்யும் பொதுவான தவறுகள் என்னென்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
ஆணுறைகள் கர்ப்பத்தை தடுக்கும் மற்றும் பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுக்களின் அபாயத்தை குறைப்பதற்கான சிறந்த முறைகளில் ஒன்றாகும். ஆனால், பெரும்பாலான ஆண்கள் ஆணுறைகளை சரியாக பயன்படுத்துவதில்லை. இதனால் தேவையற்ற கர்ப்பத்தின் வாய்ப்புகள் அதிகரிக்கும் மேலும் இது பல பாக்டீரியாக்கள்ர்கள் மற்றும் வைரஸ்களுக்கு வழிவகுக்கும். எனவே, ஆண்கள் ஆணுறைகளை பயன்படுத்தும் போது செய்யும் பொதுவான தவறுகள் என்னென்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
ஆணுறை பயன்படுத்தும் போது ஆண்கள் செய்யும் பொதுவான தவறுகள் இவையே
1. காலாவதி தேதி:
பிற அழிந்து போகக்கூடிய பொருட்களைப் போலவே ஆணுறைகளும் காலாவதியாகிவிட்டால் சேதமடையும். ஒவ்வொரு ஆணுறைக்கும் ஒரு காலாவதி தேதி உண்டு. ஆனால் இதை ஆண்கள் பார்க்க கூட தவறிவிடுகிறார்கள். காலாவதியான ஆணுறைகளை பயன்படுத்தும் போது அது உடைவதற்கு வழிவகுக்கும். இதனால் கர்ப்பத்திற்கான வாய்ப்புகள் அதிகரிப்பது மட்டுமில்லாமல், தொற்று நோய்களும் வழிவகுக்கும். எனவே, ஆணுறைகளை வாங்குவதற்கு முன் அதன் உற்பத்தி மற்றும் காலாவதி தேதியை கண்டிப்பாக சரி பாருங்கள். மேலும் ஆணுறை காலாவதியாகும் என்பதால் அவற்றை ஒருபோதும் சேமித்து வைக்காதீர்கள்.
2. சீக்கிரமே போடுவது:
ஆணுறையை எப்போது போட வேண்டும் என்பதை ஆண்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது, உங்களது ஆணுறுப்பு நிமிர்வதற்கு முன் நீங்கள் ஆணுறையை அணியக்கூடாது. மேலும் விறப்பு தன்மை அடைவதற்கு முன்னும் அதை அணிந்தால், நீங்கள் அதை சரியாக அணியாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும். இதனால் தொற்றுகள் மற்றும் கர்ப்பத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
இதையும் படிங்க: ஆணுறை பயன்படுத்தியும் பிறப்புறுப்பில் தொற்று ஏற்படுகிறதா? அதற்கு காரணம் என்ன தெரியுமா?
3. ஆணுறை அளவு:
இப்போது ஆணுறைகள் எல்லா அளவுகளிலும் வருகின்றது. எனவே, நீங்கள் அதை ரொம்பவே இறுக்கமாகவோ அல்லது மிகவும் தளர்வாகவோ அணிந்தால், அது பெரிய பேரழிவுகளுக்கு வழிவகுக்கும் என்பதே நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எப்படியெனில், நீங்கள் ரொம்பவே இருக்குமான ஆணுறையை அணிந்தால் அது உடைந்து அல்லது சேதமடைய வாய்ப்பு உண்டு. அதுபோல, மிகவும் தளர்வாக இருக்கும் ஆணுறையை நீங்கள் அணிந்தால் அது தன் வேலையை செய்ய தவறினால் எளிதில் நழுவி விடும்.
இதையும் படிங்க: ஆணுறை பயன்படுத்தாவிட்டால் எத்தனை பிரச்சனைகள் வரும் தெரியுமா? மருத்துவர்கள் சொல்லும் பகீர் தகவல்!
4.ஆணுறையை மீண்டும் பயன்படுத்தாதே!
சில ஆண்கள் ஏற்கனவே பயன்படுத்திய ஆணுறையை மீண்டும் பயன்படுத்திகிறார்கள். ஆனால், இப்படி பயன்படுத்துவது தவறு. பொதுவாக, ஒரு ஆணுறையை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதை பலமுறை பயன்படுத்தக் கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் மீண்டும் மீண்டும் ஒரே ஆணுறையை பயன்படுத்தினால், அது சேதமடையும். குறிப்பாக, விந்து வெளியேறிய உடனே, ஒவ்வொரு ஆணுறையையும் அப்புறப்படுத்துவது நல்லது.
5. விந்து வெளியேறிய உடனே அகற்றி விடுங்கள்:
விந்து வெளியேறிய பிறகு உடனே ஆணுறிய அகற்றுவது மிகவும் அவசியம் என்பது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மேலும் விறப்பு தேய்மானத்திற்கு பிறகு இது நிகழும். பொதுவாக ,பெரும்பாலான ஆண்கள் விந்து வெளியேறிய பிறகு விறைப்புத்தன்மையை இழக்கிறார்கள். இதனால் ஆணுறை நழுவி விந்து வெளியேறிவிடும். எனவே, இதை தடுக்க விந்து வெளியேறிய உடனே ஆணுறையை அகற்றுவது தான் நல்லது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D