திருமண வாழ்க்கையில் காதல் என்பது மிகவும் முக்கியமானது. இது கணவன் மற்றும் மனைவியின் பிணைப்பை பலப்படுத்துகிறது. ஆனால், அதே சமயம் உடல் உறவில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அது விவாகரத்துக்கு கூட வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உங்கள் செக்ஸ் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க, நீங்கள் சில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும்.
ஒருவருக்கொருவர் அவரவர் விருப்பங்களை அறிந்து அதன்படி நடந்தால் தான் செக்ஸ் வாழ்க்கை சீராகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். தம்பதிகளில் யாரேனும் தங்கள் விருப்பங்களை மட்டும் மனதில் கொண்டு செயல்பட்டால், திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். குறிப்பாக உங்கள் துணை அவர்களின் விருப்பத்திற்கு எதிராக இருந்தால், அவர்களுக்கு செக்ஸ் மீதான ஆர்வம் வெகுவாக குறையும்.
சரி ஆண்களும் பெண்களும் எதை தவிர்க்க வேண்டும்.
உடலுறவுகொள்ளும் முறை
பாலியல் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பல காரணங்கள் உள்ளன. உங்கள் செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக அமைய நீங்கள் இருவரும் சிறிய விஷயங்களில் கூட கவனம் செலுத்த வேண்டும். படுக்கையறையில் நீங்கள் செய்யும் தவறுகள் உங்கள் திருமண வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் என்பதை உணரவேண்டும். ஆகவே இருவர் மனதிற்கும் ஒத்துப்போகும் வகையில் உடலுறவைகொள்ளவேண்டும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அறையில் வெளிச்சம்
பொதுவாக பெண்களுக்கு படுக்கையறையில் வெளிச்சம் இருப்பது பிடிக்காது. குறிப்பாக பல பெண்கள் இருட்டில் உடலுறவுகொள்ள விரும்புகிறார்கள் என்கிறது ஆய்வு. எனவே உங்கள் மனைவிக்கு வெளிச்சம் பிடிக்குமா என்று தெரிந்து கொள்ளுங்கள். இதில் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக உடலுறவு கொண்டால், உங்களுக்குள் சண்டைகள் வரலாம்.
முத்தைய வாழ்கை பற்றி பேசுவது
உங்கள் கனவுனுக்கோ, அல்லது மனைவிக்கோ, திருமணத்திற்கு முன்பாக வேறொரு காதல் வாழ்கை இருந்திருக்கலாம். கண்டிப்பாக அதை பற்றி பேசுவதற்கு உடலுறவுகொள்ளும் நேரம் ஏற்புடையது அல்ல. அவர்கள் மனம் புண்படாதவாறு செயல்படுவதே சிறந்தது.