செக்ஸ் வாழ்க்கை சலிப்பாக இருக்கா? அப்போ இவற்றை முயற்சித்து பாருங்கள் - Experts அட்வைஸ் இதோ!

By Asianet Tamil  |  First Published Oct 22, 2023, 11:59 PM IST

வேகமாக ஓடும் இந்த நவநாகரீக உலகத்தில், பலர் இளம் வயதிலேயே பாலியல் ஆசையை இழக்கத் தொடங்குகிறார்கள். ஆனால் சில டிப்ஸ்களை பின்பற்றினால் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்கின்றனர் நிபுணர்கள். அவை என்ன?


உடலை வலுவாக வைத்துக்கொள்ள உணவுகள்

உடலுறவின் போது வலு இல்லாததால் எரிச்சல், கோபம் மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். நீண்ட காலமாக உடலுறவில் ஈடுபட, வலுவான உடலை அமைப்பை நீங்கள் உருவாக்கிக்கொள்ளலாம். உண்மையில், உடலில் ஏற்படும் மாற்றங்களால் தான், பாலியல் திறன் குறைகிறது. வாழ்க்கை முறை மாற்றங்கள், தாமதமாக எழுவது, உடல் செயல்பாடு இல்லாதது போன்றவை பாலியல் செயல்திறனைக் குறைக்கும். ஆகவே எப்போதும் சத்தான உணவுகளை உண்ணுங்கள்.

Tap to resize

Latest Videos

ஸ்டார்ட் ஸ்டாப் டெக்னிக்

இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் யூரோலஜி அளித்த தகவலின்படி, நீங்கள் நீண்ட நேரத்திற்கு உடலுறவு கொள்ள விரும்பினால் இந்த நுட்பத்தைப் பயன்படுத்தவும். ஸ்டார்ட்-ஸ்டாப் நுட்பம் என்பது விந்து வெளியேறும் போது பாலியல் செயல்பாடுகளை நிறுத்துவதை சுட்டிக்காட்டுகிறது. பின்னர் ஆழ்ந்து மூச்சு விடுங்கள், பிறகு மீண்டும் பாலுறவில் ஈடுபடுங்கள். இதில் விந்து வெளியேறுவதை தவிர்க்க வேண்டும். இது உடலின் பாலியல் திறனை அதிகரிக்கிறதாம். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D 

ஒரு புதிய செக்ஸ் போசிசன் 

உடலுறவில் புதியவற்றை அனுபவிக்க புதிய positionsகளை முயற்சிக்கவும். இது செக்ஸ் வாழ்வில் சுகத்தை அதிகரிக்கிறது. இதனுடன், பசியின்மையும் அதிகரிக்கிறது. ஒரு புதிய பாலியல் அனுபவத்திற்காக உங்கள் துணையுடன் ஆரோக்கியமான உரையாடலை மேற்கொள்ளுங்கள், அது மிகவும் நல்லது.

உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது

உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், உடற்பயிற்சி உங்கள் செக்ஸ் ஸ்டாமினாவையும் அதிகரிக்கிறது. உடற்பயிற்சியைத் தவிர, உங்களுக்குப் பிடித்த விளையாட்டுகளையும் நீங்கள் விளையாடலாம், இது கவலைகளை கூட குறைக்கும். இதனுடன், உடலில் இரத்த ஓட்டமும் அதிகரிக்கிறது. இது உடலுறவின் போது உற்சாகம் மற்றும் ஊக்கத்திற்கு உதவுகிறது.

பெண்கள் வயகரா சாப்பிட்டால் என்ன நடக்கும்? பெண்களுக்கு என்று தனியாக வயகரா உள்ளதா?மருத்துவர்கள் தரும் தகவல்!

click me!