Drink Milk On Empty Stomach : பால் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால் அதை வெறும் வயிற்றில் குடிப்பது நல்லதா கெட்டதா? என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
பால் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள், கால்சியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளும் உள்ளன. இது தசைகளை பலப்படுத்துகிறது. சிலர் காலையிலும் இன்னும் சிலரோ இரவு தூங்கச் செல்வதற்கு முன் பால் குடிக்க விரும்புகிறார்கள். ஆனால், எல்லாருக்கும் பால் குறித்து ஒரு பொதுவான கேள்வி உண்டு. அதாவது வெறும் வயிற்றில் பால் குடிக்கலாமா இல்லையா? என்பதுதான். அப்படி குடித்தால் என்ன ஆகும். எனவே, இன்றைய கட்டுரையில் வெறும் வயிற்றில் பால் குடிக்கலாமா? பால் குடிக்க சரியான நேரம் எது என்பதை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
பால் எப்போது குடிக்கலாம்:
பாலில் உள்ள வைட்டமின் டி மூளை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பகல் அல்லது இரவு நேரத்தில் பால் குடிப்பது என்பது ஒருவரது தனிப்பட்ட விருப்பம். உங்களுக்கும் எப்போது பால் குடிப்பது என்ற குழப்பம் இருந்தால் இதோ சில தகவல்கள்..
காலையில் பால் குடித்தால் கிடைக்கும் நன்மை என்ன?
காலையில் பால் குடித்தால் செரிமானம் ஆரோக்கியம் மேம்படும், பலவீனமான எலும்புகளுக்கு இது ரொம்பவே நல்லது. மேலும், தசைகளும் வலுவடையும். எனவே, காலையில் பால் குடிப்பது மிகவும் நல்லது.
இதையும் படிங்க: தினமும் ஒரு கிளாஸ் மஞ்சள் பால் குடிங்க.. 'இந்த' அற்புதமான பலன்கள் கிடைக்கும்...!
காலையில் பால் குடித்தால் ஏற்படும் தீமைகள்:
லாக்டோ சகிப்பு தன்மை உள்ளவர்கள் காலையில் பால் குடித்தால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாயு பிரச்சனை போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.
இதையும் படிங்க: முதலிரவில் பால் குடிக்குறாங்களே அது எதுக்குனு தெரியுமா? இப்படி ஒரு விஷயம் இருக்குனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!
வெறும் வயிற்றில் பால் குடிக்கலாமா?
வெறும் வயிற்றில் பால் குடித்தால் வயிற்றில் எரிச்சல் மற்றும் அமிலத்தன்மை ஏற்படும். ஒருவேளை உங்களுக்கு வெறும் வயிற்றில் பால் குடிக்கும் பழக்கம் இருந்தால், உங்கள் வயிற்றில் அமிலத்தன்மை பிரச்சனை ஏற்படாமல் இருக்க, நீங்கள் சூடான பாலை குடிப்பதற்கு பதிலாக, குளிர்ந்த பாலை குடியுங்கள்.
பால் குடிக்க சரியான நேரம் எது?
காலை உணவுக்குப் பிறகு தான் பால் குடிக்க வேண்டும். அது உங்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். அதுபோல, குறைந்த கொழுப்பு நீக்கப்பட்ட பாலை குடியுங்கள். அது ஆரோக்கியத்திற்கு நல்லது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அல்லது இதய நோய் பிரச்சனை இருப்பவர்கள் வெறும் வயிற்றில் எக்காரணம் கொண்டும் பால் குடிக்கவே கூடாது. இரவில் தூங்குவதற்கு முன் பால் குடித்தால் நல்ல தூக்கம் வரும். மேலும், சூடான பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் கலந்து குடித்தால் ஆரோக்கியமும் மேம்படும்..
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D