Beetroot benefits: பீட்ரூட் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் 5 ஆரோக்கிய நன்மைகள்.... நீரழிவு நோய்க்கு உகந்ததா..?

Anija Kannan   | Asianet News
Published : Jun 19, 2022, 01:13 PM IST
Beetroot benefits: பீட்ரூட் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் 5 ஆரோக்கிய நன்மைகள்.... நீரழிவு நோய்க்கு உகந்ததா..?

சுருக்கம்

beetroot benefits: ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் நம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இது சளியை அகற்ற உதவுகிறது. இரும்புச்சத்து நிறைந்த பீட்ரூட் ஹீமோகுளோபினை அதிகரிக்கவும் உதவுகிறது.

பீட்ரூட் ஒரு அற்புதமான காய்கறி ஆகும். இதில், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளதால் இது உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.இது சாலட் மற்றும் ஜூஸ் வடிவிலும் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.எனவே, பீட்ரூட்டை பயன்படுத்தி விதவிதமாக என்ன மாதிரியான  உணவை மேற்கொள்ளலாம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம்..

பீட்ரூட் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:

சர்க்கரை நோய் பிரச்சனை:

நீரிழிவு நோய் இந்தியாவில் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறியுள்ளது. இது சிறுநீரகம் மற்றும் இதயம் போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கிறது.ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பீட்ரூட்டை சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோயால் ஏற்படும் பிரச்சனைகள் குறையும்.

உயர் இரத்த அழுத்தம் பிரச்சனை:

நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் பாதிக்கப்படுவார்கள். பீட்ரூட் சாப்பிடுவதால், அல்லது அதன் சாற்றை குடிப்பதால் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்.

வயிற்று பிரச்சனைகளுக்கு நிவாரணம்: 

நீரிழிவு நோயாளிகள் உணவுக்கு முன் பீட்ரூட்டை சாப்பிடலாம். அப்படி சாப்பிடுவதால் உடலுக்கு இயற்கையான சர்க்கரை கிடைப்பது மட்டுமல்லாமல், செரிமான அமைப்பும் சிறப்பாக இருக்கும். அதுமட்டுமின்றி, சிறுநீரகம், பித்தப்பை, கல்லீரல் போன்ற உடலின் உள்ளுறுப்புகளில் இருக்கும் நச்சுக்களை நீக்குவதற்கும் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி சுத்தப்படுத்தவும் பீட்ரூட் ஜூஸ் மிகச் சிறந்த தீர்வாக இருக்கும்.

மேலும் படிக்க....Summer Tips: கோடை காலத்தில் முடி அதிகமாக முடி கொட்டுதா..? கட்டுப்படுத்த பின்பற்ற வேண்டிய குறிப்புகள்..


 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

Liver Side Effects : கோழி, ஆட்டு ஈரல் ரொம்ப ருசிதான் - இவங்க தவிர்க்கனும்?
பாம்புகளை வரவிடாமல் தடுக்க சிறந்த வழிகள்