ஆணுறை பயன்படுத்தியும் பிறப்புறுப்பில் தொற்று ஏற்படுகிறதா? அதற்கு காரணம் என்ன தெரியுமா?

By Ansgar R  |  First Published Oct 30, 2023, 10:46 PM IST

சில பெண்களுக்கு, அவர்களுடைய துணை ஆணுறைகளைப் பயன்படுத்தும்போது கூட பிறப்புறுப்பில் தொற்று ஏற்படுகிறது. ஆனால் இதற்குக் காரணம் அவர்களின் துணை பயன்படுத்தும் Flavored ஆணுறைகள் தான் என்கிறார்கள் நிபுணர்கள். 


ஆம் Flavored ஆணுறைகளைப் பயன்படுத்துவதால் பிறப்புறுப்பில் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் பல மடங்கு அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆணுறை பயன்பாடு மிகவும் பாதுகாப்பானது மற்றும் பல பாலியல் ரிதியாக பரவும் நோய்களிலிருந்து மனிதர்களை பாதுகாக்கிறது என்பது உண்மைதான். ஆனால் சிலர் Flavored ஆணுறைகளையும் பயன்படுத்துகின்றனர். 

ஆனால் இவற்றைப் பயன்படுத்தி உடலுறவு கொள்வது தொற்று அபாயத்தை அதிகரிக்கிறது. சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி.. Flavored ஆணுறைகளை பயன்படுத்தவே கூடாது. ஏனெனில் அவை தொற்று நோய்களை உண்டாக்கும் என்று கூறுகின்றார்.

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

ஆணுறை ஏன் பயன்படுத்த வேண்டும்?

பாதுகாப்பான உடலுறவுக்கு ஆணுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை பாலியல் ரீதியாக பரவும் நோய்களில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. இது தேவையற்ற கர்ப்பத்தைத் தடுக்கவும் உதவுகிறது. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆணுறைகளை பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அவை கிழிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

Flavored ஆணுறை என்றால் என்ன?

நிபுணர்களின் கூற்றுப்படி, Flavored ஆணுறைகள் ஓரல் உடலுறவுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்படுகின்றன. மற்ற வகை உடலுறவுக்கு அந்த வகை ஆணுறைகள் பரிந்துரைக்கப்படுவதில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். Flavored ஆணுறைகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் எரிச்சலையும் தொற்றுநோயையும் ஏற்படுத்தும்.

உறவில் நெருக்கத்தையும் நம்பிக்கையையும் வளர்க்க உதவும் டிப்ஸ்.. தம்பதிகளே இதை முதல்ல படிங்க..

click me!