பலருக்கு பாலியல் ஆரோக்கியம் பற்றிய பெரிய தெளிவு இல்லை என்றே கூறலாம், பலர் அதை குறித்து அறிய முயலுவதில்லை என்றும் கூட சொல்லலாம். மேலும், சுயஇன்பம் ஒரு பாவச் செயல் என்று நினைக்கும் மக்கள் அதைப் பற்றி நிறைய தவறான எண்ணங்களைக் கொண்டுள்ளனர்.
முதலில் சுயஇன்பம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம்
உடலுறுப்புகளைத் தொட்டு இன்பம் பெறுவதற்கான ஒரு வழி தான் சுயஇன்பம். ஒரு குற்றம் என்று நம்பப்படுகிறது. ஆனால் கட்டுப்படுத்தப்பட்ட சுயஇன்பம் உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். சுயஇன்பத்தின் போது உடலில் டோபமைன் மற்றும் எண்டோர்பின் ஹார்மோன்கள் உற்பத்தியாகின்றன. டோபமைன் உடலில் அதிகரிக்கும் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. இது மனநிலை மாற்றங்களின் சிக்கலை தீர்க்கிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
சுயஇன்பத்தால் முகப்பரு வருமா?
இளமை பருவத்தில் மோசமான உணவுப்பழக்கம் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக முகப்பரு ஏற்படுகிறது. சுயஇன்பத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சுயஇன்பம் தூக்கத்தை மேம்படுத்துகிறது. மன அழுத்தத்திலிருந்து உங்களை விலக்கி வைக்கிறது. சரியான முறையில் சுயஇன்பம் செய்தால் பிரச்சனையும் இல்லை, பாதிப்பும் இல்லை என்கின்றனர் நிபுணர்கள். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அனைத்துமே நஞ்சு தான்.
மாதவிடாய் காலத்தில் சுயஇன்பம்?
சுயஇன்பத்திற்கும் முகப்பருவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெரிந்ததே. சுயஇன்பம் செய்யும் போது தூய்மையின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளுங்கள். மாதவிடாய் காலத்தில் சுயஇன்பம் பாதுகாப்பானதா என்ற கேள்விக்கான பதில், நிபுணர்களின் கூற்றுப்படி, மாதவிடாய் காலத்தில் ஒருவர் சுயஇன்பத்தில் ஈடுபடலாம். ஆனால் தூய்மை முக்கியம். மாதவிடாய் கோப்பையைப் பயன்படுத்தினால் அதை அகற்ற மறக்காதீர்கள். சுயஇன்பம் செய்யும் போது பிறப்புறுப்பு ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்கிறார்கள் நிபுணர்கள்.
உங்கள் கண்களுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுங்க ப்ளீஸ்..!!