உடலுறவுக்குப் பிறகு இரத்த சர்க்கரை அளவு குறைகிறதா? ஏன் அப்படி நடக்கிறது? நிபுணர்கள் சொல்லும் உண்மை!

By Asianet Tamil  |  First Published Oct 31, 2023, 11:58 PM IST

உடலுறவுக்குப் பிறகு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு திடீரென குறைகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உடலுறவு ஏன் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது என்பதை இப்போது கண்டுபிடிப்போம்.


உடலுறவு இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது ஆச்சரியமாகத் தெரிந்தாலும், இது உண்மைதான் என்கின்றனர் நிபுணர்கள். உடலுறவு இரத்த சர்க்கரை அளவை பாதிக்கும் என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன, மேலும் இது நீரிழிவு நோயாளிகளுக்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இப்போது உடலுறவு இரத்த சர்க்கரை அளவை எவ்வாறு பாதிக்கிறது என்பதை பார்ப்போம்.

உடலுறவுக்கும் இரத்த சர்க்கரை அளவுக்கும் என்ன சம்பந்தம்?

Tap to resize

Latest Videos

உடலுறவு என்பது உடற்பயிற்சி போன்றது தான். ஜாகிங் அல்லது ஏரோபிக்ஸ் போலத்தான் இரத்த சர்க்கரை அளவை இது குறைக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். நிபுணர்களின் கூற்றுப்படி.. உடலுறவு என்பது உடல் செயல்பாடுகளின் ஒரு வடிவம். மற்ற உடல் செயல்பாடுகளைப் போலவே, இது உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது. உடல் செயல்பாடு மற்றும் உடற்பயிற்சியின் போது பயன்படுத்தப்படும் ஆற்றலின் முக்கிய ஆதாரமாக குளுக்கோஸ் உள்ளது. எனவே இந்த நேரத்தில் இரத்த சர்க்கரை குறைகிறது.

தூங்குவது முதல் அழுவது வரை : இந்த விசித்திர வேலைகளுக்கு லட்சக்கணக்கில் சம்பளமாம்..

நீரிழிவு உங்கள் பாலியல் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது?

பெண்களின் பிறப்புறுப்பு வறட்சி

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பலர், பெண்ணுறுப்பு வறட்சியால் பாதிக்கப்படுகின்றனர். பல ஆய்வுகளின்படி, நீரிழிவு பெண்ணுறுப்பு வறட்சிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. உயர் இரத்த சர்க்கரை அளவுகள் பெண்ணுறுப்பில் உள்ள இரத்த நாளங்களை சேதப்படுத்தி உலர வைக்கலாம். இதனால்தான் உடலுறவு வலியூட்டுகிறது. 

குறைந்த பாலுணர்வு

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பாலுறவு ஆசை குறைவது பொதுவானது. ஈரானிய மருத்துவ அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாலியல் செயலிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது. சர்க்கரை நோய்க்கான மருந்துகளை எப்போது எடுக்க வேண்டும் என்று மருத்துவரிடம் கேட்டு அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். 

மகிழ்ச்சியான திருமண உறவுக்கு உதவும் சில சீக்ரெட் டிப்ஸ் இதோ... தம்பதிகளே கண்டிப்பா ட்ரை பண்ணுங்க..

click me!