இன்றைய காலகட்டத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் உடலுறவு சம்மந்தமான பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். ஆனால் அந்த பிரச்சனையை போக்க ஆண்கள் வயாக்ராவை எடுத்துக்கொள்கிறார்கள், அது அவர்களுக்கு உதவுவதாக ஆராய்ச்சி நிரூபித்துள்ளது. ஆனால் 'பெண் வயாகரா' பெண்களுக்கு உதவுமா?
பெரும்பாலான பெண்கள் தங்கள் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் குறைந்த உடலுறவு மீதான ஈடுபாடு குறைவை எதிர்கொள்கின்றனர். கர்ப்பம், மன அழுத்தம், மாறிவரும் வாழ்க்கை முறை, பிரசவம் போன்ற பல காரணங்களால் அவர்களுக்கு உடலுறவு மீதான ஈடுபாடு குறைகிறது. பெண்களுக்கு வயதுக்கு ஏற்ப பாலுறவு ஆசை குறைவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உண்மையில், மோசமான உடல்நலம், வயது தொடர்பான அல்லது வேறு காரணங்களால் பாலியல் ஆசை சிறு வயதிலேயே குறைகிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. ஆனால் ஆண்கள் தங்கள் "செக்ஸ் டிரைவை" அதிகரிக்கவும், விறைப்புத்தன்மையை அதிகப்படுத்தவும் வாய்வழி மருந்தான வயாகராவை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் பெண்களுக்கு உதவும் வயாகராக்கள் ஏதேனும் உள்ளதா? இல்லையா? சரி இப்போது நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்..
வயாகரா பெண்களுக்கு உதவுமா?
வயாக்ராவை ஆண்கள் பயன்படுத்துகிறார்கள், இது அவர்களின் செக்ஸ் டிரைவை (உடலுறவு வேகம்) அதிகரிக்க உதவுகிறது. ஆனால் பெண்களில் இது எவ்வாறு செயல்படுகிறது என்பது விடை தெரியாத கேள்வியாகவே இன்றளவும் உள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, ஆண்களில் உள்ள வயாகரா இரத்த நாளங்களை விரிவுபடுத்துகிறது மற்றும் ஆண்குறிக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதன் விளைவாக, விறைப்புத்தன்மை அதிகரிக்கிறது. ஆனால் வயகரா ஆண்களின் பாலியல் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கம் கொண்டது.
அதனால்தான் குறைந்த செக்ஸ் டிரைவ் உள்ள பெண்களுக்கு வயாகரா எவ்வளவு நன்மை பயக்கும் என்பதை உறுதியாகக் கூற அதிக ஆராய்ச்சி தற்போது இல்லை. ஆனால் பிறப்புறுப்பு பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது வயகரா என்பது நிரூபணமான ஒன்று. இது உணர்திறன், மற்றும் உணர்ச்சிகளை மேம்படுத்துகிறது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் பெண்கள் வயாகராவை பயன்படுத்தினால் அதே உணர்திறன் கிடைப்பது கடினம் என்று தான் ஆய்வுகள் கூறுகின்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
பெண்களுக்கு என்று தனி வயாகராக்கள் உண்டா?
ஃபிளிபன்செரின் என்ற மருந்து பெரும்பாலும் 'பெண் வயாகரா' அல்லது 'பிங்க் மாத்திரை' என்று குறிப்பிடப்படுகிறது. பெண்களின் குறைந்த "செக்ஸ் டிரைவ்" பிரச்சனையை குறைக்க இது உதவுகிறது. 2015 ஆம் ஆண்டில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் இந்த மருந்து அங்கீகரிக்கப்பட்டது, இது மாதவிடாய் நிறுத்தத்தை நெருங்கும் பெண்களிடம் குறைந்த பாலியல் ஆர்வம் / மனக்கிளர்ச்சிக் கோளாறு (FSIAD) உள்ளிட்டவைக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது. ஆனால் இவற்றை முழுமையாக பெண் வயகரா என்று அழைக்கமுடியாது.
மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு 3 பொன் விதிகள்...மிஸ் பண்ணிடாதீங்க..!!