Galaxy black hole: பால்வெளி நடுவில் கருந்துளை...ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வானியலாளர்கள் முதல் புகைப்படம்!

By Anu Kan  |  First Published May 13, 2022, 2:17 PM IST

Galaxy black hole: பால்வெளியின் மத்தியில் மிகப்பெரிய கருத்துளை இருப்பதற்கான புகைப்படத்தை EHT வானியல் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். 


நமது  பால்வெளியின் மத்தியில்  பல்வேறு ஆச்சர்யமான விஷயங்கள் நிரம்பியுள்ளது.  தற்போது பால்வீதி விண்மீன் மண்டலத்தின் மத்தியில் மிகப்பெரிய கருத்துளை இருப்பதற்கான புகைப்படம் முதல் முறையாக வெர்லியாகியுள்ளது.

பால்வீதி விண்மீன்:

Tap to resize

Latest Videos

EHT என்பது உலகை சுற்றி அமைத்துள்ள 8 ரேடியோ டெலஸ் கோப்புகள் ஒன்றிணைந்த அமைப்பு, இந்த கருத்துளை சூரியனை விட சுமார் 40 லட்சம் மடங்கு பெரிதானது. தற்போது இந்த கருத்துளை சுமார் 27 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தள்ளி இருப்பதாகவும் வானியல் ஆய்வாளர்களால் விளக்கப்பட்டுள்ளது. 

பால்வெளியின் மத்தியில் மிகப்பெரிய கருத்துளை:

முன்னதாக, இதே குழு கடந்த 2019-ல் 53 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு விண்மீன் மண்டலத்திலிருந்து கருந்துளையின் படத்தை  வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து வானியலாளர்கள் கூறும்போது, நமது விண்மீன் திரள்கள் உட்பட அனைத்தும் அவற்றின் மையத்தில் மிகப்பெரிய அளவிலான கருந்துளைகளைக் கொண்டுள்ளன. இருப்பினும், அந்த கருந்துளைகளில் இருந்து ஒளி மற்றும் பொருட்கள் எதுவும் வெளியேற முடியாது. 

BIG BREAKING: First ever image of the black hole at the centre of our (Milky Way) galaxy! It’s called Sagittarius A* pic.twitter.com/fF49lkskbA

— Shiv Aroor (@ShivAroor)

மேலும் படிக்க..குருவின் பார்வையால் கஜகேசரி யோகம் பெறும் ராசிகள்...செல்வம் செழிக்கும், கோடி நன்மை இருக்கும்!12 ராசிகளின் பலன்!

click me!