Sex secret 25: கன்னித்தன்மை இழப்பு என்பது பெண்கள், ஆண்களுடன் முதல் முறை உடலுறவு கொள்ளும் போது நடக்கிறது.
ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் தங்கள் வாழ்வின் மிக முக்கிய தினங்களில் அவர்களது திருமண நாளும் ஒன்றாகும். திருமணம் என்பது 'ஆயிரம் காலத்து பயிர்' என்று நாம் முன்னோர்கள் சொல்லி கேட்டிருப்போம். அந்த திருமணங்களில், முதல் இரவு முடிந்த பிறகு பெண்கள் தங்கள் கன்னித்தன்மையை இழக்க நேரிடுகிறது என்கின்றனர் முன்னோர்கள்.
ஆனால், இன்றைய நவீன உலகில் திருமணத்திற்கு முன்பே, பெண்கள் பலர் தங்கள் கன்னித்தன்மையை இழந்து விடுகின்றனர். அதாவது, கன்னித்தன்மை இழப்பு என்பது பெண்கள், ஆண்களுடன் முதல் முறை உடலுறவு கொள்ளும் போது நடக்கிறது. குறிப்பாக, பெண்களின் இந்த கன்னித்தன்மை இழப்பின் போது, பெண்கள் அவர்களின் உடலில் பல்வேறு வினோதமான மாற்றங்களை அனுபவிப்பார்கள். அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
உடலுறவில் ஹார்மோன் மாற்றங்கள்:
தொடர்ந்து உடலுறவில் ஈடுபடுவதால் பல நல்ல ஹார்மோன்களை வெளியிடுவது உள்ளிட்ட பல நன்மைகள் ஏற்படுகிறது. தொடர்ந்து உடலுறவு கொள்வதால் மன அழுத்தத்தை எதிர்த்துப் போராடச் செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உங்கள் மனநிலையை மேம்படுத்துகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் இன்னும் பலவற்றைச் செய்யலாம் என்று ஆய்வுகளில் கூறுகின்றனர்.
உடல் எடை அதிகரிப்பு:
பொதுவாக பெண்கள் திருமணத்துக்குப் பின்பு எடை கூடுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அதற்கு நிறைய மகிழ்ச்சி தான் காரணம் என்பார்கள். இருப்பினும், பெண்களுக்கு உடல் எடை அதிகரிப்பு PCOS போன்ற ஹார்மோன் ஏற்றத்தாழ்வு பிரச்சனைகளுக்கு ஏற்படும்.
மார்பகங்கள் உறுதியாகவும், உணர்திறனை அதிகரிக்கும்:
மார்பகங்களுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து உறுதியாகவும், மென்மையாகவும் மாற்றுகிறது. மேலும், மார்பக காம்புகளில் உணர்திறன் அதிகரிக்கும். அதிகரித்த வாஸ்குலர் இரத்த ஓட்டத்தால் ஏற்படும் வாசோகான்ஜெஸ்ஷன் எனப்படும் செயல்முறை, மார்பகக்காம்புகளை உணர்திறன் செய்கிறது. மேலும் லேபியா மற்றும் கிளிட்டோரிஸை பெரிதாக்குகிறது.
பிறப்புறுப்பில் மாற்றங்கள்:
பிறப்புறுப்பில் மாற்றங்கள் கன்னித்தன்மையை இழப்பது, பிறப்புறுப்பு பகுதியில் சில மாற்றங்களைத் தூண்டலாம். புணர்புழை சுவர்களின் நெகிழ்ச்சி பெரிதும் விரிவடைகிறது, முன்பை விட நெகிழ்வானதாகிறது. மேலும், உங்கள் கிளிட்டோரிஸ் பெரிதாகி, அடுத்த உடலுறவு வலி குறைவாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதை உறுதி செய்கிறது. மேலும், உடலுறவின் போது இரத்த ஓட்டம் அதிகரிப்பதால்,பொலிவான சர்மம், கருப்பை அதிகரிப்பு, மாதவிடாய் தள்ளி போகுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.