Sex secret 22: செக்ஸ் வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டாடி மகிழ்வதற்கு, பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் உட்கொள்வது நன்மை பயக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
செக்ஸ் வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டாடி மகிழ்வதற்கு, பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் உட்கொள்வது நன்மை பயக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். இவற்றை தவிர்த்து சில உணவு பொருட்கள் உட்கொள்வது இல்லற வாழ்க்கையை சிறப்பாக மாற்றும். அவை என்னென்ன என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக, பாலியல் உணர்வுகளை தூண்டும் உணவுகளில் காஃபி, மதுபானம், சாக்லேட் போன்றவை அதிக அளவில் உள்ளது.
ஜின்செங்:
ஜின்செங் இது ஒரு மூலிகை தாவரம் ஆகும். இது சீனாவில் அதிக அளவு கிடைக்கிறது. இது ஆண்களின் விறைப்புத்தன்மை குறைபாடு பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. இது தொடர்பான தகவலை ஃபுட் ரிசர்ச் இண்டர்நேஷனல் இதழ் வெளியிட்டுள்ளது.
யோஹிம்பைன்:
இந்தோல் ஆல்கலாய்டான, யோஹிம்பைன் ஆப்பிரிக்க மரத்தின் பட்டையிலிருந்து பெறப்படுகிறது. இது, பாலியல் செயலிழப்புக்கான சிகிச்சையாக இது நீண்ட காலமாக வெற்றிகரமாக பயன்படுத்தப்படுகிறது.எனினும் இதன் பக்கவிளைவுகள் ஆபத்தானவை. எனவே இவற்றை மருத்துவரின் ஆலோசனையின் படி மிக குறைந்த அளவு உட்கொள்வது அவசியம்.
சிப்பி:
சிப்பி எப்போதுமே ஒரு பாலுணர்வைக் கொண்டுள்ளது. ஆண் ஹார்மோன் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் தாது, துத்தநாகம் சிப்பிகளில் அதிக அளவில் உள்ளது. குறைந்த அளவு டெஸ்டோஸ்டிரோன் விறைப்புத்தன்மைக்கு ஒரு காரணமாக இருக்கலாம். எனவே சிப்பி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
காஃபி:
காஃபி மற்றும் புகையிலை அல்லது ஆல்கஹால் போன்றவை பாலியல் உணர்வுகளை தூண்டுவது கண்டறியப்பட்டுள்ளது. சமீபத்திய ஆராய்ச்சியின் முடிவில், காஃபி அருந்திய பெண்களில் 62% பேர் பாலுறவில் சுறுசுறுப்பாக செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
சாக்லேட்:
சாக்லேட்டில் அதிக அளவு ஃபைனிலெதிலமைன் உள்ளது. இது காதலிக்கும் போது அதிக அளவில் உற்பத்தியாகும் ஹார்மோன். பாலியல் ஆர்வத்தை ஆசையை மீட்டெடுக்கும் ஒரு வழியாகும். காதலர்கள் சாக்லேட் பரிமாறிக்கொள்வது கூட அவர்களுக்கு பாலியல் ஆசையை தூண்டும். எனவே, உடலுறவிற்கு முன்பு சாக்லேட் சாப்பிடுவது பாலியல் ஆசையை பல மடங்கு அதிகரிக்கிறது.