LGBTQ: ஒரே பாலினத்தவர்கள் திருமணத்தை சிறப்புத் திருமணச் சட்டத்தில் அனுமதிக்கலாமா? உச்ச நீதிமன்றம் கேள்வி

By Pothy Raj  |  First Published Nov 25, 2022, 4:55 PM IST

ஒரே பாலினத்தவர்கள் திருமணத்தை சிறப்புத் திருமணச் சட்டத்தில் அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுக்களுக்கு பதில் அளி்க்கக் கோரி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம்  இன்று உத்தரவிட்டுள்ளது.


ஒரே பாலினத்தவர்கள் திருமணத்தை சிறப்புத் திருமணச் சட்டத்தில் அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுக்களுக்கு பதில் அளி்க்கக் கோரி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம்  இன்று உத்தரவிட்டுள்ளது.
சிறப்பு திருமணச் சட்டம் 1954- என்பது, தனிப்பட்ட சட்டத்தின் கீழ் திருமணம் செய்யாதவர்கள் இந்த சட்டத்தில் திருமணம் செய்ய முடியும். 

சுப்ரியோ என்ற சுப்ரியோ சக்ரவர்த்தி ஜோடி, அபேய தாங், பார்த் பிரோஸ் மெஹ்ரோத்ரா மற்றும் உதய் ராஜ் ஆனந்த் ஜோடி ஆகியோர் தனித்தனியாக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்கள்.

Tap to resize

Latest Videos

அதில், “ ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்ய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை, எல்ஜிபிடிகியூ ஜோடியின் மான்பு பாதிக்கப்படுகிறது, வேறுபாடு காட்டப்படுகிறது” என்று கோரியிருந்தார்கள். இந்த வழக்கு தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதி ஹிமா கோலி ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. 

pslv-c54 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது! 8 நானோ, பூடானுடன் செயற்கைக்கோள்கள் ஏவப்படுகிறது

இதே போன்ற வழக்குகள் கேரளா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருந்தன. இந்தவழக்குகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டிருந்தது.

மூத்த வழக்கறிஞர்கள், முகல் ரோஹத்கி, நீரஜ் கிருஷ்ணா கவுல், மேனகா குருசுவாமி, வழக்கறிஞர் அருந்ததி கட்ஜூ ஆகியோர் ஆஜராகினார்கள். 

மூத்த வழக்கிறிஞர் ரோத்தகி தாக்கல் செய்த ஆவணத்தில் “ புட்டாசாமி வழக்கில், தனிநபரின் அந்தரங்கஉரிமை என்பது அரசியலமைப்புச்சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளில் ஒன்று” என்று தெரிவித்தார். 

வழக்கறிஞர் அருந்ததி கட்ஜூ “ 2018ம்ஆண்டு அரசியல்சாசன அமர்வு நவ்நீஜ் ஜோகர் வழக்கில், ஒரேபாலினத் திருமணத்தை குற்றமில்லை எனக்கூறி தீர்ப்பளித்துள்ளது” எனத் தெரிவித்தார்

மேலும், “ 1954ம் ஆண்டு சட்டப்படி, ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் சாதி மறுப்பு மற்றும் வேறுபட்ட மதங்களுக்கு  இடையே திருமணம் செய்யமுயன்றால் பாதுகாப்பு தர வேண்டும். 1954ம் ஆண்டு சிறப்புத் திருமணச் சட்டம் என்பது இரு நபர்களுக்கு இடையிலான திருமணத்தை அங்கீகரிக்கிறது. ஆனால், இதில் பாலினம், பாலின அடையாளம் சுட்டிக்காட்டப்படவில்லை.

ஜூலை-செப்டம்பரில் வேலையின்மை வீதம் 7.2 சதவீதமாகக் குறைந்தது: என்எஸ்ஓ அறிக்கை

ஓரினச்சேர்க்கை என்பது தவறில்லை என அறிவித்தால்  மட்டும் போதுமானதாக இல்லை, நாட்டின் மக்கள்தொகையில் 7% முதல் 8% வரை உள்ள எல்ஜிபிடி மக்களுக்கு வீடு, பணியிடம் மற்றும் பொது இடங்கள் உட்பட வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் சமத்துவம் தரப்பட வேண்டும். 

தனிமனித சுதந்திரம் என்பது  இதயத்தில் நாம் யார் என்பதைத் தேர்ந்தெடுப்பதற்கும், நாம் விரும்பியவரை நேசிப்பதற்கும், துன்புறுத்தலுக்கு பயப்படாமல், முழு மனதுடன் மகிழ்ச்சியாகவும், சமமான வாழவும் நம் மனசாட்சிக்கு உண்மையுள்ள வாழ்க்கையை வாழவும் சுதந்திரம் உள்ளது. இந்த நாட்டின். 
ஒருவரையொருவர் சுதந்திரமாக காதலிக்க முடிந்தாலும் சுப்ரியோ மற்றும் அபய் இன்னும் மகிழ்ச்சி மற்றும் அங்கீகாரம் நிறைந்த மகிழ்ச்சியான திருமணத்தை நடத்த முடியவில்லை.
”என்றும் மனுதாரர்கள் தரப்பில் கூறப்பட்டிருந்தது.

வழக்கறிஞர் கவுல் கூறுகையில் “ ஊதிய உரிமை, பணிக்கொடை, தத்தெடுப்பு, வாடகைத்தாய் உள்ளிட்ட 15 உரிமைகளை சட்டங்கள் உறுதி செய்கின்றன ஆனால், எல்ஜிபிடியினருக்கு எந்த உரிமையும் இல்லை”எனத் தெரிவித்தார்

மேனகா குருசாமி வாதிடுகையில் “ அடிப்படையான விஷயம் என்பது என் குடும்பத்தை நான் எவ்வாறு பாதுகாப்பது.”என்பதாகும்

கடந்த 16 மாதங்களாக 3 நாட்களுக்கு ஒரு ஊழியரை வேலையிலிருந்து நீக்கிய ரயில்வே துறை

மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிடுகையில் “ ஒரே பாலினத்தை திருமணம் செய்தவர்கள், அவர்கள் குழந்தைகளைத் தத்தெடுக்கலாம் அல்லது வாடகைத் தாய் குழந்தைகளைப் பெறலாம். வரிச் சலுகைகள், பரம்பரைச் சொத்துக்கள் பெறுவது போன்ற உரிமைகளும் உள்ளன. ஒரினச் சேர்க்கையாளர்களில் ஒருவர் இறந்துவிட்டாலும் அவருக்கான பலன்கள் அவருடன் வசிக்கும் ஜோடிக்கும் வழங்கப்பட வேண்டும். சமூக அங்கீகாரமும், திருமணமும் முக்கியமாகும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதி ஹிமா கோலி அமர்வு மனுவை ஏற்று "சிறப்புத் திருமணச் சட்டத்தில் ஒரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்தை அனுமதிப்பது" குறித்து மத்திய அரசு 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்


 

click me!