Live Update: மத்திய பட்ஜெட் 2021-2022
Jan 31, 2021, 5:46 PM IST
மத்திய பட்ஜெட் 2021-2022ன் முக்கியமான அறிவிப்புகள் மற்றும் அம்சங்களின் லைவ் அப்டேட்..
1:19 PM
தனியார்மயமாகும் மின் விநியோகம்
மின்சார துறைக்கு ரூ.3.05 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.
தனியார் மின் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்று தெரிவித்த நிர்மலா சீதாராமன், மின் நுகர்வோரே, தாங்கள் மின்சாரத்தை பெற விரும்பும் நிறுவனங்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
இது மின் விநியோகம் தனியார்மயமாகப்போவதை உணர்த்துகிறது.
12:54 PM
தங்கத்துக்கான இறக்குமதி வரி குறைப்பு
தங்கத்துக்கான இறக்குமதி வரி 12.5%லிருந்து 10%ஆக குறைக்கப்படுகிறது - நிர்மலா சீதாராமன்
12:49 PM
வீட்டுக்கடன் வட்டி சலுகை நீட்டிப்பு
3.5 லட்சம் வரை உயர்த்தப்பட்ட வீட்டுக்கடன் வட்டிச்சலுகை மேலும் ஒராண்டு நீட்டிப்பு
குறைந்த விலை வீட்டுக்கடனில் வட்டிக்கான வருமான வரிச்சலுகை மேலும் ஓராண்டு நீட்டிப்பு
12:44 PM
ஆதிதிராவிட மாணவர்களுக்கான நிதி ஒதுக்கீடு
அடுத்த ஆறு ஆண்டுகளில் ஆதிதிராவிட மாணவர்களின் நலனுக்காக ரூ.35,219 கோடி நிதி ஒதுக்கீடு
12:42 PM
பட்ஜெட் உரையில் திருக்குறளை மேற்கோள் காட்டிய நிர்மலா சீதாராமன்
பட்ஜெட் உரையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.
ஒரு அரசு எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்கும் இறைமாட்சி என்ற அதிகாரத்தின் ஐந்தாவது குறளான
“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு”
என்ற குறளை மேற்கோள் காட்டி பேசினார் நிர்மலா சீதாராமன்.
12:25 PM
நிதிப்பற்றாக்குறை
நடப்பு நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை 9.5 சதவிகிதமாக உயரும். அடுத்த நிதியாண்டில் 6.8 சதவிகிதமாக இருக்கும்.
12:20 PM
கல்வித்துறை ஆராய்ச்சிக்கு ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கீடு
கல்வித்துறை ஆராய்ச்சிக்கு ரூ.50,000 கோடி ஒதுக்கப்படுகிறது - நிர்மலா சீதாராமன்
12:17 PM
100 புதிய சைனிக் பள்ளிகள்
தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து 100 புதிய சைனிகள் பள்ளிகள் தொடங்கப்படும் - நிர்மலா சீதாராமன்
புதிய கல்விக்கொள்கையின்படி 15,000 அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்.
12:06 PM
நெல்லுக்கான ஆதார விலை இரட்டிப்பு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
வேளாண் விளைபொருட்களை குறைந்தபட்ச ஆதார விலையில் அரசே கொள்முதல் செய்யும் நடைமுறை தொடரும் - நிர்மலா சீதாராமன்
வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச கொள்முதல் விலை ஒன்றரை மடங்கு அதிகரிப்பு.
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை இரட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. நெல்லின் ஆதார விலை 2 மடங்கு உயர்த்தப்படுவதன் மூலம் விவசாயிகள் பெரும் பலன் அடைவார்கள்.
கடந்த ஓராண்டில் அரசின் நெல் கொள்முதல் 2 மடங்கு அதிகரித்துள்ளது.
12:02 PM
எல்.ஐ.சி, ஏர் இந்தியா நிறுவன பங்குகளை விற்க முடிவு
பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் ரூ.1.75 கோடி திரட்ட முடிவு - நிர்மலா சீதாராமன்
எல்.ஐ.சி, ஏர் இந்தியா போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை பங்குச்சந்தைகளில் புதிய பங்குகளாக விற்க முடிவு.
11:59 AM
பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க முடிவு
பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் ரூ.1.75 கோடி திரட்ட முடிவு - நிர்மலா சீதாராமன்
11:55 AM
பொதுத்துறை வங்கிகளுக்கு மூலதன நிதியாக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு
பொதுத்துறை வங்கிகளுக்கு கூடுதல் மூலதன நிதியாக ரூ.20,000 கோடி ஒதுக்கப்படுகிறது - நிர்மலா சீதாராமன்
11:53 AM
காப்பீட்டு துறையில் அந்நிய முதலீடு அதிகரிப்பு
காப்பீட்டு துறையில் அந்நிய முதலீடு வரம்பு 49 சதவிகிதத்தில் இருந்து 74 சதவிகிதமாக அதிகரிக்கப்படுகிறது.
11:49 AM
சுகாதாரத்துறைக்கு கடந்த நிதியாண்டை விட 137% கூடுதல் நிதி ஒதுக்கீடு
சுகாதாரத்துறைக்கு கடந்த நிதியாண்டை விட 137 சதவிகிதம் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றால் சுகாதாரத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டிய தேவை இருக்கும் நிலையில், ரூ.2.23 லட்சம் கோடி சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
11:40 AM
சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்துக்கு ரூ.63,000 கோடி ஒதுக்கீடு
சென்னையில் 2ம் கட்டமாக 118.9 கிமீ தொலைவிற்கு மெட்ரோ ரயில் இணைப்பு திட்ட விரிவாக்கத்திற்கு ரூ.63,000 கோடி ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன்
11:37 AM
காற்று மாசை கட்டுப்படுத்த நிதி
காற்று மாசை கட்டுப்படுத்த ரூ.2,217 கோடி ஒதுக்கீடு
11:35 AM
தமிழ்நாட்டில் ரூ.1.03 லட்சம் கோடிக்கு புதிய சாலை திட்டங்கள்
தமிழ்நாட்டில் 3,500 கிமீ தொலைவிற்கு புதிய தொழில் வழித்தடங்களை அமைக்க ரூ.1.03 லட்சம் கோடி ஒதுக்கீடு
மதுரையிலிருந்து கேரளாவின் கொல்லம் வரை நவீன வசதிகளுடன் கூடிய நெடுஞ்சாலை அமைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்.
11:31 AM
உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ.20,000 கோடி ஒதுக்கீடு
2021-2022ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.20,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
11:27 AM
நகர்ப்புற தூய்மை திட்டத்திற்கு ரூ.1.41 லட்சம் கோடி
நகர்ப்புற தூய்மை திட்டத்திற்கு ரூ.1.41 லட்சம் கோடி ஒதுக்கப்படுகிறது. நகர்ப்புறங்களில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் சுத்தமான குடிநீர் விநியோகம் செய்யப்படும்.
11:25 AM
உலக சுகாதார அமைப்பின் கிளை
உலக சுகாதார அமைப்பின்(WHO) கிளை இந்தியாவில் தொடங்கப்படும் - நிர்மலா சீதாராமன்
11:23 AM
சுயசார்பு சுகாதார திட்டத்திற்கு ரூ.64,180 கோடி
சுகாதாரத்துறைக்கு இம்முறை கூடுதல் நிதி ஒதுக்கப்படுகிறது. கொரோனா தடுப்பூசிக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.35,000 கோடி ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன்
11:12 AM
சுயசார்பு இந்தியா திட்டம் 5 மினி பட்ஜெட்டுகளுக்கு சமம்
சுயசார்பு இந்தியா திட்ட அறிவிப்புகள் ஐந்து மினி பட்ஜெட்டுகளுக்கு சமம் - நிர்மலா சீதாராமன்
11:11 AM
நிர்மலா சீதாராமன் உரை
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நோய்த்தொற்று காலத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன். பொதுமுடக்கத்தை அமல்படுத்தாவிட்டால் பெரும் பாதிப்பை சந்திக்க நேர்ந்திருக்கும். சுயசார்பு இந்தியா திட்டத்தின் மூலம் பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து நாடு மீண்டுவருகிறது - நிர்மலா சீதாராமன்
11:07 AM
பட்ஜெட் உரையை நிர்மலா சீதாராமன் தொடங்கியதுமே எதிர்க்கட்சிகள் கூச்சல், அமளி
பட்ஜெட் உரையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கியதுமே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். ஆனால் கூச்சலையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது உரையை தொடர்ந்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
11:04 AM
பட்ஜெட்டை தாக்கல் செய்ய தொடங்கினார் நிர்மலா சீதாராமன்
2021-2022ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய தொடங்கினார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
10:48 AM
பிரதமர் மோடி பாராளுமன்றம் வந்தார்
பட்ஜெட் 2021 தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்றம் வந்தடைந்தார்.
10:47 AM
பட்ஜெட்டுடன் பாராளுமன்றம் வந்தடைந்தார் நிர்மலா சீதாராமன்
பட்ஜெட் 2021 தாக்கல் செய்வதற்காக பட்ஜெட்டுடன் பாராளுமன்றம் வந்தடைந்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். சரியாக, காலை 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
10:37 AM
ஜனவரி மாத ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1.20 லட்சம் கோடி
ஜனவரி மாத ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1.20 லட்சம் கோடி ஆகும். அதில் சிஜிஎஸ்டி(மத்திய ஜிஎஸ்டி) ரூ.21,923 கோடி, எஸ்ஜிஎஸ்டி(மாநில ஜிஎஸ்டி) ரூ.29,014 கோடி, ஐஜிஎஸ்டி ரூ.60,288 ஆகும். செஸ் ரூ.8,622 கோடி.
10:11 AM
பட்ஜெட் 2021-2022 எதிர்பார்ப்புகள்: ஸ்மார்ட்ஃபோன் விலை உயரும்
ஸ்மார்ட்ஃபோன் உள்ளிட்ட 50 எலக்ட்ரானிக் பொருட்களுக்கான இறக்குமதி வரியை 5-10% மத்திய அரசு உயர்த்தவுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அப்படி உயர்த்தினால், ஸ்மார்ட்ஃபோன் உள்ளிட்ட அந்த குறிப்பிட்ட 50 எலக்ட்ரானிக் பொருட்களின் விலை உயரும்.
10:04 AM
பட்ஜெட் 2021-2022 முதல் பிரதியை ஜனாதிபதியிடம் வழங்கினார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் 2021-2022 முதல் பிரதியை குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்று குடியரசு தலைவரிடம் வழங்கிவிட்டு பாராளுமன்றத்திற்கு புறப்பட்டார்.
10:01 AM
மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் பட்ஜெட் - அனுராக் தாகூர்
பட்ஜெட் 2021-2022, மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பட்ஜெட்டாக இருக்கும் என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
9:51 AM
இந்தியாவின் முதல் காகிதமில்லா டிஜிட்டல் பட்ஜெட்
வழக்கமாக பட்ஜெட் உரை காகிதங்கள் பெட்டியினுள் வைத்து கொண்டுவரப்படும். கடந்த முறை இந்த நடைமுறையை மாற்றி சிவப்பு துணியினுள் வைத்து எடுத்துவந்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த முறை பட்ஜெட்டை காகிதங்களை அச்சிடாமல் டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன். நாடு சுதந்திரம் அடைந்து முதல் முறையாக காகிதமில்லாத டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
9:36 AM
பிரதமர் நரேந்திர மோடி அரசின் 8வது பட்ஜெட்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 8வது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 3வது முறையாக மத்திய பட்ஜெட்டை இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார்.
1:19 PM IST:
மின்சார துறைக்கு ரூ.3.05 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.
தனியார் மின் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்று தெரிவித்த நிர்மலா சீதாராமன், மின் நுகர்வோரே, தாங்கள் மின்சாரத்தை பெற விரும்பும் நிறுவனங்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
இது மின் விநியோகம் தனியார்மயமாகப்போவதை உணர்த்துகிறது.
12:54 PM IST:
தங்கத்துக்கான இறக்குமதி வரி 12.5%லிருந்து 10%ஆக குறைக்கப்படுகிறது - நிர்மலா சீதாராமன்
12:49 PM IST:
3.5 லட்சம் வரை உயர்த்தப்பட்ட வீட்டுக்கடன் வட்டிச்சலுகை மேலும் ஒராண்டு நீட்டிப்பு
குறைந்த விலை வீட்டுக்கடனில் வட்டிக்கான வருமான வரிச்சலுகை மேலும் ஓராண்டு நீட்டிப்பு
12:44 PM IST:
அடுத்த ஆறு ஆண்டுகளில் ஆதிதிராவிட மாணவர்களின் நலனுக்காக ரூ.35,219 கோடி நிதி ஒதுக்கீடு
12:42 PM IST:
பட்ஜெட் உரையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.
ஒரு அரசு எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்கும் இறைமாட்சி என்ற அதிகாரத்தின் ஐந்தாவது குறளான
“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு”
என்ற குறளை மேற்கோள் காட்டி பேசினார் நிர்மலா சீதாராமன்.
12:25 PM IST:
நடப்பு நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை 9.5 சதவிகிதமாக உயரும். அடுத்த நிதியாண்டில் 6.8 சதவிகிதமாக இருக்கும்.
12:20 PM IST:
கல்வித்துறை ஆராய்ச்சிக்கு ரூ.50,000 கோடி ஒதுக்கப்படுகிறது - நிர்மலா சீதாராமன்
12:17 PM IST:
தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து 100 புதிய சைனிகள் பள்ளிகள் தொடங்கப்படும் - நிர்மலா சீதாராமன்
புதிய கல்விக்கொள்கையின்படி 15,000 அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்.
12:06 PM IST:
வேளாண் விளைபொருட்களை குறைந்தபட்ச ஆதார விலையில் அரசே கொள்முதல் செய்யும் நடைமுறை தொடரும் - நிர்மலா சீதாராமன்
வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச கொள்முதல் விலை ஒன்றரை மடங்கு அதிகரிப்பு.
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை இரட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. நெல்லின் ஆதார விலை 2 மடங்கு உயர்த்தப்படுவதன் மூலம் விவசாயிகள் பெரும் பலன் அடைவார்கள்.
கடந்த ஓராண்டில் அரசின் நெல் கொள்முதல் 2 மடங்கு அதிகரித்துள்ளது.
12:02 PM IST:
பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் ரூ.1.75 கோடி திரட்ட முடிவு - நிர்மலா சீதாராமன்
எல்.ஐ.சி, ஏர் இந்தியா போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை பங்குச்சந்தைகளில் புதிய பங்குகளாக விற்க முடிவு.
11:59 AM IST:
பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் ரூ.1.75 கோடி திரட்ட முடிவு - நிர்மலா சீதாராமன்
11:55 AM IST:
பொதுத்துறை வங்கிகளுக்கு கூடுதல் மூலதன நிதியாக ரூ.20,000 கோடி ஒதுக்கப்படுகிறது - நிர்மலா சீதாராமன்
11:53 AM IST:
காப்பீட்டு துறையில் அந்நிய முதலீடு வரம்பு 49 சதவிகிதத்தில் இருந்து 74 சதவிகிதமாக அதிகரிக்கப்படுகிறது.
11:49 AM IST:
சுகாதாரத்துறைக்கு கடந்த நிதியாண்டை விட 137 சதவிகிதம் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றால் சுகாதாரத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டிய தேவை இருக்கும் நிலையில், ரூ.2.23 லட்சம் கோடி சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
11:40 AM IST:
சென்னையில் 2ம் கட்டமாக 118.9 கிமீ தொலைவிற்கு மெட்ரோ ரயில் இணைப்பு திட்ட விரிவாக்கத்திற்கு ரூ.63,000 கோடி ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன்
11:37 AM IST:
காற்று மாசை கட்டுப்படுத்த ரூ.2,217 கோடி ஒதுக்கீடு
11:35 AM IST:
தமிழ்நாட்டில் 3,500 கிமீ தொலைவிற்கு புதிய தொழில் வழித்தடங்களை அமைக்க ரூ.1.03 லட்சம் கோடி ஒதுக்கீடு
மதுரையிலிருந்து கேரளாவின் கொல்லம் வரை நவீன வசதிகளுடன் கூடிய நெடுஞ்சாலை அமைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்.
11:31 AM IST:
2021-2022ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.20,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
11:27 AM IST:
நகர்ப்புற தூய்மை திட்டத்திற்கு ரூ.1.41 லட்சம் கோடி ஒதுக்கப்படுகிறது. நகர்ப்புறங்களில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் சுத்தமான குடிநீர் விநியோகம் செய்யப்படும்.
11:25 AM IST:
உலக சுகாதார அமைப்பின்(WHO) கிளை இந்தியாவில் தொடங்கப்படும் - நிர்மலா சீதாராமன்
11:23 AM IST:
சுகாதாரத்துறைக்கு இம்முறை கூடுதல் நிதி ஒதுக்கப்படுகிறது. கொரோனா தடுப்பூசிக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.35,000 கோடி ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன்
11:13 AM IST:
சுயசார்பு இந்தியா திட்ட அறிவிப்புகள் ஐந்து மினி பட்ஜெட்டுகளுக்கு சமம் - நிர்மலா சீதாராமன்
11:11 AM IST:
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நோய்த்தொற்று காலத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன். பொதுமுடக்கத்தை அமல்படுத்தாவிட்டால் பெரும் பாதிப்பை சந்திக்க நேர்ந்திருக்கும். சுயசார்பு இந்தியா திட்டத்தின் மூலம் பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து நாடு மீண்டுவருகிறது - நிர்மலா சீதாராமன்
11:08 AM IST:
பட்ஜெட் உரையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கியதுமே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். ஆனால் கூச்சலையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது உரையை தொடர்ந்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
11:04 AM IST:
2021-2022ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய தொடங்கினார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
10:48 AM IST:
பட்ஜெட் 2021 தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்றம் வந்தடைந்தார்.
10:47 AM IST:
பட்ஜெட் 2021 தாக்கல் செய்வதற்காக பட்ஜெட்டுடன் பாராளுமன்றம் வந்தடைந்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். சரியாக, காலை 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
10:37 AM IST:
ஜனவரி மாத ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1.20 லட்சம் கோடி ஆகும். அதில் சிஜிஎஸ்டி(மத்திய ஜிஎஸ்டி) ரூ.21,923 கோடி, எஸ்ஜிஎஸ்டி(மாநில ஜிஎஸ்டி) ரூ.29,014 கோடி, ஐஜிஎஸ்டி ரூ.60,288 ஆகும். செஸ் ரூ.8,622 கோடி.
10:11 AM IST:
ஸ்மார்ட்ஃபோன் உள்ளிட்ட 50 எலக்ட்ரானிக் பொருட்களுக்கான இறக்குமதி வரியை 5-10% மத்திய அரசு உயர்த்தவுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அப்படி உயர்த்தினால், ஸ்மார்ட்ஃபோன் உள்ளிட்ட அந்த குறிப்பிட்ட 50 எலக்ட்ரானிக் பொருட்களின் விலை உயரும்.
10:04 AM IST:
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் 2021-2022 முதல் பிரதியை குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்று குடியரசு தலைவரிடம் வழங்கிவிட்டு பாராளுமன்றத்திற்கு புறப்பட்டார்.
10:01 AM IST:
பட்ஜெட் 2021-2022, மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பட்ஜெட்டாக இருக்கும் என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
9:52 AM IST:
வழக்கமாக பட்ஜெட் உரை காகிதங்கள் பெட்டியினுள் வைத்து கொண்டுவரப்படும். கடந்த முறை இந்த நடைமுறையை மாற்றி சிவப்பு துணியினுள் வைத்து எடுத்துவந்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த முறை பட்ஜெட்டை காகிதங்களை அச்சிடாமல் டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன். நாடு சுதந்திரம் அடைந்து முதல் முறையாக காகிதமில்லாத டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
9:37 AM IST: