தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரிய வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு

By SG Balan  |  First Published Oct 17, 2023, 7:47 AM IST

ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி முதல் இந்த வழக்கில் விசாரணை நடந்திவந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியாக இருக்கிறது.


ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர் திருமணம் செய்துகொள்வதற்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், சஞ்சய் கே கவுல், எஸ்.ஆர்.பட், ஹிமா கோலி மற்றும் பி.எஸ்.நரசிம்மா ஆகிய ஐந்து நீதிபதிகள் கொ ண்ட  அரசியல் சாசன அமர்வு  கடந்த ஏப்ரல் 18ஆம்  தேதி முதல் இந்த வழக்கில் விசாரணை நடந்திவந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியாக இருக்கிறது. 

Latest Videos

undefined

விசாரணையின்போது மத்திய அரசு, தன்பாலின திருமணத்துக்கு அங்கீகாரத்துக்கு எதிரான வாதங்களை முன்வைத்தது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தலையிடுவது சரியாக இருக்காது என்றும் தன்பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் அளிப்பதால் ஏற்படும் விளைவுகளை உச்ச நீதிமன்றம் கணிக்க இயலாது எனவும் மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது.

மணிப்பூரை விட இஸ்ரேல் மீது பிரதமர் மோடிக்கு அதிக அக்கறை: ராகுல் காந்தி!

திருமணம் செய்து கொள்ளும் உரிமை அடிப்படை உரிமை அல்ல என்றும், ஒரே பாலின திருமணங்களை உச்ச நீதிமன்றம் அங்கீகரிப்பது அதன் சட்டப்பூர்வ எல்லைக்குள் அத்துமீறி நுழைவதற்குச் சமம் என்றும் மத்திய அரசு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார்.

திருமணம் தொடர்பான அணுகுமுறையில் பாகுபாடு காட்டப்படுவது, அரசியல் சானத்தின் பிரிவுகள் 14, 15 (1), 19(1)(A), மற்றும் 21 ஆகியவற்றை மீறுவதாகும் என்றும் ஒரே பாலினத்தைச் சேர்ந்த ஜோடிகளுக்கு சமமான திருமண உரிமைகள் வேண்டும் என்று ஓரினச்சேர்க்கை சமூகத்தின் தரப்பில் வாதிடப்பட்டது.

தன்பாலின திருமணத்துக்கு மத்திய அரசு மட்டுமி ன்றி ராஜஸ்தான், ஆ ந் திரா, அசாம் உள்ளிட்ட ஏழு மாநில அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன எனவும் எடுத்துக்கூறியது. கடந்த மே 11ஆம் தேதி வரை நடந்த விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்க இருக்கிறது.

நாடு முழுவதும் பயணித்து மலை உச்சிகளில் மூவர்ணக் கொடி ஏற்றிய மலையேற்றக் குழு!

click me!