மத்தியப்பிரதேச தேர்தல் முழு விவரம்: கடந்த தேர்தல்களில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்!

By Manikanda Prabu  |  First Published Nov 16, 2023, 7:33 PM IST

மத்தியப்பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது


மொத்தம் 230 தொகுதிகளை கொண்ட மத்தியப்பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அம்மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே இரு முனைப்போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில், அம்மாநிலத்தின் அரசியல் நிலவரம் பற்றி பார்க்கலாம்.


** மொத்த தொகுதிகள் - 230

Latest Videos

undefined


** வெற்றி பெற - 116


** வாக்குப்பதிவு நாள் - ஒரே கட்டமாக நவம்பர் 17


** முடிவுகள் அறிவிப்பு  - டிசம்பர் 3ஆம் தேதி


** மொத்த வேட்பாளர்கள் - 2,533 


** வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் - 5,60,60,925 (2,88,25,607 ஆண்கள், 2,72,33,945 பெண்கள், 1,373 மூன்றாம் பாலினத்தவர்கள்)


** முக்கிய கட்சிகள் - பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ்


** இந்த தேர்தலில் சமாஜ்வாடி கட்சி மொத்தம் 46 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. கடந்த 2018 தேர்தலில் ஒரு தொகுதியில் அக்கட்சி வெற்றி பெற்றிருந்தது.

ஜன.,17 முதல் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா!


மத்தியப்பிரதேச மாநிலத்தில் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று கமல்நாத் முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால், உட்கட்சி பூசல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டில் ஜோதிராதித்ய சிந்தியா, தனது ஆதரவு 22 எம்.எல்.ஏ.க்களுடன் பாஜகவில் சேர்ந்தார். இதனால், காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சி அமைந்தது. பாஜக முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார்.


கடந்த 30 ஆண்டுகளில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்


காங்கிரஸ் பெற்ற வாக்கு சதவீதம்
1998 - 40.59 சதவீதம்
2003 - 31.61 சதவீதம்
2008 - 32.39 சதவீதம்
2013 - 36.38 சதவீதம்
2018 - 40.89 சதவீதம்


பாஜக பெற்ற  வாக்கு சதவீதம்
1998 - 39.28 சதவீதம்
2003 - 42.5 சதவீதம்
2008 - 37.64 சதவீதம்
2013 - 44.88 சதவீதம்
2018 - 41.02 சதவீதம்


பகுஜன் சமாஜ் பெற்ற வாக்கு சதவீதம்
1998 - 6.15 சதவீதம்
2003 - 7.26 சதவீதம்
2008 - 8.97 சதவீதம்
2013 - 6.29 சதவீதம்
2018 - 5.01 சதவீதம்


இதர கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்
1998 - 13.98 சதவீதம்
2003 - 18.63  சதவீதம்
2008 - 21 சதவீதம்
2013 - 12.45 சதவீதம்
2018 - 13.08 சதவீதம்


மத்தியப்பிரதேச மாநிலம் சாதி/மத விவரம்


மத்தியப்பிரதேச மாநிலத்தில் இந்துக்கள் 91 சதவீதமும், முஸ்லீம்கள் 7 சதவீதமும், மற்ற மதத்தினர் 2 சதவீதமும் உள்ளனர். அம்மாநிலத்தில், 50 சதவீதம் ஓபிசி, 20 சதவீதம் எஸ்டி, 15 சதவீதம் எஸ்சி மற்றும் 15 சதவீதம் உயர் சாதி/பொதுப் பிரிவு மக்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதில், பொதுப் பிரிவு சமூகத்தை சேர்ந்த 80 பேரையும், ஓபிசி சமூகத்தை சேர்ந்த 68 வேட்பாளர்களையும், எஸ்.சி. சமூகத்தை சேர்ந்த 35 வேட்பாளர்களையும், எஸ்.டி சமூகத்தை சேர்ந்த 47 வேட்பாளர்களையும் பாஜக நிறுத்தியுள்ளது. இஸ்லாமியர்கள் யாருக்கும் அக்கட்சி வாய்ப்பளிக்கவில்லை.


அதேபோல், பொதுப் பிரிவு சமூகத்தை சேர்ந்த 86 பேரையும், ஓபிசி சமூகத்தை சேர்ந்த 59 வேட்பாளர்களையும், எஸ்.சி. சமூகத்தை சேர்ந்த 35 வேட்பாளர்களையும், எஸ்.டி சமூகத்தை சேர்ந்த 48 வேட்பாளர்களையும் காங்கிரஸ் கட்சி நிறுத்தியுள்ளது. இஸ்லாமியர்கள் 2 பேருக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பளித்துள்ளது.


மத்தியப்பிரதேச மாநிலத்தில் மொத்தம் 500 சாதிக்குழுக்கள் உள்ளன. இதில், 51 சாதிக் குழுக்களுக்கு இரு கட்சிகளுமே வாய்ப்பளித்துள்ளது. அதாவது, 10 சதவீத சாதிக் குழுக்களுக்கு இரு கட்சிகளுமே வாய்ப்பளித்துள்ளது. அனைத்து சாதிகளுக்கும் வாய்ப்பளிப்பது என்பது இயலாத காரியம். அதேசமயம், இரு கட்சிகளுமே பிராமணர், தாக்கூர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அதிக எண்ணிக்கையில் வாய்ப்பளித்துள்ளது. இந்த இரு சமூகங்களுமே அம்மாநிலத்தில் ஆதிக்கம் நிறைந்தவை.

click me!