ஐஆர்சிடிசி முடங்கியது? தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் அவதி!

By Asianet Tamil  |  First Published Dec 26, 2024, 11:05 AM IST

ஐஆர்சிடிசி செயலி மற்றும் வலைத்தளம் இன்று முடங்கியதால் பயணிகள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். 


ஐஆர்சிடிசி என்று அழைக்கபப்டும் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷனின் செயலி மற்றும் வலைத்தளம் இரண்டுமே இன்று காலை முடங்கியது. இதுகுறித்து பல பயணிகள் சமூக ஊடகங்களில் புகார் தெரிவித்து வருகின்றனர்., தங்களால் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியவில்லை என்றும் பலர் கருத்து பதிவிட்டனர்.. எனினும் இந்த செயலிழப்புக்கு ஐ.ஆர்.சி.டி.சி இன்னும் பதிலளிக்கவில்லை.ஐ.ஆர்.சி.டி.சி பயன்பாட்டைத் திறக்கும்போது, ​​'பராமரிப்பு செயல்பாடு காரணமாக செயலைச் செய்ய முடியவில்லை' என்ற செய்தி வருவதாக பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஐஆர்சிடிசி செயலிழப்பு குறித்து பயனர் ஒருவர் எக்ஸ் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்திய பிரதமர் மோடி ஆகியோரை டேக் செய்து அவர் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ இந்த மோசடி எப்போது நிறுத்தப்படும். காலை 10 மணிக்கு ஐஆர்சிடிசி செயலில் முடங்கிவிடுகிறது. மீண்டும் நீங்கள் அதை திறந்தால் அனைத்து தட்கல் டிக்கெட்களும் விற்று தீர்ந்து, பிரீமியம் டிக்கெட் மட்டுமே இரண்டு மடங்கு விலையில் கிடைக்கிறது. இது ஐஆர்சிடிசியின் மோசடி” என்று பதிவிட்டுள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

அந்தமானை 6 நாட்கள் சுற்றி பார்க்கலாம்! மலிவு விலை டூர் பேக்கேஜை அறிவித்த IRCTC!

அதே போல் மற்றொரு பயனர் “ "இது காலை 10:11 மணி ... இன்னும் ஐ.ஆர்.சி.டி.சி திறக்கப்படவில்லை .... ஐ.ஆர்.சி.டி.சி விசாரித்து சரிபார்க்க வேண்டும் ... நிச்சயமாக மோசடிகள் நடக்கிறது. அது திறக்கும் நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்த்துவிடும்..." என்று குறிப்பிட்டுள்ளார்.

It is 10:11am ... still IRCTC is not opening....

IRCTC should be enquired and checked... definitely scams are happening. By the time it opens all the tickets are gone... pic.twitter.com/NLTWJmvOt7

— Avanish Mishra (@iamavim)

 

இந்தியா நிலவில் தரையிறங்கிவிட்டது, ஆனால் இந்திய ரயில்வே டிக்கெட் முன்பதிவு செயலியில் தட்கல் முன்பதிவு செய்யும் போது அது செயலிழக்கிறது. இது 2024, நிலையான சர்வர் அமைப்பது ஒன்றும் ராக்கெட் சயின்ஸ் இல்லை” என்று மற்றொரு பயனர் பதிவிட்டுள்ளார். 

இந்தியாவில் எந்தெந்த ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன? அதற்கு என்ன காரணம்?

ஐஆர்சிடிசி முடங்குவது இந்த மாதத்தில் இரண்டாவது முறையாகும். டிசம்பர் 9 அன்று இந்த இணையதளம் ஒரு மணி நேர பராமரிப்புக்கு உட்பட்டது. இதனால் தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் திணறினர். பயணத்திற்கு ஒரு நாள் முன்னதாக தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ஏ.சி. வகுப்புகள் - முன்பதிவு காலை 10 மணிக்கு தட்கல் முன்பதிவு தொடங்கும். ஏசி அல்லாத வகுப்புகள் - முன்பதிவு காலை 11 மணிக்கு தட்கல் முன்பதிவு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. .

click me!