பீகாரில் கட்சிகளின் செயல்பாடுகள் குறித்த விவரங்களின் படி மற்ற கட்சிகளை விட பாஜக மட்டுமே சிறப்பாக செயல்பட்ட பெரிய கட்சியாக திகழ்கிறது.
பீகாரில் கட்சிகளின் செயல்பாடுகள் குறித்த விவரங்களின் படி மற்ற கட்சிகளை விட பாஜக மட்டுமே சிறப்பாக செயல்பட்ட பெரிய கட்சியாக திகழ்கிறது. பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு நடந்த பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 243 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 77 உறுப்பினர்கள் உள்ளனர். ஐக்கிய ஜனதா தளத்துக்கு 45 பேரும், கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு 9 உறுப்பினர்களும் உள்ளனர். எதிர்கட்சிகளான ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கு 75 பேரும், காங்கிரஸுக்கு 19 பேரும், இடதுசாரிக் கட்சிகளுக்கு 16 உறுப்பினர்களும் உள்ளனர்.
இதையும் படிங்க: நிதிஷ் குமாருக்கு ஜித்தன் மாஞ்சி ஆதரவு: பாஜகவுக்கு எதிராக கட்சிகள் ஒன்று சேரும்-அகிலேஷ்
ஐக்கிய ஜனதா தளத்துக்கு 45 எம்எல்ஏக்களே இருந்தும் முதல்வராக நிதிஷ் குமார் அறிவிக்கப்பட்டார். 77 இடங்களை கைப்பற்றியும் முதல்வர் பதவியை கைப்பற்ற முடியவில்லையே என்ற ஏக்கம் தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து இன்று வரை பாஜகவிடம் உள்ளது. இருந்தும் கட்சி தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் 2 பாஜக துணை முதல்வர்கள் பதவியேற்றனர். எப்படியாகிலும் ஆட்சி, அதிகாரத்தில் பாஜகவுக்கும், ஐக்கிய ஜனதா தளத்திற்கும் மோதல்கள் அதிகரித்து வந்தன. பாஜக ஏற்பாடு செய்யும் ஆலோசனைக் கூட்டங்களையும், பிரதமர் மோடியுடனான சந்திப்பையும் கடந்த சில மாதங்களாக நிதிஷ் குமார் தவிர்த்து வந்தார்.
இதையும் படிங்க: பீகார் முதல்வர் பதவியிலிருந்து நிதிஷ் குமார் ராஜினாமா: ஆட்சியை இழந்தது பாஜக
குறிப்பாக குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழா முதல் நிதி ஆயோக் கூட்டம் வரை, 3 வாரங்களில் ஒன்றிய அரசின் நான்கு முக்கிய நிகழ்ச்சிகளை நிதிஷ் குமார் புறக்கணித்தார். இதனால் பாஜக உடனான கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் வெளியேற உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், பாஜக உடனான கூட்டணி முறிந்ததாக அவர் அதிகார பூர்வமாக அறிவித்தார். இதனை தொடர்ந்து நிதிஷ்குமார் தனது பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். இதனிடையே பீகாரில் கட்சிகளின் செயல்பாடுகள் குறித்த விவரங்களின் படி மற்ற கட்சிகளை விட பாஜக மட்டுமே சிறப்பாக செயல்பட்ட பெரிய கட்சியாக திகழ்கிறது.
பாஜக:
2015- 53/157 = 33%
2020- 74/110= 67%
ஜேடியூ:
2015: 71/101= 71%
2020: 45/115= 39%
ஆர்ஜேடி:
2015: 80/101= 80%
2020: 73/144= 50.6%
காங்கிரஸ்:
2015: 27/41= 67%
2020: 20/70= 28%