ஒரே பாலினத்தவர்கள் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கக் கோரி பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தொடரப்பட்ட மனுக்கள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
ஒரே பாலினத்தவர்கள் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கக் கோரி பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தொடரப்பட்ட மனுக்கள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து மனுக்களுக்கும் சேர்த்து, மத்திய அரசு பிப்ரவரி 15ம் தேதிக்குள் பதில் அளிக்கவேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
சுப்ரியோ என்ற சுப்ரியோ சக்ரவர்த்தி ஜோடி, அபேய தாங், பார்த் பிரோஸ் மெஹ்ரோத்ரா மற்றும் உதய் ராஜ் ஆனந்த் ஜோடி ஆகியோர் தனித்தனியாக உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் மனுத்தாக்கல் செய்திருந்தார்கள்.
50 ஆண்டு எல்லைப் பிரச்சினை!அசாம்,மேகாலயா மாநிலங்கள் உச்ச நீதிமன்ற கதவைத் தட்டின
அந்த மனுவில் “ “ ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்ய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை, எல்ஜிபிடிகியூ ஜோடியின் மான்பு பாதிக்கப்படுகிறது, வேறுபாடு காட்டப்படுகிறது” என்று கோரியிருந்தார்கள்.
மேலும், இதே போன்ற வழக்குகள் கேரளா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருந்தன. இந்தவழக்குகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டிருந்தது.
மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள், முகல் ரோஹத்கி, நீரஜ் கிருஷ்ணா கவுல், மேனகா குருசுவாமி, வழக்கறிஞர் அருந்ததி கட்ஜூ ஆகியோர் ஆஜராகினார்கள். மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகினார்.
சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில் “ நீதிமன்றத்துக்கு இரு வாய்ப்புகள் உள்ள ஒன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கின் தீர்ப்பை கவனிப்பது அல்லது அனைத்து மனுக்களையும் சேர்த்து உச்ச நீதிமன்றம் விசாரிப்பதாகும்” எனத் தெரிவித்தார்
பல்வேறு மனுதாரர்களும் கோரிக்கையின்படி, அனைத்து மனுக்களையும் ஒன்றாக இணைத்து உச்ச நீதிமன்றம் விசாரிக்கக் கோரியிருந்தார்கள்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதி நரசிம்மா, ஜேபி பர்திவாலா ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த தலைமைநீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, “ பல்வேறு உயர் நீதிமன்றங்களில் இது தொடர்பாக நிலுவையில் இருக்கும் அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும், அந்த மனுக்கள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து விசாரிக்கிறோம்.
வரும் பிப்ரவரி 15ம் தேதிக்குள் மத்திய அரசு , அனைத்து மனுதாரர்களுக்கும் சேர்த்து பதில் மனுத் தாக்கல் செய்ய நோட்டீஸ் அளிக்க உத்தரவிடுகிறோம். இந்த வழக்கு மார்ச் மாதம் பட்டியலிடப்படும். மனுதாரர்கள் நேரடியாக வந்து நீதிமன்றத்தில் அல்லது, காணொலி வாயிலாக கருத்துக்களைத் தெரிவிக்கலாம்” என உத்தரவிட்டனர்.
ஒரே பாலின திருமணம் தொடர்பாக சட்டங்கள் மற்றும் முன்னுதாரணங்கள் ஏதேனும் இருந்தால், அதை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்து, அதை தங்களுக்கும் நீதிமன்றத்துக்கும் பகிர்ந்து கொள்ளுமாறு மத்திய அரசு வழக்கறிஞர் மனுதாரர்களை கேட்டுக்கொண்டனர்