வயக்ரா மாத்திரை உட்கொண்ட நபர் உயிரிழப்பு… பிரதே பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்!!

By Narendran S  |  First Published Mar 7, 2023, 7:45 PM IST

நாக்பூரை சேர்ந்த ஒருவர் வயக்ரா மாத்திரை உட்கொண்டதால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


நாக்பூரை சேர்ந்த ஒருவர் வயக்ரா மாத்திரை உட்கொண்டதால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாக்பூரைச் சேர்ந்த ஒருவர், தனது பெண் நண்பருடன் ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார். அப்போது மது அருந்திக்கொண்டே இரண்டு வயக்ரா மாத்திரைகளையும் உட்கொண்டுள்ளார். வயக்ரா பிராண்டின் சில்டெனாபில் எனப்படும் அந்த மாத்திரைகளை எடுத்துக் கொண்ட அவர், மறுநாள் காலை வாந்தியெடுத்துள்ளார். அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதை அடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சைபலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில், அவரது உடலில் இருந்து மருத்துவர்கள் 300 கிராம் உறைந்த இரத்தத்தையும், ஆல்கஹால் மற்றும் மருந்துகளின் கலவையையும் கண்டறிந்துள்ளனர்.

இதையும் படிங்க: உங்கள் கைரேகை சொல்லும், உங்களுடைய காதல் கதையை...!!

Tap to resize

Latest Videos

undefined

மேலும் அவருக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்ததாகவும் அதுதான் அவரது மரணத்திற்கு காரணம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, அந்த நபர் பெருமூளை இரத்தப்போக்கு காரணமாக இறந்துவிட்டார் என்பது தெரியவந்தது. மூளைக்கு ஆக்ஸிஜன் விநியோகம் குறைந்துள்ளது. மருத்துவர்கள் 300 கிராம் உறைந்த இரத்தத்தைக் கண்டறிந்துள்ளனர். மேலும் ஆல்கஹால், மருந்துகள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றின் கலவையானது அவரது மரணத்திற்கு வழிவகுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ ஆலோசனை இல்லாமல் விறைப்புத்தன்மைக்காக மாத்திரை எடுப்பதன் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த சம்பவத்தை வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயக்ராவின் மருந்தின் நன்மையும் தீமையும்: 

வயக்ராவின் மருந்தின் பக்க விளைவுகளாக தலைவலி, தொடர்ச்சியான வயிறு வலி, இரத்த அழுத்த பிரச்சினைகள் ஆகியவை கூறப்படுகிறது. 
ஆனால் சமீபத்திய ஆய்வின்படி, விறைப்புத்தன்மைக்காக வயக்ரா பயன்படுத்துபவர்கள் இதய பிரச்சினைகளால் பாதிக்கப்படும் வாய்ப்பு குறைவு என்றும் இதய பிரச்சனையால் இறப்பது 40 சதவீதம் குறைந்துள்ளதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.  

இதையும் படிங்க: இந்த கேள்விகளுக்கு உங்க கிட்ட.. தெளிவான பதில் இருந்தால்.. தாரளமா செக்ஸ் வச்சிக்கோங்க..!

வயக்ரா பெண்களையும் பாதிக்கிறதா?

தாமதமான புணர்ச்சி அல்லது குறைவான புணர்ச்சி உட்பட ஒரு பெண்ணில் பாலியல் புணர்ச்சி கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க வயக்ரா பயன்படுத்தப்படலாம் என்று மருத்துவர் குமாவத் கூறுகிறார். படுக்கையில் திருப்தி அடைவது எப்போதும் எளிதானது அல்ல. ஒரு பொதுவான பெண் பாலியல் செயலிழப்பு என்பது பாலியல் ஆர்வத்தின் பற்றாக்குறை அல்லது பாலியல் ரீதியாக ஆர்வமின்மைக்குள் அடங்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது சில நேரங்களில் ஹார்மோன் மாற்றங்கள் அல்லது புற்றுநோய், நீரிழிவு நோய் அல்லது இருதய நோய் போன்றவைகளுடன் தொடர்புடையதாகவும் இருக்கலாம்.

click me!