வீட்டில் கொசுத் தொல்லை தாங்க முடியலையா? இரண்டு சூப்பர் வழி இருக்கு கொசுக்களை விரட்ட! டிரைப்பண்ணிப் பாருங்க...

By Suresh Arulmozhivarman  |  First Published Sep 4, 2018, 1:46 PM IST

பொதுவாக மழை மற்றும் குளிர் காலத்தில் கொசுக்கள் அதிகமாக இருக்கும். கொசுக்கள் மக்களைப் பாடாய்படுத்தும். தற்ப்போது தமிழகத்தில் மழைக்காலம். இரவு நேரங்களில் தூங்க முடியாத அளவுக்கு கொசுக்கடி நம் உயிரை வாங்கும். 
 


பொதுவாக மழை மற்றும் குளிர் காலத்தில் கொசுக்கள் அதிகமாக இருக்கும். கொசுக்கள் மக்களைப் பாடாய்படுத்தும். தற்ப்போது தமிழகத்தில் மழைக்காலம். இரவு நேரங்களில் தூங்க முடியாத அளவுக்கு கொசுக்கடி நம் உயிரை வாங்கும். 

பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரையும் ஒருக்கை பார்க்கும். கொசுக்கள் மூலமாக மக்களுக்கு டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா, யானைக்கால் போன்ற நோய்கள் பரவுகின்றன. 

Tap to resize

Latest Videos

அதனால் கொசுக்களை விரட்டுவது அல்லது கட்டுப்படுத்துவது நல்லது. கொசுத் தொல்லைக்கு வீட்டில் கொசுவர்த்தி சுருள், கொசு மேட், போன்றவற்றை பயன்படுத்துவது நம் உடலுக்கு ஆபத்து. ஓடோமாஸ் போன்ற பேஸ்டுகளை உடம்பில் தடவலாமா?  என்றால் அதுவும் தவறுதான். அதிலும் கெமிக்கல் தானே இருக்கிறது. அதிலும் சைட் எஃபக்ட்ஸ் இருக்கதான் செய்யும்.

வேறு என்ன தான் செய்ய சொல்கிறீர்கள் என்று கேட்கிறீர்களா? இருக்கவே இருக்கு இயற்கை வழி. முன்னோர்கள் கொசுக்களை எப்படி விரட்டினார்களோ? அதையே நீங்களும் செய்யலாமே. இங்கு இரண்டு வழிகள் இருக்கு. உங்களுக்கு எது விருப்பமோ அதை செய்யுங்கள்.

முதல் வழி: 

மண் சட்டி ஒன்றில், தீ உண்டாக்கி அதில் வேப்பிலை போட்டு, அதன்மெல் மஞ்சள் தூள் தூவினால் அதிலிருந்து வெளியேறும் புகை மூட்டம் கொசு மட்டுமின்றி மழைக் காலத்தில் வீட்டுக்குள் வரக் கூடிய அனைத்துப் பூச்சிகளையும் விரட்டும். குளிர்காலத்தில் நமக்கு வரும் மூச்சுப்பாதை கோளாற்றை இந்தப் புகை சரி செய்யும். சுற்றுசூழலுக்கும் எந்த கேட்டையும் ஏற்படுத்தாது.

இரண்டாம் வழி:

சாயுங்கால நேரத்தில் தேங்காய் நார்களை எரித்து வீடு முழுக்க அதன் புகையைக் காட்டலாம். இதனால் ஒரு கொசுகூட வீட்டில் இருக்காது. இந்த நார்களின் புகையால் உடலுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

நீங்கள் எந்த வழியை பின்பற்ற போகிறீர்கள்???

click me!