ஆண்குறி பகுதிகளில் சிவந்து காணப்படுதல், அரிப்பு எடுத்தல் மற்றும் செதில்கள் போல இருப்பது உள்ளிடவை பூஞ்சை தொற்றுப் பாதிப்புகளாக கூறப்படுகிறது. ஒரு சிலருக்கு சொரியாசிஸ் பிரச்னை இருந்தாலும், குறிப்பிட்ட அறிகுறிகள் தோன்றும். கடினமான சோப்பை பயன்படுத்துவது, பிறப்புறுப்பு பகுதிகளில் சுகாதாரம் பேணுவதில் குறைபாடு, பால்வினை நோய் தாக்கம் போன்ற காரணங்களாலும் பாதிபுகள் உருவாகும்.
ஆண் குறி முன் தோல் வெடிப்பு பிரச்னைக்கான முக்கிய அறிகுறிகளாக இருப்பது, ஆண்குறி தூவரம் அடைபடு பலவிதமான வேதனைகள் உண்டாகும். மேலும் அரிப்பு, எரிச்சல், குருகுருப்பாக இருப்பது, அதிகளவில் வியர்ப்பது, பரு போன்ற கட்டிகள் உண்டாவது, தேகம் நலிந்து காணப்படுவை ஆகும். நீரிழிவு பிரச்னை கட்டுக்குள் இல்லாமல் இருந்தாலும் ஆண்குறி முன் தோலி வெடிப்பு ஏற்படும்.
இனிமேல் தலைக்கு குளிக்க ஷாம்பூ வேண்டாம்- இது இருந்தால் போதும்...!!
உங்களுக்கு சக்கரை இருந்தால், சிறுநீர் கழிக்கும் போது உடனடியாக ஆண்குறியையும் சுத்தம் செய்திடுங்கள். சக்கரையுள்ளவர்கள் சீறுநீர்க் கழித்துவிட்டு வந்தால், அந்த துளிகளில் கிருமிகள் அதிகம் இருக்கும். அவை வெளியே வரும் போது சீக்கரம் இனப்பெருக்கம் செய்துவிடும். இதனால் உங்களுடைய பிறப்புறுப்பு பகுதிகளில் பல்வேறு நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
ஒருவேளை உங்களுடைய ஆணுறுப்பு முன் தோல் இறுக்கமாக இருந்தால், அது ஆணுறுப்பு மொட்டு மேலாக முன்தோலை பின்னோக்கி இழுக்க முடியாத நிலைமையை ஏற்படுத்தும். அதன்காரணமாக வியர்வை, அழுக்கு மற்றும் சிறுநீர் ஆகியவை முன்தோலுக்குக் கீழ் சேரும். இதனால் தோலழற்சி போன்ற பெரிய பிரச்னை ஏற்படக்கூடும்.
துர்நாற்றம் வீசும் இடங்களுக்குச் சென்றால் எச்சில் விழுங்கலாமா? கூடுதா?
சில வகையான பாலுறவு வாயிலாக நோய்த்தொற்றுக்கள், எஸ்.டி.ஐ பாதிப்புகள் காரணமாக தோல் அலர்ஜியை ஏற்படுத்தலாம். ஒருவேளை உங்களுக்கு சிறுநீர் குழல் அழற்சி நோய் இருந்தால், ஆணுறுப்பின் மொட்டுத் தோல் வீக்கத்தை ஏற்படலாம். சிறுநீர் கழிக்கும் போது வேதனை ஏற்படுவது மற்றும் ஆண்குறியில் கசிவு ஏற்படுவது போன்றவை முக்கிய அறிகுறிகளாகும்.
ஆண்குறியில் எந்தவிதமான மாற்றங்கள் உணர்ந்தாலும் உடனே மருத்துவரை அணுகுங்கள். சில ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் ஆணுகுறியில் பாதிப்பு ஏற்படலாம். குறிப்பிட்ட சில பிரச்னைகளுக்கு மருந்துகள் உட்கொண்டாலே நல்ல தீர்வை தரும். இதற்கு சங்கடப்பட்டுக் கொண்டு, துரிதமாக சிகிச்சை எடுத்துக்கொள்வது உயிரிழப்பு பாதிப்பை தடுக்கும்.