மலேரியா நோயைக் குணமாக மிளகுத் தூள், 2 பல் பூண்டு மற்றும் தேன் கலந்து வெந்நீர் கலந்து குடித்து வரவேண்டும். இப்படி ஒரு வாரத்திற்கு குடித்து வந்தால் மலேரியாவின் வீரியம் குறைவதை கண்ணூடே காணலாம்.
1.. மலேரியா நோயைக் குணமாக மிளகுத் தூள், 2 பல் பூண்டு மற்றும் தேன் கலந்து வெந்நீர் கலந்து குடித்து வரவேண்டும். இப்படி ஒரு வாரத்திற்கு குடித்து வந்தால் மலேரியாவின் வீரியம் குறைவதை கண்ணூடே காணலாம்.
2.. வில்வம் பூ, துளசி இலை இரண்டையும் சம அளவு எடுத்துக் கொள்ளவும். அவற்றைச் சாறாக்கி அதோடு சிறிது தேனையும் கலந்து தினம் இருவேளை அருந்த வேண்டும். இப்படி அருந்துவதன் மூலம் மலேரியா மட்டுமையான கடுமையான காய்ச்சல் எதுவாக இருந்தாலும் குணமாகும்.
3.. துளசி சாறு மற்றும் இஞ்சிச் சாற்றை சம அளவு எடுத்து தேன் கலந்து குடிக்க வேண்டும். மூன்று வேளை என மூன்று நாட்கள் குடித்து வந்தால் மலேரியா பூரண குணமாகும்.
4.. வல்லாரை, துளசி, மிளகு ஆகியவற்றை கைப்பிடி அளவு எடுத்து அரைத்து சிறு சிறு உருண்டைகளாக்க வேண்டும். அதன்பின்னர் அவற்றை உலர வைத்து காய்ச்சல் உள்ளவர்கள் வேளைக்கு ஒன்று என்று சாப்பிட்டால் மலேரியா குணமாகும்.
5.. துளசிச் செடியின் வாடைக்கு கொசுக்கள் வராது. எனவே, துளசி செடி மலேரியா நோய் பரவுவதைத் தடுக்கும். மலேரியா நோய் உள்ளவர்கள் துளசி இலையை தினமும் மென்று சாப்பிட்டு வந்தால் மலேரியா குணமாகும்.
6.. தினமும் காலையில் பத்து வேப்பிலைக் கொழுந்தை, 5 மிளகுடன் சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் மலேரியா காய்ச்சல் குணமாகும்.
7.. நிலவேம்பு, கண்டங்கத்திரி ஆகிய இரண்டின் வேரையும் கைபிடியளவு எடுத்து அதனுடன் சுக்கு 10 கிராம் சேர்த்து காய்ச்ச வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று முறை குடித்தால் மலேரியா குணமாகும்.
8.. நிலவேம்பு, கண்டங்கத்திரி, சுக்கு, சீரகம் ஆகியவற்றை நீரில் காய்ச்சி காலை, மாலை என மூன்று நாட்கள் குடித்துவர மலேரியா குணமாகும்.