இப்படியெல்லாம் செய்யும் பெண்களை ஆண்கள் விரும்புவது கிடையாது..!!

By Dinesh TG  |  First Published Jan 6, 2023, 12:35 PM IST

பெண்களிடம் ஆண்கள் எதிர்பார்க்கும் சில விஷயங்கள் இருக்கின்றன. அதன்படி குறிப்பிட்ட செயல்பாடுகளில் ஈடுபடுவதை தங்கள் காதலி அல்லது மனைவி நிறுத்திவிட வேண்டும் என்று ஆண்கள் எதிர்பார்க்கின்றனர்.
 


ஆண்கள் பெரும்பாலும் தங்கள் உணர்ச்சிகளை அதிகமாக வெளிப்படுத்த மாட்டார்கள். குறிப்பாக, அழுகையை அடக்குவதில் மிகுந்த கவனம் செலுத்துவார்கள். பெண் துணைக்கு எல்லாம் தெரிந்திருக்கும், ஆனாலும் அவர்களுக்கும் தெரியாத சில பழக்கங்கள் ஆண்களிடம் இருக்கும். அதே பெண்களிடம் ஆண்கள் சொல்லாத ஆனால் அவர்கள் விரும்பும் சில விஷயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஆண்கள் தங்கள் துணையிடம் விரும்பும் சில நடவடிக்கைகள் உள்ளன. அது தெரியாமல் போனால், உறவு கூட பாதிக்கப்படக் கூடும். அதை ஆண்கள் வெளிப்படையாக சொல்லவும் மாட்டார்கள். பெண்கள் தான் அவர்களுடைய நடத்தையை வைத்து புரிந்துகொள்ள வேண்டும். அந்த வகையில் பெண்களிடம் ஆண்கள் சொல்லாமல் எதிர்பார்க்கும் சில விஷயங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

சிறிய விஷயங்களை பெரிதாக்கக் கூடாது

Tap to resize

Latest Videos

undefined

சிறிய விஷயங்களை மிகைப்படுத்தாமல் இருப்பது முக்கியம். இது ஆண்கள் அதிகம் விரும்பாத ஒன்று. சண்டையோ, தகராறோ ஏற்படும் போது, ​​தேவையில்லாமல் விஷயத்தை இழுத்தடிக்காமல், தீர்வு காண்பது அவசியம். பெண்கள் வாக்குவாதத்தை விட்டுவிட மறுத்து, அதை இழுத்துச் செல்லும்போது, ​​​​ஆண்கள் மிகவும் விரக்தி அடைகின்றனர்.

எப்போதும் பேசாமல் இருப்பது

எல்லா பெண்களும் எப்போதும் ஆண்களுடன் பேச விரும்புவார்கள். அதிகமாக பேசுவது ஆண்களை தயங்க வைக்கிறது. பொதுவாக ஆண்கள் எதையாவது ஆழமாக சிந்திக்கும்போது அமைதியாக இருப்பார்கள். ஆனால் பெண்கள் இதைத் தவறாகப் புரிந்துகொண்டு ஏதோ சரியில்லை என்று நினைத்துவிடுகின்றனர். ஆனால் உண்மையில் அப்படி இல்லாமல் இருக்கலாம். பெரும்பாலான ஆண்கள் சிறிது நேரம் அமைதியாகவும் தனியாகவும் இருக்க விரும்புகிறார்கள். 

யதார்த்தமற்ற எண்ணங்கள்

காதல் திரைப்படங்கள் மற்றும் கதைகளைப் பார்க்கும் மற்றும் படிக்கும் பெண்கள் தங்கள் துணையிடம் யதார்த்தமற்ற அணுகுமுறைகளை எதிர்பார்க்கின்றனர். இந்தப் படங்களின் மூலம் பெண்கள் உண்மைக்கு புறம்பான விஷயங்களைக் கூட நிஜ வாழ்க்கையில் கொண்டு வர முயற்சிக்கிறார்கள். அதை நிஜ வாழ்வில் செயல்படுத்த முடியாது. இதை புரிந்துகொள்ளாமல் பெண்கள் நடந்துகொண்டால் ஆண்களுக்கு அதிகளவில் கோபம் வரும்.

கள்ளஉறவில் இருந்து வெளியேற பலரும் தயங்குவது ஏன்? இதோ 4 காரணங்கள்..!!

தேவையில்லாத எதிர்பார்ப்புகள்

சில நேரங்களில் பெண்கள் ஆண்கள் தங்களுக்குப் பிடித்தமான விஷயங்களைச் செய்ய விரும்புகிறார்கள். ஆனால் ஆண்கள் அதை மதிக்காமல் நடந்துகொண்டால், பெண்கள் சாமியாடுவிடுவார்கள். இதை தான் செய்ய விரும்புகிறேன் என்று பெண்கள் நேரடியாக சொல்லவும் மாட்டார்கள், தெரியப்படுத்தவும் மாட்டார்கள். இதனால் திடீரென்று மனைவி அல்லது காதலி சண்டைக்கு வருவது ஆண்களை குழப்பமடையச் செய்துவிடும். இப்படி செய்யும் பெண்களை பெரும்பாலான ஆண்கள் விரும்புவது கிடையாது.

நேர விரயம்

தான் தயாராவதற்கு அதிகநேரம் எடுத்துக்கொள்ளும் பெண்களின் குணத்தை ஆண்கள் விரும்புவது கிடையாது. பெண்கள் தயாராவதற்கு 10 நிமிடங்கள் தேவை என்று கூறுகிறார்கள், ஆனால் முடி, அலங்காரம் மற்றும் உடை என அனைத்துக்கும் ஒரு மணிநேரம் வரை எடுத்துவிடுகிறார்கள். இதனால் வெளியே செல்ல தயாராகி நிற்கும் ஆண்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் உருவாகிறது. இதை ஆண்கள் அனைவரும் முற்றிலும் வெறுக்கிறார்கள். ஆனால் எல்லா பெண்களும் அப்படி இருப்பதில்லை. மாறாக, ஆண்களும் தயாராக நேரம் விரயம் செய்வதும் அதிகமாகவே உள்ளது.

click me!