நம் நாட்டில் பாலியல் குறித்த சிந்தனை எப்போதும் மறுக்கப்படக்கூடிய ஒன்றாகவே நிறுவப்பட்டு வருகிறது. பாலியல் விஞ்ஞான ரீதியாக புரிந்துகொள்ளும் தன்மை கொண்டது. அதுகுறித்து தொடர்ந்து பொதுத்தளத்தில் பேசினால் மட்டுமே விவாதங்கள் உருவாகும் என்பதே நிதர்சனம்.
இந்தியாவில் பிறந்த காமசூத்திரம், உலகத்துக்கே பாலியல் மீதான புரிதலை எடுத்துரைத்தது. ஆனால் இந்தியாவில் காமத்தைப் பற்றி பேசினாலே தவறு என்கிற நிலைபாடு உள்ளது. அதுசார்ந்த அறிவின் மீதும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. பாலியல் அறிவற்ற சமூகத்தில் என்னென்ன சீரழிவுகள் ஏற்படுமோ, அது தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இதுதொடர்பாக உடலியலாளர்களும் உளவியலாளர்களும் கருத்தை முன்வைக்கும் போது, அவர்கள் தாக்கப்படுகின்றனர் அல்லது விமர்சனம் என்கிற பெயரில் ஓரம்கட்டப்படுகின்றனர். நம் நாட்டில் பாலியல் குறித்த சிந்தனை எப்போதும் மறுக்கப்படக்கூடிய ஒன்றாகவே நிறுவப்பட்டு வருகிறது. பாலியல் விஞ்ஞான ரீதியாக புரிந்துகொள்ளும் தன்மை கொண்டது. அதுகுறித்து தொடர்ந்து பொதுத்தளத்தில் பேசினால் மட்டுமே விவாதங்கள் உருவாகும் என்பதே நிதர்சனம்.
இந்திய அரசியலமைப்பு சொல்வது என்ன?
இந்திய அரசியலமைப்பின் படி, இயற்கைக்கு மாறான வகையில் உடலுறவு கொள்வது சட்டத்துக்கு எதிரானது, அதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இதில் ”இயற்கைக்கு மாறான” என்கிற சொற்றொடருக்கு விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. அதுதொடர்பாக வரக்கூடிய எந்த வாசகத்திலும் தெளிவில்லை. இதுதான் குழப்பத்துக்கு காரணமாக உள்ளது. இந்த குழப்பம் தங்கள் வாழ்வுரிமையை பாதிப்பதாகவும் எனவே இந்த சட்டப்பிரிவை திருத்த வேண்டும் என்கிற குரலகள் பரவலாக எழுந்து வருகின்றன.
திருநங்கைகள்
பாலுறவு உடலை மட்டும் சார்ந்தது அல்ல. அதில் மனமும் முக்கிய பங்கு வகிக்கிறது. திருநங்கைகள் மாதிரி உறுப்புகளை கொண்டிருந்தாலும், அவர்களுக்கும் பாலுணர்வு வேட்கை இருக்கும் என்பதே மருத்துவம் கூறும் உண்மை. ஆனால் திருநங்கைகல் பாலியல் உறவில் ஈடுபடும் போது, மேற்கூறிய சட்டத்தின் பார்வையில் அது குற்றமாகவே கருதப்படும் என்பது தான் நிதர்சனம். இயற்கையின் பங்களிப்பாகவே திருநங்கைகள் சமுதாயம் இருக்கின்றனர். அவர்களுக்கு பாலுணர்வு வேட்கை இருக்காது என்று கூறுவது தவறு, அதேபோன்று அப்படிப்பட்டவர்களுக்கு பாலுணர்வு வேட்கை இருக்கக்கூடாது என்றும் எதிர்பார்க்கக் முடியாது
ஓரினச்சேர்க்கையாளர்கள்
இந்தியாவில் பாலியல் குற்றம் குறித்து விளக்கம் அளிக்கும் சட்டப்பிரிவு 377-ல், ஓரினச்சேர்க்கை நடவடிக்கை குற்றச்செயல் கிடையாது என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு கூறுகிறது. ஆனால் அது சமுதாயத்தில் எந்தவிதத்திலும் பிரதிபலிக்கவில்லை. திருநங்கைகளை ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களை சகித்துக்கொள்பவராகக் கூட இல்லை. ஓரினச்சேர்க்கை என்பது இயற்கைக்கு மாறானது என்பது பலருடைய கருத்தாக உள்ளது. ஆனால் தன்பாலின இச்சை இல்லாதவர்கள் யாரையும், இத்தகைய பாலுறவுக்கு உட்படுத்த முடியாது என்று ஓரினச் சேர்க்கையாளர்கள் கூறுகின்றனர். இதனை மருத்துவம் மற்றும் உளவியல் நிபுணர்களும் ஆதரிக்கின்றனர்.
துணையுடன் மற்றொருவர்
பாலியல் உறவு என்பது சினிமாக்களிலும் கதைகளிலும் கேட்கப்பட்ட சம்பவங்களாக இருப்பது கிடையாது. உடல் ரீதியான வேட்க்மை மட்டுமில்லாமல் மண ரீதியான செயலாக்கமும் பாலியல் உறவில் உள்ளது. துணை அல்லது காதலன் உடன் வேறொருவரும் சேர்ந்து உறவில் ஈடுபடுவதும் இயற்கைக்கு மாறான உறவாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் பரஸ்பர சம்மதத்துடன் அத்தகைய உறவு ஏற்படும்போது, குற்ற தண்டனைக்கு உட்படுத்த முடியாது. ஆனால் ஒருவரின் விருப்பத்திற்கு எதிராக, அப்படிப்பட்ட உறவைக் கோருவது அல்லது கட்டாயப்படுத்துவது முற்றிலும் தவறானது என்பதில் இந்திய தண்டனைச் சட்டம் உறுதியாக நிற்கிறது.
பாலியல் மீதான புரிதல் முக்கியம்
உங்களுடைய பாலியல் வேட்கையை நீங்கள் முற்றிலுமாக அறிந்து வைத்திருப்பது முக்கியம். இதுகுறித்து உங்களுடைய வருங்கால துணையிடம் பேசி முடிவைத் தெரிந்துகொள்வது தெளிவுப்பெற உதவும். ஒருவேளை உங்களுடைய வேட்கைக்கு எதிரான வகையில் அவர் செயல்படக் கூடியவராக இருந்தால், அத்தகைய நபருடனான உறவை முறித்துக் கொள்வது நல்லது. ஏனென்றால், உங்கள் உணர்வுகளைப் பற்றி கவலைப்படாத ஒருவர், உங்களை நேசிக்கவும் மாட்டார். இந்த உறவு திருமணம் வரை சென்றாலும், அது நீண்ட நாள் நீடிக்காது. ஒருவேளை உங்களுடைய துணை தொடர்ந்து துன்புறுத்தி வந்தால், அவர் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கும் பதிவு செய்யலாம்.