உடலுறவுக்குப் பிறகு, உங்கள் துணையை இறுக்கமாக அணைத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது. உடலுறவுக்குப் பிறகு அரவணைப்பது உங்கள் பிணைப்பு மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு எவ்வாறு சிறந்தது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
உடலுறவுக்குப் பிறகு கட்டிப்பிடிப்பது உங்கள் பிணைப்பை வலுப்படுத்துவதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும் என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் துணையுடன் நீங்கள் உடலுறவுகொண்ட பிறகு, தூங்கவோ அல்லது எழுந்து வேறு வேலைகளை ஈடுபடுவதையோ செய்ய வேண்டாம். அதற்கு பதிலாக, உடலுறவுக்குப் பிறகு, உங்கள் துணையை இறுக்கமாக கட்டிப்பிடித்துக் கொள்ளுங்கள். அந்த அரவணைப்பின் மூலம் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன. உடலுறவுக்குப் பிறகு அரவணைப்பது பல உளவியல் மற்றும் உடல் நலன்களைக் கொண்டுள்ளது. மேலும் உங்கள் உறவின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம். உடலுறவுக்குப் பிறகு அரவணைப்பதால் ஏற்படும் நன்மைகளை தெரிந்து கொள்வோம்.
உடலுறவுக்குப் பிறகு கட்டிப்பிடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
துணையை கட்டிப்பிடிப்பது அல்லது உங்கள் துணையுடன் தூங்குவது உடலில் ஆக்ஸிடாஸின் அல்லது காதல் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கிறது. பாலியல் உறவின் கிளைமேக்ஸின் போது அதன் சுரப்பு உச்சமடைகிறது. இதன்மூலம் உங்களுடைய மனநிலையை மேம்படுகிறது மற்றும் உங்கள் துணையுடனான உறவை வலுப்படுத்துகிறது.
வலுவான உறவு
ஆக்ஸிடாஸின் என்கிற ஹார்மோன் ‘காதல் ஹார்மோனாக’ கூறப்படுகிறது. இது முறையாக சுரக்கும் போது தான் துணையின் மீதான அன்பு கூடுகிறது. உடலுறவுக்குப் பிறகு கட்டிப்பிடிப்பது உங்களுக்கு துணை மீதான நம்பிக்கை மற்றும் அன்பு அதிகரிக்கிறது. உங்கள் துணையுடன் உங்கள் உறவை வலுப்படுத்த விரும்பினால் உடலுறவு சிறந்த வழியாகும்.
இதையும் படிங்க: பெண்களை இப்படி கிஸ் அடிச்சா சொக்கி போவாங்க.. இதை ட்ரை பண்ணி பாருங்க!
மனநிலை அமைதி அடையும்
உங்கள் துணையுடனான பிணைப்பு உங்கள் உடலில் ஆக்ஸிடாஸின், காதல் ஹார்மோனை வெளியிடுகிறது. ஆக்ஸிடாஸின் வெளியீடு உங்கள் மனநிலையை அதிகரிக்க உதவுகிறது. இது பாலியல் வாழ்க்கையை மிகவும் இனிமையானதாக மாற்றுகிறது.
இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது
உயர் இரத்த அழுத்தம் மாரடைப்பு பிரச்சனைகளை ஏற்படுத்தும். உங்கள் துணையிடம் இருந்து கிடைக்கும் அரவணைப்பு உங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இதனால் இருதய நோய் அபாயம் ஏற்படுவது குறைகிறது. ஒரு ஆய்வின் படி, ஒரு துணையுடன் வழக்கமான உடலுறவு இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்த உதவும் என்று தெரியவந்துள்ளது.
மன அழுத்தம் இருக்காது
பெரும்பாலான மக்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். உடலுறவுக்குப் பிறகு கட்டிப்பிடிப்பது மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவும். கட்டிப்பிடிப்பதில் இருந்து வெளியாகும் ஆக்ஸிடாசின் கார்டிசோல் என்ற மன அழுத்த ஹார்மோனைக் குறைப்பதன் மூலம் மனம் அமைதி அடைகிறது. ஆக்ஸிடாஸின் பதட்டத்தின் அறிகுறிகளைப் போக்க உதவும். இந்த ஹார்மோன் உங்கள் மனதை அமைதிப்படுத்துகிறது மற்றும் உங்களை எளிதாக தூங்க வைக்கிறது. இதன்மூலம் உங்கள் மனம் மகிழ்ச்சி அடைகிறது.
இதையும் படிங்க: Relationship tips: நீங்க பண்ணுறது உண்மையான காதலா? முதலில் இதை தெரிந்து கொள்ளுங்கள்...!