அதள பாதாளத்துக்கு போன பாலியல் வாழ்க்கையை தூக்கி நிறுத்துவதற்கான டிப்ஸ்..!!

By Dinesh TG  |  First Published Jan 25, 2023, 2:40 PM IST

நம்முடைய குறிப்பிட்ட  பழக்கவழக்கங்கள் பாலியல் வாழ்க்கையை பாதிப்படைய செய்யும். அது அகக்காரணங்களாக இல்லாமல் புறக் காரணங்களாகவும் இருக்கலாம். 
 


உங்களுக்கு உடல்நலன் சார்ந்த பிரச்னைகள் எதுவுமில்லாமல் இருந்து, ஆனாலும் உங்களுடைய பாலியல் வாழ்க்கை மந்தமாகவோ அல்லது பூஜ்ஜியமாகவோ இருந்தால், அதற்கு குறிப்பிட்ட இந்த 5 பிரச்னைகள் தான் காரணமாக இருக்கும். நீங்கள் எதிர்கொள்ளும் இந்த பிரச்னைகளை குறித்தும், அவற்றுக்கு எளிய முறையில் தீர்வு காண்பதை பற்றியும் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

போனுடன் உறவு

Latest Videos

சதா சர்வ காலமும் போனுடன் இருப்பது, ஐபேட் அல்லது போனை அரவணைத்துக் கொண்டே உறங்குவது போன்றவது பாலியல் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விடும். நீங்கள் ஒன்றாக இருக்கும்போது உங்கள் உணர்ச்சிகள் பிரிக்கப்படக்கூடாது. இதை பாலியல் சார்ந்த பிரச்னைகளை கையாளும் அனைத்து மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர். அதிகளவில் கேஜெட்ஸுகளுடன் நேரத்தை செலவிடும் நபர்கள், தங்களுடைய துணை அல்லது காதலியுடன் குறைவாக உடலுறவு கொள்கின்றனர் என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.

தாமதமான உணவு

நீங்கள் தாமதமாக இரவு உணவைச் சாப்பிடும்போது, உடல் மேலும் சோர்வடைந்து போகிறது. இன்றைய காலத்தில் அலுவலகங்களில் வேலை பார்க்கும் பலரும், இரவு நேரங்களில் அதிகளவு சாப்பிடுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதனால் உடலில் சோர்வு ஏற்பட்டு ஓய்வை வேண்டுகிறது. இதனால் தூங்குவதற்கு மட்டுமே எண்ணம் வரும். நீங்கள் இலகுவாக சாப்பிட்டு, படுக்கைக்கு வரும் போது, அது ஆற்றலை வழங்குகிறது. ஒருவேளை இரவு படுத்தவுடன் தூங்க வேண்டும் என்று தோன்றினால், மாலையில் உடலுறவில் ஈடுபடலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மது நுகர்வு

செக்ஸ் டிரைவ் குறைந்துபோவதற்கான மற்றொரு காரணம் மது நுகர்வாகும். பொதுவாக வெளியுலகம் சார்ந்த பிரச்னைகளை சமாளிக்க மது அருந்துபவர்கள் பலர் உள்ளனர். அதனால் அவர்களுக்கு மன அழுத்தம் உருவாகிறது. இது அவர்களுக்கு செக்ஸ் மீதான ஆர்வத்தை குறைக்கிறது. அளவான ஆல்கஹால் பயன்பாடு என்பது நமது உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது. ஆனால் அதை நீங்கள் அளவுக்கு அதிமாக அருந்தினால், உங்களுடைய உடல்நலனையும் பாதித்து மற்றும் மனநலனையும் கெடுத்து விடுகிறது.

பரிதாபத்தால் உடலுறவுக் கொள்ளும் பார்டனருடன் வாழ்கிறீர்களா..??

புகைபிடிப்பது

புகைபிடித்தல் உங்கள் நுரையீரலுக்கு மட்டுமல்ல, உங்கள் பாலியல் வாழ்க்கைக்கும் மோசமானது. நிகோட்டின் நுகர்வு என்பது, ஆண்களுக்கும் பெண்களுக்கும் குறைவான பாலியல் தூண்டுதலை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. உங்களுடைய பார்டனர் அல்லது உங்களுக்கு புகைப்பிடிக்கும் பிரச்னை இருந்தால், அதை நிறுத்துவதற்கு முயற்சி செய்யுங்கள். இதன்மூலம் உங்களுடைய பாலியல் வாழ்க்கை மேம்படுகிறது.

படுக்கையில் மூன்றாம் நபர்

முடிந்தால், உங்கள் படுக்கையில் செல்லப்பிராணிகளை படுக்க வைக்க வேண்டும். பலரும் வளர்ப்பு நாய் மற்றும் பூனைகளை குழந்தைகளாக பார்க்கின்றனர். ஒருவேளை நீங்கள் உறவில் ஈடுபடும் போது, அவை விழித்துக்கொண்டால் உங்களால் பாலியல் செயல்பாட்டை தொடர முடியாமல் போகலாம்.  செக்ஸ் ஒரு சிறந்த டென்ஷன் நிவாரணியாகும். அதில் நீங்கள் ஈடுபடும் போதும் செல்லப்பிராணியை விலக்கி வைப்பது நல்லது. 

click me!