மகிழ்ச்சியான வாழ்க்கை வேண்டுமா? அப்ப இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. சுதா மூர்த்தி சொன்ன டிப்ஸ்..

By Asianet Tamil  |  First Published Aug 5, 2024, 7:20 PM IST

குழந்தை வளர்ப்பு, திருமண வாழ்க்கை,  நிதி திட்டமிடல் குறித்து பேசி வரும் சுதா மூர்த்தி தற்போது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உதவும் அறிவுரையை வழங்கி உள்ளார்.


கல்வியாளர், எழுத்தாளர் மற்றும் பரோபகாரர் என பன்முகங்களை கொண்டவர் சுதா மூர்த்தி. இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் நிறுவனரும் நாராயண மூர்த்தியின் மனைவியான சுதா மூர்த்தி பலருக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் உரையாற்றி வருகிறார்.  குழந்தை வளர்ப்பு, திருமண வாழ்க்கை நிதி திட்டமிடல் மற்றும் சேமிப்பு தொடர்பாக பேசி வருகிறார். சுதா மூர்த்தியின்  உரைகள் பலருக்கும் ஊக்கமளிப்பதாக இருந்துள்ளது. அந்த வகையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில், மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உதவும் டிப்ஸ் குறித்து பேசி உள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் “ மனித ஆசைக்கு எல்லையே இல்லை. அதிகமாக ஆசைப்படுபவர்கள் குறை கூறிக்கொண்டே இருப்பார்கள். சிங்கிள் பெட்ரூமில் இருப்பவர்கள் டபுள் பெட்ரூம் வேண்டும் ஆசைப்படுவார்கள், லட்சக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால் அவர்களுக்கு எது கிடைத்தாலும் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள். ஒருவருக்கு என்ன கிடைக்கிறதோ அதை வைத்து திருப்தி அடைந்து, அதை மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டும்.” என்று கூறினார். 

Tap to resize

Latest Videos

நீங்களும் தனித்தனியாக உறங்கும் தம்பதியா? இனி அந்த தவறை செய்யாதீங்க.. பல பிரச்சனைகள் வரலாம்..

மேலும் தனது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் எப்படி மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டேன் என்பது குறித்தும் பேசினார். அப்போது “ நான் எப்போதும் குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பேன். வீடு மற்றும் குழந்தைகளுடன் இருக்க நான் விரும்புவேன். நான் பகுதி நேர வேலைக்குச் சென்றேன். அந்த நேரத்தில் நான் வேலைக்குச் செல்ல வேண்டியிருந்தது. நான் காலை 9 மணி முதல் 12 மணி வரை விரிவுரையாளராகப் பணிபுரிந்தேன். அதில் எனக்கு சலிப்பு ஏற்பட்டதில்லை என்றும் கூறினார்.

Parenting Tips: புளூ பேபியா? அம்மாக்களே பயமோ பதற்றமோ வேண்டாம்.. என்ன செய்தால் காப்பாற்றலாம்?

எனது நாராயண மூர்த்தியிடம் பணம் இருக்கிறதா இல்லையா என்று நான் இதுவரை நினைத்ததில்லை. அவரிடம் பணம் இருந்தாலும் இல்லை என்றாலும் அவர் மீது நான் வைத்திருந்த அன்பு குறைந்ததில்லை. பிஸினஸில் தோல்வி ஏற்பட்டாலும் நாங்கள் கவலைப்பட்டதில் அப்போது புனே மாடல் காலனியில் டபுள் பெட்ரூம் வீடு இருந்தது. அது எனக்கு ஒரு பங்களா போல இருந்தது. அந்த நேரத்தில் ஒரு மாடல் காலனியில் இரண்டு படுக்கையறை அபார்ட்மெண்ட் என்பது சிறிய விஷயம் அல்ல. 

வாழ்க்கையில் ஏற்படும் மோசமான சூழ்நிலையையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். கிடைத்ததை அனுபவிக்க வேண்டும்.  வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் ரசித்து, மகிழ்ச்சியாக வாழ்க்கையை வாழ் வேண்டும். கல்லூரி பேராசிரியையாக இருந்த அந்தக் காலத்தை ரசித்தேன். அம்மாகவும், மனைவியாகவும் வீட்டில் இருந்த காலக்கட்டத்தையும் நான் ரசித்தென்.  இப்போது ஒரு பாட்டியாக நான் இந்த நாட்களை ரசிக்கிறேன். உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு என்ன கிடைத்தாலும் அதை சிறப்பாக செய்து முடியுங்கள். அந்த நேரத்தை மகிழ்ச்சியாக அனுபவியுங்கள்.. இது தான் என் வாழ்க்கையின் தத்துவம்” என்று கூறினார்.

click me!