பாலியல் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு மன அழுத்தம் முக்கிய காரணமாக உள்ளது. இதனால் விந்தணு மற்றும் பாலியல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். அதிக அளவு மன அழுத்தம் கொண்ட ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
உடல்நலப் பிரச்னைகளுக்கு மதிப்பு கொடுக்கும் நாம், மனநல ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால் கண்டுகொள்வது கிடையாது. அதனால் மனநல பாதிக்கப்புகள் பலரால் புறக்கணிக்கப்படும் ஒன்றாகவே உள்ளது. மனச்சோர்வு, பதட்டம், தூக்கமின்மை போன்றவை ஒழுக்கத்தை பாதிக்கும். நம்மை கெட்டவழிகளுக்கு கூட்டிச்செல்லும். அதனால் அன்றாட வாழ்க்கையை சமாளிப்பது கடினமாகும். மேலும் இருதய நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட காரணமாக அமையும். பலருடைய பாலியல் ஆரோக்கிய பிரச்னைகளுக்கு மன அழுத்தம் முக்கிய காரணமாக உள்ளது. இதனுடைய பாதிப்பு காரணமாக விந்தணு ஆரோக்கியம் மற்றும் பாலியல் செயல்பாடுள் தடைபடலாம். ஒருசிலருக்கு இதனால் மலட்டுத்தன்மையும் ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதிக அளவு மன அழுத்தம் கொண்ட ஆண்களுக்கு குறைந்த விந்தணு எண்ணிக்கை, குறைந்த இயக்கம் மற்றும் விறைப்புத்தன்மை குறைபாடு ஆகியவற்றை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனினும் மன அழுத்தப் பிரச்னைக்கு எளிய வழிமுறையில் தீர்வு காண்பது குறித்து பார்க்கலாம்.
நடைப்பயிற்சி
undefined
மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு நன்றாக கையை வீசி நடப்பது ஒரு பயனுள்ள பயிற்சி என்று பலராலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதை அனைத்து வயதினரும் செய்யலாம். புதிய காற்று மற்றும் சூரிய ஒளியைப் பெற நடைபயிற்சி ஒரு சிறந்த வழியாகும். இதனால் ரத்த ஓட்டம் மேம்படுகிறது. எண்டோர்பின்களை வெளியிடுகிறது. இதனால் நம்முடைய மனநிலை அமைதி அடைகிறது.
யோகா
இதன்மூலம் உடல் தளர்வுற்று, கவனம் ஊக்குவிக்கப்படுகிறது. தொடர்ந்து யோகா செய்து வருவது மன அழுத்தத்தை குறைக்கிறது. தினமும் காலையில் ஒரு மணிநேரம் என்று யோகா செய்வதற்காக ஒதுக்குங்கள். இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது செய்யும். அதேபோல யோகா செய்யும் போது, உணவு கட்டுப்பாட்டில் இருப்பது நல்ல பலனை தரும்.
நண்பர் வட்டம்
மன அழுத்தம் ஏற்படும் போது, நாம் யாருடனாவது தொடர்பு ஏற்படுத்திக்கொள்வது நல்லது. அப்போது அந்த நபரிடம் நமக்கு ஏற்படும் பிரச்னைகளை வெளிப்படையாக பேசுவது மனதுக்கு அமைதியை தரும். நாம் திறம்பட தொடர்பு கொள்ளும்போது நமது தேவைகளையும் விருப்பங்களையும் தெளிவாக வெளிப்படுத்த முடியும். இது நாம் உணரும் மன அழுத்தத்தை குறைக்க உதவும்.
தியானம்
மெதுவான, ஆழமான சுவாசம் இதயத் துடிப்பைக் குறைக்கவும் தசைகளை தளர்த்தவும் உதவுகிறது. நினைவாற்றலை ஊக்குவிப்பதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கவும் தியானம் உதவுகிறது. மன அழுத்தப் பிரச்னை கொண்டவர்கள் தினமும் காலையில் எழுந்ததும், யோகா முடித்துவிட்டு தியானம் செய்வதில் ஈடுபடுங்கள். இது எப்போதும் உங்களுக்குள் ஒரு அமைதி மற்றும் தெளிவை தரும்.
உடலுறவுக்கு பின் சிறுநீர் கழிக்க வேண்டும்- ஏன் தெரியுமா?
உறக்கம்
இரவில் நன்றாக தூங்குவதில் பல நன்மைகள் உள்ளன. அதன்மூலம் மன அழுத்தம் குறைக்கிறது. நீங்கள் நன்றாக ஓய்வெடுக்கும்போது, உங்களுடைய உறுப்புகளும் நன்றாக ஓய்வு பெறுகின்றன. இதன்மூலம் மனதிலும் உடலிலும் அமைதி நிலவுகிறது. அதனால்தான் தினமும் குறைந்தது எட்டு மணிநேரம் தூங்குவது அவசியம். மன அழுத்தத்தைக் குறைக்கவும், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தவும் போதுமான தூக்கம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.