முன்னரே பிரேக் - அப் சூழலை கண்டறிவது எப்படி? இதோ வழிமுறைகள்..!!

By Dinesh TGFirst Published Sep 17, 2022, 12:09 AM IST
Highlights

உங்களுடைய அன்புக்கு உரித்தான துணை, தங்களிடம் உணர்வுகளை பகிர்ந்துகொள்ளவில்லை என்று தெரியவரும் போது, அது மிகவும் மோசமான மனநிலையை உருவாக்கும். இந்த உறவில் அவருடைய எதிர்ப்புகள் என்ன? நம்மை விட்டு விலக துணை முற்படுகிறாரா? அவர் பிரேக்-அப் தான் வேண்டும் என்று நினைத்தால், அதுதொடர்பாக துணையின் அறிகுறிகள் என்ன? இப்படி உங்களை நீங்களே கேட்டுக்கொண்டு செல்லலாம், அதனால் கவலையும் அதிகரிக்கலாம். ஆனால் நீங்கள் உங்களை இப்படி வருத்திக்கொள்வது மனநலத்துக்கும் உடல்நலத்துக்கும் கேடு. உங்களுடைய துணை காதலில் ஆர்வத்தை இழக்கிறார் என்பதற்கான எச்சரிக்கை அறிகுறிகளை அறிந்துகொள்வது மிகவும் முக்கியம். ஒருவேளை அதுதொடர்பான புரிதலை உருவாக்கிக்கொள்வதில் உங்களுக்கு ஏதேனும் பிரச்னையிருக்குமானால், தொடர்ந்து இந்த கட்டுரையை படியுங்கள். நிச்சயம் உதவியாக இருக்கும். 

தனிமை, விலகல், மாற்றம்

முன்பு உங்களுடைய துணை அற்புதமான நபராக இருந்து, தற்போது அந்த நடத்தையில் மாற்றம் தெரிந்தால், கொஞ்சம் விழிப்புடன் நடந்துகொள்வது முக்கியம். மேலும் உங்களிடம் இருந்து உங்களுடைய துணை உணர்வு ரீதியாக துண்டிக்கப்பட்டு, அதிகம் தனிமையை விரும்பக்கூடியவராக இருந்தாலும் உஷாராக இருக்க வேண்டும். எவ்வளவு முயன்று உங்களிடம் இருந்து அவர் விலகியே இருந்தாலோ அல்லது உங்களுடைய அருகாமையை விரும்பாதவர் போல உணர்வுகளை வெளிப்படுத்தினாலோ, இதற்குமேல் அந்த உறவை நீங்கள் ஒட்டவைக்க முயற்சித்தாலும் பயன் கிடையாது.

ஒன்றுகூடலை தவிர்ப்பது

இணை, காதலி அல்லது காதலனிடம் இருந்து கிடைக்கும் நெருக்கம் அல்லது உறவை தவிர்ப்பது முக்கிய அறிகுறியாகும். உங்களுடன் படுக்கையில் படுக்காமல் விலகி இருப்பது, வெளியிடங்களில் தனியாக அதிக நேரம் செலவிடுவது, தம்பதியாகவோ அல்லது துணையுடன் செல்லவேண்டிய பொது நிகழ்ச்சிகளுக்கு துணையின் அனுமதி அல்லது அறிவிக்கை இல்லாமல் தனியாக செல்வது அடுத்தக்கட்ட அறிகுறிகளாகும். இதுதவிர, தன் மீதான அக்கறையை துணை இழந்துவிடும் போது, உறவின் ஏற்படும் விரிசல் உறுதி செய்யப்படுவதாக மனநல ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.

இயற்கைக்கு மாறான வகையில் உடலுறவு கோரும் துணை- என்ன செய்யலாம்?

தனது வாழ்க்கையில் ஏற்படும் மகிழ்ச்சியான தருணங்களை துணையிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பதும், பிரேக்-அப் செய்வதற்கான முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகிறது. அதாவது உங்களுடைய துணைக்கு பதிவு உயர்வு கிடைப்பது, பணியிடத்தில் ஊதிய உயர்வு கிடைப்பது மற்றும் நல்ல இடத்தில் வேலை அமைவது போன்ற விஷயங்களை துணை உங்களிடம் பகிர்ந்துகொள்ளவில்லை என்றால் காதலன் / காதலி கவனித்தில் கொள்வது முக்கியம். ஏனென்றால், வீட்டை தாண்டி அவர் வெளியிடங்களில் எப்போதும் போல இருக்கிறார், ஆனால் வீட்டளவில் தான் தனிமையில் இருக்கிறார் என்பது புரிய வருகிறது. மேலும் உங்களுடைய நன்மை, தீமைகளில் பங்கெடுக்காமல் இருப்பது மற்றும் உங்களுக்காக பணம் செலவழிக்கவில்லை என்றால் அவர் உங்களை முக்கியமானவர் என்று நினைக்காமல் இருக்கலாம்.

உங்களிடம் நெகட்டிவ் வைப்பரேஷன் இருப்பதுபோல உணர்கிறீர்களா? அப்போது இதப்படிங்க முதல்ல..!!

உங்களுடைய துணையிடம் இருந்து மேற்கூறிய நடவடிக்கைகள் வெளிப்பட்டால், அது காதல் உறவில் விரிசலை ஏற்படுத்த துவங்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இதையடுத்து உங்களுடைய உறவின் தேவையை பொறுத்து காதலை காப்பாற்றிக்கொள்ள முயல்வது உங்களுடைய சாமர்த்தியதில் தான் உள்ளது. துணையின் நடவடிக்கை மூலம் உங்களுக்கு தெரியவரும் முடிவுகளை வைத்து, உங்களுடைய அடுத்தக்கட்ட நகர்வுகளை மேற்கொள்ளுங்கள். அதன்மூலம் துணையின் தேவையையும் காதலின் அருமையையும் அவருக்கு புரியவைக்க முயலுங்கள். இது வெற்றி அடையும் பட்சத்தில், நிச்சயம் உங்களுடைய துணை உங்களை விட்டு விலகாமல் இருபபர். மேலே கூறப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகள் ஆண், பெண் இருபாலரையும் சேரும். 
 

click me!