உடலுறவில் ஆர்வமே இல்லையா? இதை மட்டும் சாப்பிடுங்க.. அசுர பலம் கிடைக்குமாம்..

By Asianet Tamil  |  First Published Aug 6, 2024, 7:07 PM IST

எந்த மருந்து மாத்திரையும் இல்லாமல் ஒரே ஒரு பொருள் மூலம் உங்கள் பாலியல் செயல்பாடுகளை மேம்படுத்த முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?


ஆரோக்கியமான திருமண வாழ்க்கையில் உடலுறவு முக்கிய பங்கு வகிக்கிறது. எனினும் திருமணமான தம்பதிகளுக்கு சில ஆண்டுகளுக்கு பிறகு உடலுறவில் நாட்டம் இல்லாமல் போகலாம். இதற்கு ஒரு நபரின் பாலியல் ஆசை அதாவது செக்ஸ் டிரைவ் குறைவதே காரணம்.

டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்கள் செக்ஸ் டிரைவைக் கட்டுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன. இது நபருக்கு நபர் மாறுபடும், எனவே சரியான அல்லது தவறான லிபிடோ நிலை இல்லாமல் போகும் போது தான் சிலர் வாரம் அல்லது மாதத்திற்கு உடலுறவு கொள்வார்கள். ஆனால் எந்த மருந்து மாத்திரையும் இல்லாமல் ஒரே ஒரு பொருள் மூலம் உங்கள் பாலியல் செயல்பாடுகளை மேம்படுத்த முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் உண்மை தான். அதற்கு பேரீச்சம்பழம் போதும். 

Tap to resize

Latest Videos

undefined

பெண்களுக்கு உடலுறவில் ஆர்வம் இல்லாமல் போக என்ன காரணம்?

பெண்களுக்கு பல காரணங்களால் பாலியல் செயல்பாடுகளில் ஆர்வம் இல்லாமல் போகலாம். குறிப்பாக மாதவிடாய் முடியும் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால், உடலுறவு கொள்ளும்போது அசௌகரியம் ஏற்படலாம், 

கர்ப்ப காலத்தில் மற்றும் கர்ப்பத்திற்குப் பிறகு ஏற்படும் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் காரணமாகவும் பெண்களுக்கு உடலுறவில் ஆர்வம் இல்லாமல் போகலாம். தங்கள் குழந்தையை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதாலும் பெண்களுக்கு பாலியல் ஆசைகள் குறையலாம்.

மாதவிடாய் சுழற்சி: மாதவிடாய் சுழற்சி முழுவதும் ஹார்மோன் அளவுகள் மாறுபடும், இது பெண்களின் பாலியல் ஆசையை பாதிக்கும்.

30 வயசு அச்சு.. ஆனா இன்னும்  திருமணத்தை பற்றி யோசிக்காத ஆண்கள்.. காரணம் தெரிஞ்ச ஷாக்காவிங்க!

இவை தவிர தைராய்டு கோளாறுகள், நீரிழிவு, இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நிலைகள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கும். இவை உடலுறவில் ஆர்வத்தை றைக்கலாம். மனச்சோர்வு, மன அழுத்தம், பதட்டம் ஆகியவையும் பெண்களின் பாலியல் ஆசையை பாதிக்கும். 

உங்கள் துணை உடன் உணர்ச்சி ரீதியாக நெருக்கம் இல்லாதது, அல்லது தீர்க்கப்படாத மோதல்கள் பாலியல் ஆசையைக் குறைக்கும். அதே போல் உங்கள் பாலியல் தேவைகள் மற்றும் விருப்பங்களைப் பற்றி விவாதிப்பதில் சிரமம் அதிருப்தி மற்றும் உடலுறவில் ஆர்வம் குறைவதற்கு வழிவகுக்கும். மேலும் வீட்டு வேலை, குழந்தை பராமரிப்பு அல்லது பிற பொறுப்புகள் ஆகியவற்றால் ஏற்படும் சோர்வு உடலுறவுக்கான ஆர்வத்தை குறைக்கும்.

செக்ஸ் டிரைவை அதிகரிக்க பேரீச்சம்பழம் எவ்வாறு உதவுகின்றன?

பேரிச்சம் பழத்தில் ஆல்கலாய்டுகள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற கலவைகள் உள்ளன, அவை ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாலியல் ஆசையை அதிகரிக்கக்கூடும் என்று BMC இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'இந்த மாதிரி உடலுறவு வைத்தால் விந்து சீக்கிரம் வெளியேறாது' ரொம்ப நேரம் தாங்கும்.. ஒரு ஆணின் பகிர்வு!!

பேரீச்சம்பழத்தில் பிரக்டோஸ், குளுக்கோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற இயற்கை சர்க்கரைகள் உள்ளன, அவை விரைவான மற்றும் நீடித்த ஆற்றலை வழங்குகின்றன. 100 கிராம் பேரிச்சம்பழம் 66.5 கிராம் மொத்த சர்க்கரைகளைக் கொண்டுள்ளது. இது உடல் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. இது உடலுறவு மீதான ஆசையை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பேரிச்சம்பழத்தில் வைட்டமின் ஏ உள்ளது, இது உடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது, பழத்தில் மெக்னீசியம் உள்ளது, இது ஹார்மோன் கட்டுப்பாடு மற்றும் தளர்வு ஆகியவற்றில் பங்கு வகிக்கிறது. இது மன அழுத்தத்தைக் குறைத்து பாலியல் ஆசையை அதிகரிக்கும். பேரீச்சம்பழத்தில் அர்ஜினைன் உள்ளது, இது இரத்த நாளங்களை தளர்த்துவதன் மூலம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

பேரீச்சம்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஹார்மோன் சமநிலையை பராமரிக்க உதவுகின்றன, இது ஆரோக்கியமான லிபிடோவிற்கு முக்கியமானது. எடுத்துக்காட்டாக, கார்டிசோலைக் கட்டுப்படுத்துவதில் மெக்னீசியம் ஒரு பங்கு வகிக்கிறது, கார்டிசோல் என்பது பாலியல் உந்துதலை எதிர்மறையாகப் பாதிக்கக்கூடிய மன அழுத்த ஹார்மோன் ஆகும்.

பேரீசம்பழத்தில் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் உள்ளது, இது மூளையில் செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்கும். அதிக செரோடோனின் அளவுகள் மனச்சோரு மற்றும் பதட்டத்தை குறைக்கிறது. இது பாலியல் ஆசையை அதிகரிக்கும்.

click me!