ஆண்களின் தவறான பாலியல் செயல்பாடாக குறிக்கப்பட்ட நடவடிக்கைகள், பொதுவான தவறுகளாகவே உள்ளன. அது என்னென்ன தவறுகள்? அதை புரிந்துகொள்வது எப்படி? என்பது குறித்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
நாம் பாலியல் உறவு சார்ந்து பேசும்போது யாரும் சரியானவர்கள் கிடையாது. ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய சொந்த வழியில் ஒவ்வொரு புரிதல் இருக்கும். இருப்பினும், பாலுறவு சார்ந்து நாம் அனைவரும் செய்யும் பொதுவான தவறுகள் சில உண்டு. முதலிரவு நேரவின் போது நடக்கும் பாலியல் செயல்பாடுகளில் பெண்களை விடவும் ஆண்கள் தான் பல்வேறு தவறுகளை செய்கின்றனர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், ஆண்களின் தவறான பாலியல் செயல்பாடாக குறிக்கப்பட்ட நடவடிக்கைகள், பொதுவான தவறுகளாகவே உள்ளன. அது என்னென்ன தவறுகள்? அதை புரிந்துகொள்வது எப்படி? என்பது குறித்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
எழுச்சி
எதார்த்த வாழ்க்கையில் பெண்ணுடன் உடலுறவின் ஈடுபடும் போது, அந்த உணர்வு முற்றிலும் வேறுபாடாக உள்ளது. ஆபாசப் படங்களில் பார்ப்பது போன்று, எதார்த்த வாழ்க்கையில் பெண்கள் தங்களுடைய எழுச்சி அல்லது பாலியல் இச்சையை வெளிப்படையாக காட்டுவது கிடையாது. இதை தெரிந்துகொள்ளாமல் மனைவிக்கு அல்லது காதலிக்கு தன்னால் எழுச்சி கொடுக்க முடியவில்லை என்று கூறி குற்ற உணர்வுக்கு சென்றுவிடுகின்றனர். அதேசமயத்தில் பெண்கள் ஏதேனும் பாலியல் செயல்பாடுகளை பரிந்துரைப்பதை ஆண்கள் விரும்புபவது கிடையாது. இதனால் குறிப்பிட்ட பெண்ணின் நடத்தையை சந்தேகிக்கும் அளவுக்கு ஆண்கள் சென்றுவிடுகின்றனர்.
சுத்தம்
அகம் மற்றும் புறம் இரண்டிலுமே ஆண்களை விடவும் பெண்கள் சுத்தமானவர்கள் தான். பெண்கள் தங்களுடைய அந்தரங்க பகுதிகள் மற்றும் மறைவுப் பகுதிகளை அவ்வப்போது சுத்தம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். ஆனால் ஆண்களுக்கு அது எப்போதாவது செய்யும் காரியம் தான். முதலிரவின் போது சுத்தமற்று இருக்கும் ஆண்களை பெண்கள் விரும்புவது கிடையாது. இதனால் அவர்கள் உடலுறவுக்கு மறுக்கின்றனர். உடல் சார்ந்த தேவைகளில் சுத்தமும் முக்கியம் தான். அதை செய்யும் போது இருவருக்கும் பாலியல் உறவு முழுமை அடைகிறது. ஆனால் ஆண்கள் அதை புரிந்துகொள்ளாமல், தாங்கள் முதலிரவில் ஏமாற்றப்பட்டது போல உணர்கின்றனர்.
அலாவல்
பெரும்பாலான பெண்களுக்கு உடலுறவு முடிந்ததும், ஆணின் கைகளை பிடித்தபடி அல்லது நெஞ்சில் படுத்திருந்த படி மணிக்கணக்கில் பேச வேண்டும் என்கிற விருப்பம் உள்ளது. ஆனால் அதேசமயத்தில் உச்சகட்ட எழுச்சி கிடைத்தவுடன் ஆண்கள் படுக்கையை விட்டு எழுந்து குளித்துவிடுகின்றனர். இது பெரும்பாலான ஆண்கள் செய்யும் தவறுகளாக உள்ளன. இதனால் காயப்படும் பெண்கள், தங்களை ஏதோ வேண்டாத பொருளாக ஆண்கள் நடத்துவதாக எண்ணிவிடுகின்றனர். அதனால் ஆண்கள் படுக்கையை பகிர்ந்துகொள்ளும் போது, உங்களுடைய துணையின் பாலியல் உறவு சார்ந்து அனைத்து விருப்பங்களையும் அறிந்து வைத்திருப்பது மிகவும் முக்கியம். அது தெரியாமல் இருந்தால் வாழ்க்கையே கசந்துவிடும் ஆபத்து உள்ளது.
எந்தெந்த நேரத்தில் எல்லாம் உடலுறவில் ஈடுபடக் கூடாது? தெரியுமா உங்களுக்கு??
மதுபோதை
தலைக்கேறிய மதுபோதையுடன் இருக்கும் போது பெரும்பாலான பெண்கள் பாலுறவை விரும்புவது கிடையாது. ஆனால் ஆண்களோ அந்த நேரத்தில் ஒரு பெண்ணை அடைவதை பெரும் வெற்றியாக கருதக்கூடிய பிறவியாக உள்ளன. இது முற்றிலும் முரணானது தான். ஆனால் இதுதான் உண்மை. குறிப்பிட்ட சூழலில் பெண்கள் பாதுகாப்பை விரும்பக்கூடியவர்களாக உள்ளனர். அதனால் அவர்கள் மதுபோதையில் இருக்கும் போது எந்தவிதமான பாலியல் செயலிலும் ஈடுபடுவது கிடையாது. இதற்கு தவறான நிலைபாட்டில் தான் சினிமா படங்களில் காட்டப்படுகிறது. இதை தெரிந்துகொள்ளாமல் ஆண்கள் மதுபோதையில் இருக்கும் போது பெண்களை தொந்தரவு செய்ய வேண்டும். சொந்த மனைவியாகவே இருந்தாலும் இதை மறந்துவிட வேண்டாம்.
ஃபோர்பிளே
முழுமையான பாலியல் உறவுக்கு முன்னதாக, பெண்களுக்கு பாலியல் முன்விளையாட்டில் ஈடுபடுவதை பெரிதும் விரும்புகின்றனர். ஆனால் உடலுறவு என்று வருகையில், ஆண்கள் முழுமையான பாலியல் உறவை தான் எப்போதும் விரும்புகின்றனர். பெண்களின் பாலியல் விருப்பங்களுக்கு அவர்கள் பெரிதும் மதிப்பும் தருவது கிடையாது. இதை தவிர்க்க உடலுறவுக்கு முன் ஈடுபடும் முன் ஆண்கள் தங்களுடைய துணையின் விருப்பத் தேர்வுகளை தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். முன்விளையாட்டு எப்போதும் சிறந்த உடலுறவுக்கு முக்கியமானது! இது பசியைத் தவிர்ப்பது போன்றது. திருமண இரவில் நீங்கள் கொஞ்சம் கிண்டல் செய்து ஒருவருக்கொருவர் உடலை ஆராய வேண்டும். அதன்மூலம் உறவு மேலும் இணக்கமாகும்.