தாந்த்ரீக செக்ஸ் மூலம் கிடைக்கும் சிறந்த தருணம்..!!

By Dinesh TG  |  First Published Dec 31, 2022, 6:46 PM IST

தாந்த்ரீக பாலுறவின் குறிக்கோள் இரண்டு நபர்களுக்கு இடையேயான உறவையும் உணர்வையும் மேம்படுத்துவதே ஆகும். உங்களுக்கு பயன் தரும் வகையிலான தாந்த்ரீக உடலுறவு குறித்த நடைமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
 


சிற்றின்பம் மற்றும் மனதைக் கவரும் உடலுறவு எப்படி இருக்கும் என்பதைப் பற்றி நீண்ட காலமாக மறந்துவிட்ட தம்பதியினருக்கு இடையே பாலியல் நெருக்கத்தை மீட்டெடுக்க தாந்த்ரீக செக்ஸ் ஒரு சிறந்த வழியாகும். தாந்த்ரீக செக்ஸ் என்பது நினைவாற்றல் மற்றும் இரண்டு நபர்களிடையே ஆழமான தொடர்பை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தாந்த்ரீக உடலுறவில் கண் தொடர்பு, மசாஜ், சுவாசப் பயிற்சிகள் மற்றும் மெதுவான உடலுறவு ஆகியவை அடங்கியுள்ளன. தாந்த்ரீக பாலுறவின் குறிக்கோள் இரண்டு நபர்களுக்கு இடையேயான உறவையும் உணர்வையும் மேம்படுத்துவதே ஆகும். உங்களுக்கு பயன் தரும் வகையிலான தாந்த்ரீக உடலுறவு குறித்த நடைமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வசதியான இடம் 

Tap to resize

Latest Videos

undefined

தாந்த்ரீக உடலுறவை பெறுவதற்குநீங்கள் போதுமான வசதியாக உணரும் இடத்தில் மட்டும் பயிற்சி செய்யுங்கள். ஒரு அறையை சுத்தம் செய்து, மெழுகுவர்த்திகளை ஏற்றி, அறையை நறுமணத்தால் நிரப்பி அமைதியை உருவாக்கிடுங்கள். இதன்மூலம் கவனச்சிதறல்கள் ஏற்படாமல், துணையின் மீது மட்டும் உங்கள் கவனம் இருக்கும்.

ஒருவரை ஒருவர்

உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்பு, உங்கள் துணையை எதிர்கொண்டு அமருங்கள். அவர்களுடைய கண்களை பார்த்துக் கொண்டே இருங்கள். இது ஒருசிலருக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தலாம். ஆனால் நீங்களும் உங்கள் துணையும் ஒருவரையொருவர் நீண்ட நேரம் பார்த்துக் கொள்வதில் வெற்றி பெற்றால், இருவருக்குமிடையில் ஒரு ஆழமான தொடர்பு ஏற்படும். இதன்மூலம் தாம்பத்தியமும் அன்பு நெருக்கமடையும்.

உடலுறவில் ஈடுபடும் போது வலி ஏற்படுகிறதா? அலட்சியம் வேண்டாம்..!!

தொடுதல்

உங்கள் வலது கையை உங்கள் துணையின் இதயத்தின் மீது வைத்து, உங்கள் இடது கையை உங்கள் இதயத்தின் மீது வைக்க வேண்டும்.  இதன்மூலம் உடல்ரீதியான பிணைப்பு இருவருக்குமிடையே உருவாகும். இதன்காரணமாகவும் தம்பதிகளுக்கிடையில் நெருக்கமான உணர்வு உருவாகும்.

ஃபோர்பிளே

உங்கள் துணையுடைய உடலின் உணர்திறன் வாய்ந்த பகுதியை தொடுவது, முத்தமிடுவது மற்றும் பிடிப்பது போன்ற பாலியல் முன்விளையாட்டை தொடங்குங்குள். இந்த செயல்பாடுகளை உங்களால் எவ்வளவு நீடிக்க முடியுமோ, அவ்வளவு நீடிக்கலாம். இதனால் உங்களுக்குள் ஏதோ ஒரு மாயாஜாலம் ஏற்படுவது போன்ற உணர்வு எழும். இந்த அனுபவத்தை தொடர்ந்து மேம்படுத்த இருவருக்கும் ஒருவருக்கு ஒருவர் மசாஜ் செய்யலாம்.

தாந்த்ரீக செக்ஸின் போது நீங்கள் முழுமையான உடலுறவை அனுபவிக்க வேண்டும் என்பது கிடையாது. உங்களுக்கு முன்விளையாட்டு பிடித்திருந்தால், அதை தொடர்ந்து செய்யலாம் . உங்களுக்கு மசாஜ் செய்வது அல்லது படுக்கையில் இருந்தவாறு பேசுவது போன்ற செயல்களில் ஆர்வமிருந்தால், அதை செய்யலாம். தம்பதிகளுக்கு இடையில் மறந்துபோன பிணைப்பை மீண்டும் ஏற்படுத்துவது தான் இந்த உடலுறவின் நோக்கம். 

click me!