Sex with a Car: காருடன் உறவு கொள்ளும் இளைஞர்! அதிர்ச்சியில் தந்தை!

By SG Balan  |  First Published Feb 21, 2023, 11:56 AM IST

நதானியேல் என்ற இளைஞர் நீண்ட காலமாக சேஸ் என்ற தன் காருடன் உறவு கொண்டிருப்பதாகத் தெரிவிக்கிறார்.


உலகில் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் ஈர்ப்பு இருக்கும். சிலருக்கு வித்தியாசமான ஈர்ப்பு இருக்கலாம். அது மற்றவர்களுக்கு விநோதமானதாகத் தோன்றக்கூடும். அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்குகொண்ட ஒருவர் தனக்கும் தனது காருக்கும் பாலியல் உறவு இருப்பதாகக் கூறியுள்ளார்.

விநோதமான பழக்கங்களுக்கு அடிமையானவர்கள் பற்றிய அந்த நிகழ்ச்சியில் நதானியேல் என்பவர் சேஸ் என்ற தனது காருடன் உறவில் இருப்பதாகக் கூறுகிறார். இந்த நிகழ்ச்சியில், தனது தந்தையிடம் தனக்கு இருக்கும் விசித்திரமான உறவைப் பற்றிப் பகிர்ந்துகொள்கிறார்.

Tap to resize

Latest Videos

undefined

NatGeo Photo Of the Year: நேஷனல் ஜியோகிராபிக் பரிசு பெற்ற வெண்தலை கழுகு புகைப்படங்கள்

“சேஸுடன் நான் பாலியல் ரீதியாகவும் உணர்வுபூர்வமாகவும் நெருங்கிய உறவில் இருக்கிறேன்” என்று நதானியேல் தன் தந்தையிடம் வெளிப்படையாகக் கூறுகிறார். தந்தை நதானியலிடம் கார் மீதான ஈர்ப்பு எப்போது தொடங்கியது என்று கேட்கிறார். அதற்கு அவர், “இது என் இளமைப் பருவத்திலேயே தொடங்கிவிட்டது. எனக்கு நண்பர்கள் இல்லாமல் தனிமையில் இருந்தபோது ஆரம்பித்தது” என்று சொல்கிறார்.

காரைத் தடவிக்கொடுப்பது முத்தமிடுவது காரில் சுய இன்பம் கொள்வது என்று காருடன் உறவு கொண்டிருந்ததாகச் சொன்ன அவர், “பருவமடைந்த பிறகு எனக்கு அந்த உணர்வுகள் அதிகரிக்க ஆரம்பித்தன" என்கிறார்.

ஆன்லைன் காதல்.. உஷார்! உல்லாசமாக இருக்க நினைத்து.. வாழ்வை இழந்தவர்களின் நெஞ்சை உலுக்கும் நிஜ கதைகள்...

சிறுவயதில் மிகவும் தனிமையாக இருந்திருப்பதால்தான் இவ்வாறு காரு உறவு ஏற்பட்டிருக்கிறது என்ற நதானியேலின் தந்தை, மனிதர்கள் கார் போன்ற பொருட்களுடன் நெருங்கிய உறவு கொண்டிருக்க முடியாது என்று அவருக்கு அறிவுரை கூறுகிறார். தன் மகனுடன் இருக்கவேண்டிய நேரத்தில் என்னால் உடனிருக்க முடியவில்லை என்று வருத்தம் தெரிவிக்கிறார்.

யூடியூப்பில் வெளியான இந்த வீடியோவுக்கு பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ஆலியாவுக்கு இந்த பொசிஷன் தான் புடிக்கும்.. வெட்கமே இல்லாமல் பெட் ரூம்ல நடக்குறத சொன்ன ரன்பீர் கபூர்

click me!