என்னென்ன பொய் சொல்வார்கள்.? அதை கண்டறிவது எப்படி..?

By Dinesh TG  |  First Published Dec 19, 2022, 12:40 PM IST

ஒரு உறவுக்குள் பொய் ஊடுருவினால் காதலும் உணர்வும் அழிந்துபோகும். அதனால் உறவின் மீதான நம்பிக்கையே ஆட்டம் கண்டுவிடும். ஒரு கணவன் மனைவிக்கிடையில் பொய் உட்புகும் போதும் குடும்பம் தவறான பாதையில் சென்றுவிடுகிறது. 
 


ஒவ்வொரு உறவும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. குறிப்பாக ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவில் நம்பிக்கை மிகவும் முக்கியம். ஆண்களை விடவும் பெண்கள் தான் பெரும்பாலானோர் ஆண்களை நம்பி உள்ளனர். அதனால் ஆண்கள் சொல்வதை எல்லாம் உண்மை தான் என்று நம்புவது பெண்மையின் குணம். ஆனால் அதே நம்பிக்கை ஒருசிலருக்கு பலத்த அடியை கொடுத்துவிடுகிறது. ஏனென்றால் பெரும்பாலான ஆண்கள் பொய்களை கட்டமைத்து வாழக்கூடிய சூழலுக்குள் தங்களை சிக்கவைத்துக் கொள்கின்றனர். ஒரு பெண்ணை அடைவதற்கும் அல்லது ஒரு பெண்ணின் காதலை பெறுவதற்கும், அந்த பொய் தேவை என்று நம்பும் ஆண்கள் பலர் உள்ளனர். 

பொய் என்பது சும்மா தோன்றிவிடுவது கிடையாது. அதற்கு என்று பெரியளவில் ஒரு செயல்பாடு முன்னெடுக்கப்படுகிறது. வாழ்க்கையைப் பொறுத்தும், நம்மைச் சார்ந்தவர்களை பொறுத்தும் பொய் கட்டமைக்கப்படுகிறது. சிலர் தங்களுடைய வாழ்க்கையைத் துணையின் உறவை பெறுவதற்கு பொய் சொல்கின்றனர். வேறு சிலர் தங்கள் துணையுடன் பரஸ்பரமான வாழ்க்கையை வாழ பொய் கூறுகின்றனர். சிலர் தங்களுடைய இமேஜை பாதுகாக்க பொய் சொல்கின்றனர். சிலர் தங்களுடைய மனதில் தோன்றுவதை எல்லாம் கட்டுக்கதையாக அவிழ்த்துவிடுகின்றனர். அந்த வகையில் ஆண்கள் தங்களுடைய துணை அல்லது காதலியிடம் சொல்லும் பொய் குறித்து பெண்களே சமூகவலைதளத்தில் பதிவு செய்த தகவல்கள் குறித்து ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

Tap to resize

Latest Videos

undefined

வீட்டைப் பற்றி பொய் சொன்ன காதலன்

பாதிக்கப்பட்ட பெண் வீட்டைப் பற்றிக் கேட்கும்போதெல்லாம், காதலன் சரியாக பேசுவது கிடையாது. பலமுறை தொந்தரவு செய்து, காதலன் வீட்டுக்கு அந்த பெண் சென்றுள்ளார். ஆனால் அந்த பெண் ஒருமுறைதான் அவனது வீட்டிற்கு வந்திருக்கிறாள். கடைசியில் அது அவனது வீடு அல்ல நண்பனின் வீடு என்பது தெரிந்தது. மேலும் தான் காதலித்த பையனுக்கு ஏற்கனவே திருமணம் நடந்துள்ளது என்கிற விபரமும் பெண்ணுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து மிகவும் சங்கடமான சூழ்நிலையில் அந்த உறவு முறிந்துவிட்டது.

திருமணம் என்றதும் மாறிவிட்ட காதலன்

இருவரும் 11 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பள்ளிப் பருவத்தில் இருந்தே இருவரும் காதலித்துள்ளனர். வயது வந்த நேரத்தில் திருமணம் குறித்த பேச்சை காதலி ஆரம்பித்துள்ளாள். அதற்கு காதலன் பெரியளவில் ஆர்வம் காட்டவில்லை. இதுதொடர்ந்த நிலையில் , திருமணம் என்று வரும்போது காதலனின் வார்த்தைகள் மாறிவிட்டன. தனது தாயிடம் வந்து பெண் கேட்குமாறு காதலி கூற, அதற்கு முடியாது என்று சொல்லிவிட்டு காதலன் ஓடிவிட்டான். முடிவில், தன்னுடைய சமூகப் பின்னணியால் காதலன் அந்த பெண்ணை கைவிட்ட காரணம் தெரியவந்துள்ளது.

பிளாஸ்டிக் சாமானம் முதல் பிஞ்சுபோன செருப்பு வரை- பொருளாதார முன்னேற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்..!!

பொய்களின் கூடாரமாக இருந்த காதலன்

ஒரு மனிதன் தேவைப்படும் நேரத்தில் பொய் சொல்வது இயற்கையானது தான். அது இயல்பானதும் கூட என்கிற மனநிலை பலரிடையே உள்ளது. ஆனால் ஒரு சிறிய விஷயத்திற்கு கூட பொய் சொன்னால் வாழ்க்கை கடினமாகிவிடும். இப்படி ஒரு காதலன் தனது காதலியிடம் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டுக் கொண்டே இருந்துள்ளான். காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கச் செல்லும் வரை, காதலன் வாயில் பொய் தான். இதனால் காதலனும் சுய முன்னேற்றம் அடைந்ததாக தெரியவில்லை. இதையடுத்து தன்னம்பிக்கை அற்ற காதலனை அந்த பெண் பிரிந்துவிட்டாள்.

பொய் சொல்லும் ஆண்கள் பொதுவாக சுயநலமிக்கவர்களாக தான் உள்ளனர். அவர்களுடைய பொய்யில் அவர்களுடைய நன்மை மட்டுமே முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் பொய் சொல்லக்கூடிய ஆண்கள், சுய முன்னேற்றம் இல்லாமல், தன்னம்பிக்கை அற்று இருப்பதையும் பெண்கள் கவனிக்கின்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

click me!