கடந்த 2011-ம் ஆண்டு அமெரிக்காவில் வெளியான படம் ஃப்ரெண்ட்ஸ் வித் பெனிஃபிட்ஸ். உலகளவில் இளைய தலைமுறை பார்வையாளர்களிடம் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. ஆனால் அந்த கதையில் நடக்கும் சம்பவம் திரைத்துறைக்கு மட்டுமே பொருந்தும். நிஜ வாழ்க்கையில் நெருங்கிய நட்பு வட்டத்துக்குள் உடலுறவு ஏற்பட்டால் பயங்கரமான விளைவுகள் நிகழும் என்பதே உண்மை. ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையேயான நட்பு- காதலாக மாறி, அந்த காதல் திருமணமத்தில் முடிவடைகிறது என்றால், அதற்கான விவாதம் வேறு. ஆனால் நட்பு நட்பாக மட்டுமே இருக்கும் போது, அதற்கு இடையில் ஏற்படும் உடலுறவு ஒட்டுமொத்த அடிப்படையையும் மாற்றிவிடக்கூடியதாக உள்ளது. நட்பு சார்ந்த சிந்தனை, எண்ணவோட்டங்கள் என எல்லாமுமே மாறிவிடும். எனினும் நெருங்கிய நட்பு வட்டத்துக்குள் இருப்பவருடன் உங்களையும் மீறி உடலுறவு ஏற்பட்டுவிட்டால், மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் சிலர் சங்கடப்படுவதுண்டு. அதை சரி செய்வதற்கான வழிமுறைகளை தொடர்ந்து பார்க்கலாம்.
நடந்ததை ஒருமுறை திரும்பிப் பாருங்கள்
சூழ்நிலை காரணமாக தோழி அல்லது நண்பனுடன் உடலுறவு நேர்ந்துவிட்டால், உடனடியாக வருத்தப்படவோ குழப்பமடையவோ கூடாது. மாறாக எப்படிப்பட்ட சூழலுக்கு இடையில் தனிமை ஏற்பட்டது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதுசார்ந்த உங்களுடைய உணர்வுகளை கொஞ்சம் ஆழமாக பார்க்க முயற்சி செய்யுங்கள். இது வெறும் உடலுறவு தானா அல்லது நட்பு வட்டத்துக்குள் இருந்துவர் மீது நட்பையும் மீறி ஏதேனும் ஈர்ப்பு உள்ளதா அல்லது மீண்டும் அவருடன் உறவுகொள்ள விரும்புகிறீர்களா அல்லது இது எப்படிப்பட்ட சூழலில் நிகழ்ந்தது என்று பலவாறு சிந்தனை செய்து பாருங்கள். ஒரு நாள், முடிந்தால் இரண்டு நாட்கள் கூட எடுத்துக் கொண்டு சிந்தனை செய்யுங்கள். ஆனால் அதன்மூலம் வரக்கூடிய முடிவு நல்ல வெளிப்பாடாக இருக்க வேண்டும்.
பேச்சு வார்த்தை முக்கியம்.
உடலுறவு நிகழ்ந்த பின்பு, இருவரும் பேசிக்கொள்ள வேண்டாம் என்கிற கட்டத்துக்கு போகாமல், நடந்ததை குறித்து இருவரும் சேர்ந்து பேசுங்கள். குறிப்பாக உங்கள் இருவருக்கும் பொதுவான நட்பு வட்டம் இருந்தால், நீங்கள் இருவரும் பேசிவிடுவது நன்மையை தரும். உறவில் பிரச்னை ஏற்படாமல் இருக்கும். உங்களுடைய நண்பர்/தோழி நடந்தது விபத்து என்று நினைத்திருக்கலாம் அல்லது நீங்கள் ஏதோ ஒரு நல்ல விஷயத்துக்கான துவக்கம் என்று எண்ணியிருக்கலாம். எதுவாக இருந்தாலும், நீங்கள் இருவரும் சம்பவம் நடந்த பிறகு பேசிவிடுவது நல்லது. ஒருவர் சங்கடப்பட்டுக் கொண்டு இருந்தாலும், மற்றொருவர் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பேச்சுவார்த்தையின் மூலம் கிடைக்கும் தீர்வு, அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்த்தும்.
ஆணு குறி முன் தோல் வெடிப்பு பிரச்னை- ஒளிந்திருக்கும் ஆபத்து..!!
நேர்மையாக இருங்கள்
தமிழில் ஆஹா கல்யாணம் என்கிற ஒரு படம் வெளிவந்துள்ளது. அதில் நட்பு வட்டத்தில் இருக்கும் நானி மற்றும் வாணி, ஒரு இரவில் கலவியில் ஈடுபடுவர். அது வாணிக்கு காதலாக மாறிவிடும். ஆனால் நானி, சங்கடப்பட்டுக் கொண்டு விலக முயற்சிப்பார். இது அவர்களுடைய நட்பையும் வணிகத்தையும் கடுமையாக பாதிக்கும். இந்த விஷயத்தில் அது நடைமுறைக்கு ஒத்துவராது. உடலுறவுக்கு பின் உங்களுக்குள் ஏற்படும் உணர்வுகளை நேர்மையாக, சம்மந்தப்பட்ட நபரிடம் வெளிப்படுத்துங்கள். ஏதேனும் பொய் சொன்னால், அது பிரச்னையாகவே உருவெடுக்கும். அதனால் பிடித்திருந்தாலும் பிடிக்காவிட்டாலும் பேச்சுவார்த்தையின் போது உணர்வுகளுக்கு நேர்மையாக இருங்கள்.
புதியதாக திருமணமானவர்கள் 3 நாட்கள் டாய்லெட் போகக்கூடாதாம்- கிராம கட்டுப்பாடு..!!
கட்டாயப்படுத்தக் கூடாது
உறவு கொண்டதால் நட்பு கெட்டுவிட்டது, மீண்டும் நட்பை புதுப்பிக்க வேண்டும் என்கிற கட்டாயத்துக்குள் செல்லக்கூடாது. அதேபோன்று சம்மந்தப்பட்ட உங்கள் நண்பரின் நடவடிக்கையை புரிந்துகொண்டு செயல்படுங்கள். நீங்கள் ஏதாவது பேச வேண்டும், கருத்துச் சொல்ல வேண்டும் என்று விரும்பினால் கொஞ்சம் பொறுமையுடன் கையாளுங்கள். உங்கள் இருவருக்குமிடையேயான நட்பை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என்கிற முயற்சியில் இறங்காதீர்கள். முடிந்தவரை, உங்கள் நண்பருக்கு அல்லது தோழிக்கு இடம் கொடுங்கள். ஒரு காலை உணவு இடைவேளை மற்றும் வார விடுமுறை நாட்களில் நடந்ததை பற்றிப் பேசி முடிவுக்கு வர ஏதுவாக இருக்கும்.