ஒரு நாளைக்கு எத்தனை முறை உடலுறவுகொள்ளலாம்..? கணக்கு இருக்கா..? - அறிவியல் அறிஞர்கள் சொல்லும் சீக்ரெட்!

By Asianet Tamil  |  First Published Aug 25, 2023, 3:06 PM IST

உடலுறவு என்பது உங்கள் மனநிலையை உடனடியாக நிறைவுள்ளதாக மாற்றும் திறன் கொண்டது என்று  நிரூபிக்கப்பட்ட ஒன்று என்று ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர். அப்படி என்றால் தினமும் உடலுறவு கொள்வது நல்லதா? அப்படி என்றால் ஒரு நாளில் எத்தனை முறை உடலுறவுகொள்ளாம் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.


உடலுறவால் ஏற்படும் நன்மைகள் 

மன அழுத்தம் குறையும்,
பெண்களுக்கு சிறுநீர்ப்பையில் பலம் அதிகரிக்கும்,
ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்,
மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் பெரிய அளவில் குறையும்,
ரத்த அழுத்தத்தை குறைக்கும்,
நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும்,
ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும்,
உடல் எடை குறைப்பிற்கு பெரிய அளவில் உதவும்.

Tap to resize

Latest Videos

undefined

தொப்புளில் மஞ்சள் தடவினால் ஆரோக்கியம் தவிர ஆன்மீக ரீதியாகவும் பல நன்மைகள்.. என்னென்ன தெரியுமா?

சரி தினமும் உடலுறவில் ஈடுபடலாமா?

உடலுறவு உங்கள் உடல் தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமின்றி, உறவில் உள்ள இரு நபர்களுக்கும் இடையே உணர்வுபூர்வமான தொடர்பை அது ஏற்படுத்துகிறது. குறிப்பாக உணர்ச்சி இணைப்பு காரணி என்பது ஆண்களை விட பெண்களுக்கு மிகவும் முக்கியமானது.

உடலுறவில் பல நன்மைகள் இருந்தாலும் அது அன்றாட மற்றும் கட்டாய வாழ்க்கையாக இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. வாரத்திற்கு ஒரு நாள் அல்லது இரண்டு மூன்று முறை என்று உடலுறவுகொள்ளும் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது முற்றிலும் நல்லது தான். 

ஏனென்றால், உடலுறவுகொள்ளும் இரு நபர்களும் ஒரே நேரத்தில், அல்லது மற்றவரைப் போல அடிக்கடி உடலுறவு கொள்ள விரும்புவது எப்போதும் நடக்காத ஒன்று. ஒருவரை உடலுறவுகொள்ள வற்புறுத்துவது, பாலியல் வற்புறுத்தல் என்று அறியப்படுகிறது என்று மட்டுமல்லாமல் அது நல்லதல்ல.

அடிக்கடி உறவு கொள்வதினால் பெரிய அளவில் உடலில் சோர்வு ஏற்படலாம், ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவர்களுடைய பிறப்பு உறுப்பில் எரிச்சல் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. ஆகவே இரு உடல்கள் இணையும் அதே நேரம் இரு மனமும் அதற்கு இசைந்து இருப்பது முக்கியம் என்கிறார்கள் அறிஞர்கள். ஆகவே உடல் உறவு என்பதும் தேவையான அளவில் மட்டுமே இருக்கவேண்டுமே தவிர அதுவே வாழ்க்கையாகிவிட கூடாது.

இந்த 3 குணஙள் அவர்களிடம் இருக்கா?.. அந்த செல்லத்தை அள்ளித்தூக்குங்க.. உங்களுக்கு சரியான துணை அவங்கதான்!

click me!