மகிழ்ச்சியாக இருக்கும் தம்பதிகள் எத்தனை முறை உடலுறவு கொள்கிறார்கள் தெரியுமா?

By Kalai Selvi  |  First Published Jul 18, 2023, 8:05 PM IST

நீங்கள் உங்கள் துணையுடன் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவும், உங்களது உறவு நீட்டிக்கவும் இங்கே கூறப்பட்டுள்ள சிலவற்றை பின்பற்றுவது நல்லது.


எந்தவொரு உறவிலும் பாலியல் நெருக்கம் இன்றியமையாதது. "நெருக்கமும் தொடர்பும் மனித தேவையே" ஆகும். ஒருவர் நீண்ட கால உறவில் இருக்கும்போது, உடலுறவு மூலம் மீண்டும் இணைகிறார்கள். எனவே ஒரு உறவுக்கு உடலுறவு மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது.  

உடலுறவில் எப்போதும் ஒரேமாதிரியாக இல்லாமல் உடல் நெருக்கம், அரவணைப்பு, வாய்வழி மற்றும் கைமுறையான தூண்டுதல் மற்றும் பாலியல் கற்பனைகளைப் பகிர்வது உட்பட்டவை உறவை இன்னும் வலுவாக்குகிறது. மேலும் ஒருவரின் தேவையை மற்றொருவர் பூர்த்தி செய்வதிலும் ஒரு உறவுகளுக்கிடையே நெருக்கம் இன்னும் அதிகரிக்கச் செய்யும்.

Tap to resize

Latest Videos

undefined

அதுபோல் அவ்வப்போது உடலுறவு கொள்ளாமல் இருப்பது முற்றிலும் இயல்பானது என்றாலும், உடலுறவு ஒரு வேலையாக மாறும்போது பிரச்சனை ஏற்படும். இதனால் உங்கள் உறவில் உடல் நெருக்கம் இனி முன்னுரிமையாக இருக்காது. அதைச் சரிசெய்ய, நீங்கள் காரணங்களைப் புரிந்துகொண்டு பொருத்தமான மாற்றங்களைச் செய்ய வேண்டும். ஒரு ஆய்வின்படி, மகிழ்ச்சியான தம்பதிகளாக இருக்க வாரத்திற்கு ஒரு முறை தாம்பத்திய உறவு வைத்து கொள்வது நல்லது.

இதையும் படிங்க: Relationship Tips: மனைவியிடம் ஆண்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் இதோ..! மிஸ் பண்ணிடாதீங்க!!

நாம் போதுமான உடலுறவு கொள்ளாத 5 காரணங்கள்:
மன அழுத்தம்: மன அழுத்ததினால் சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் உறவுகளிலும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே மன அழுத்தத்தை குறிக்க உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும், நன்கு தூங்க வேண்டும், குறிப்பாக உங்கள் துணையுடன் சிறிது நேரம் ஒதுக்கி அவர்களுடன் பேசுங்கள். இவற்றை கடைபிடிப்பதன் மூலம் நீங்கள் மன அழுத்தத்திலிருந்து விரைவாக விடுபடலாம்.

உடல் பாதுகாப்பின்மை: சிலர் தங்களது  உடல் பாதுகாப்பின்மை குறித்து மிகவும் பயப்படுவார்கள். இதனால் தங்கள் துணையின் முன் நிர்வாணமாக இருப்பதைப் பற்றி அடிக்கடி அவமானம் அல்லது வெட்க உணர்வுகளை அனுபவிக்கிறார்கள். மற்றும் பாலியல் நெருக்கத்தைத் தொடங்க அல்லது ஈடுபடுவதற்கான பாலியல் நம்பிக்கை அவர்களுக்குள் இல்லை. எவ்வளவு கடினமாக இருந்தாலும், உங்களின் பாதுகாப்பின்மையை முறியடிக்கவும். மேலும் மனரீதியாக உங்களை உயர்த்திக் கொள்ளுங்கள். உங்களை மகிழ்ச்சியடையச் செய்யும் மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்கும் விஷயங்களைச் செய்யுங்கள். மேலும் அடிக்கடி உடற்பயிற்சி செய்யுங்கள்.

நாள்பட்ட நோய்கள்: முடக்கு வாதம், வலி, சோர்வு, விறைப்பு, வீக்கம், யோனி வறட்சி மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட செயல்பாடு போன்ற நாட்பட்ட நிலைகளும் நல்ல உறவை பாதிக்கும். இதற்கு காரணம் உங்கள் பாலியல் ஆசை அல்லது உடல் ரீதியாக தூண்டப்படும் உங்கள் திறனை பாதிக்கலாம். எனவே, இந்நேரத்தில் நீங்கள் 
உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.

ஸ்மார்ட்போன்: இந்த காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இவ்வாறு ஸ்மார்ட்போன் பயன்பாட்டினால் உறவுகளில் விரிசல் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. எனவே இரவு படுக்கைக்கு செல்லும் முன் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதை தவிர்ப்பது உறவுக்கு மிகவும் சிறந்தது.

இணைப்பு குறைவு: உங்கள் துணையுடன் நீங்கள் உணர்ச்சி ரீதியாக இணைக்கப்படவில்லையெனில் பாலியல் ஆசை சமரசம் செய்யப்படலாம். இதனை சரி செய்ய உங்கள் துணையுடன் தூரமாக பயணம் செய்வது, அவர்களுடன் இனிமையாக உரையாடுவது போன்றவற்றை மேற்கொள்வது. இது உங்கள் உறவின் பந்தத்தை வலுப்படுத்தும்.

click me!