விரைவில் கர்ப்பம் அடைய எத்தனை முறை உடலுறவு கொள்ள வேண்டும் தெரியுமா..? 

By Kalai Selvi  |  First Published Nov 8, 2023, 2:31 PM IST

இன்றைய சமுதாயத்தில் பலருடைய பிரச்சனை குழந்தையின்மை ஒன்றாகும். இதனால் அவர்கள் மன அழுத்தம் விரக்தி நிலைக்கு செல்கின்றனர். எனவே நீங்கள் விரைவில் கர்ப்பம் தரிக்க இனி அதிர்ஷ்டத்தை நம்பி இருக்காமல், சில உதவி குறிப்புகளை நீங்கள் பின்பற்ற வேண்டியது அவசியம். அதன்படி, விரைவில் நீங்கள் கர்ப்பம் தரிக்க முடியும்.


பெரும்பாலான தம்பதிகள் திருமணமான சில மாதத்திலேயே கர்ப்பம் தரித்துவிடுவார்கள். சிலருக்கோ மாதங்கள் அல்லது வருடங்கள் கூட ஆகலாம். இன்றைய சமுதாயத்தில் பலருடைய பிரச்சனை இதுவும் ஒன்றாகும். இதனால் அவர்கள் மன அழுத்தம் விரக்தி நிலைக்கு செல்கின்றனர். எனவே நீங்கள் விரைவில் கர்ப்பம் தரிக்க இனி அதிர்ஷ்டத்தை நம்பி இருக்காமல், சில உதவி குறிப்புகளை நீங்கள் பின்பற்ற வேண்டியது அவசியம். அதன்படி, விரைவில் நீங்கள் கர்ப்பம் தரிக்க ஒரு நாளைக்கு எத்தனை முறை உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும்? எந்த பொசிஷன் சிறந்தது என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

Tap to resize

Latest Videos

undefined

ஆய்வு படி, பெரும்பாலான தம்பதிகள் விரைவில் கர்ப்பம் தரிக்க 6 மாதம் நீடிப்பத்காகக் கூறப்படுகிறது. அதாவது, சராசரியாக 158 நாட்கள் நாட்களில் சுமார் 78 முறை உடலுறவு வைத்து கொள்கிறார்கள். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

கர்ப்பம் தரிக்க ஒரு நாளைக்கு எத்தனை முறை உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும்:
நிபுணர்களின் கூற்றுப்படி கர்ப்பம் தரிக்க விரும்புவோர் ஒரு நாளைக்கு ஒரு முறைக்கு மேல் உடலுறவு வைத்துக் கொள்ளக் கூடாது. ஒருவேளை நீங்கள் ஒரு நாளைக்கு பலமுறை வைத்தால் ஆரோக்கியமான விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

கருநிற்க எந்த நாள் சிறந்தது?
பொதுவாகவே, பெண்களுக்கு கரு நிற்பதற்கு எல்லா நாட்களும் சாதகமானது அல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக மாதவிடாய் காலம் கருப்பை அண்டை விடுப்பு ஆகியவற்றை கண்காணிக்க வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில், நீங்கள் பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற விரும்பினால், அண்ட விடுப்பிற்கு ஐந்து நாள் முன் அல்லது அண்ட விடுப்பு அன்று உடலுறவு வைத்து உடலுறவில் ஈடுபடுவது நல்லது.

இதையும் படிங்க: கர்ப்ப காலத்தில் "இந்த" அறிகுறிகள் இருக்கா? அப்ப கண்டிப்பாக ஆண் குழந்தைதான்... மிஸ் பண்ணிடாதீங்க..!!

அண்டவிடுப்பு பொதுவான காலம் 28 நாட்கள். அதாவது அடுத்த மாதவிடாய் தொடங்குவதற்கு 14 வது நாளில் இது  நிகழும். அனைவருக்கும் இது மாதிரி நிகழும் என்று சொல்ல முடியாது. மேலும் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டால் மாதவிடாய் நாளில் இருந்து அண்டவிடுப்பை அறிந்து கொள்ளலாம். 

இதையும் படிங்க:  கர்ப்ப காலத்தில் பப்பாளி, அன்னாசி சாப்பிட கூடாதுனு சொல்றாங்க..அது ஏன் தெரியுமா?

அதுபோல், அண்டவிடுப்பின் போது முட்டை வெளியேறுவதால், அவை கருப்பைக்குழாய்க்குள் சென்று அங்கு தேங்கி இருக்கும். இச்சமயத்தில் உடலுறவு கொண்டால் விந்தணுக்கள் உள்ளே செல்லும்போது முட்டையால் அவை ஈர்க்கப்பட்டு, அது கருமுட்டையாக உருவாகி கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக உங்களுக்கு 28 நாட்கள் சுழற்சி சரியாக இருந்தால் 14 ஆவது நாளில் நீங்கள் கருவூர வாய்ப்பு உள்ளன.

செக்ஸ் பொசிஷன்:
பலர் கர்ப்பம் தரிப்பதற்கு செக்ஸ் பொசிஷன் தான் மிகவும் அவசியம் என்று கண்மூடித்தனமாக நம்புகிறார்கள். அப்படி மிகவும் பிரபலமான மூன்று பொசிஷன்களை முயற்சி செய்கிறார்கள். அவை டாகி ஸ்டைல், மேன் ஆன் டாப், ஸ்பூன் பொசிஷன் ஆகியவை இதில் அடங்கும். அதிலும் குறிப்பாக பலர் டாகி ஸ்டைல் அதிகமாக முயற்சி செய்கிறார்கள்.

click me!