மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு.. சுதா மூர்த்தி வழங்கிய 3 கோல்டன் டிப்ஸ் இதோ..

By Asianet Tamil  |  First Published Jul 30, 2024, 6:53 PM IST

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு உதவும் டிப்ஸ் குறித்து சுதா மூர்த்தி பேசி உள்ளார்.


இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் நிறுவனரும் நாராயண மூர்த்தியின் மனைவியான சுதா மூர்த்தி பலருக்கு உத்வேகமாக இருந்து வருகிறார். கல்வியாளர், எழுத்தாளர் மற்றும் பரோபகாரர் என பன்முகங்களை கொண்ட சுதா மூர்த்தி குழந்தை வளர்ப்பு, திருமண வாழ்க்கை நிதி திட்டமிடல் மற்றும் சேமிப்பு தொடர்பாக பல்வேறு உரைகள் ஆற்றி உள்ளார். அவரின்  உரைகள் பலருக்கும் ஊக்கமளிப்பதாக இருந்துள்ளது. அந்த வகையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு உதவும் டிப்ஸ் குறித்து பேசி உள்ளார்.

ஆண்களே உங்க செக்ஸ் ஹார்மோன் ஒழுங்கா வேலை செய்யுதா? இப்பவே கவனிக்கலன்னா அந்த நேரம் கஷ்டம்!

Tap to resize

Latest Videos

undefined

சுதா மூர்த்தி பேசிய போது “ திருமணத்தில் சண்டை ஏற்படுவது இயல்பு தான். தம்பதிக்குள் வரும் சண்டைகளை ஏற்றுக்கொள்ளுங்கள். எங்களுக்கு ஒருபோதும் சண்டையே வந்ததில்லை என்று நீங்கள் கணவன் மனைவி இல்லை. வாழ்க்கை என்பது கொடுக்கல் வாங்கல். தவறே இல்லாத தம்பதிகள் இல்லை. அதே போல் தவறுகள் இல்லாத வாழ்க்கையும் இல்லை. உங்கள் துணைக்கு நிறை, குறைகள் இருக்கும். அதே போல் உங்களுக்கு சில நிறை குறைகள் இருக்கும். இதனால் திருமண உறவில் சண்டைகள் வருவது இயல்பு தான்.

எனவே தம்பதிக்குள் சண்டை வரும் போது ஒருவர் வருத்தத்தில் இருந்தால், மற்றொரு நபர் அமைதியாக இருக்க வேண்டும். அவரும் தனது பங்கிற்கு எதுவும் பேசக்கூடாது. ஒருவர் கோபமாக இருக்கும் போது மற்றொருவரும் பேசினால் அது சண்டையை பெரிதாக்கும். தம்பதிகளில் ஒருவர் கோபமாக இருக்கும் போது மற்றொருவர் அமைதியாக இருக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.

திருமண உறவில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு இவை தான் முக்கிய காரணங்கள்.. என்னென்ன தெரியுமா?

சுதா மூர்த்தி பகிர்ந்துகொண்ட மற்றொரு அறிவுரை “ தம்பதிகள் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும். தற்போது பெரும்பாலான பெண்கள் வெளியில் வேலைக்கு செய்வதால், வீட்டிலும் தன் மனைவி எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று ஆண்களை எதிர்பார்க்க வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் “இந்த தலைமுறையைச் சேர்ந்த எல்லா ஆண்களும் தங்கள் மனைவிக்கு சமையலறையில் உதவ வேண்டும். இது மிகவும் முக்கியமானது” என்று சுதா மூர்த்தி தெரிவித்தார். அதே போல் வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கும், மகிழ்ச்சியான குடும்பத்திற்கும் ஆண்கள் தங்கள் மனைவியின் சுமையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சுதா மூர்த்தி அறிவுறுத்தினார். 

click me!