பொதுவாக பெண்கள் பல சமயங்களில் தங்கள் மனதை திறந்து பேசும் திறன்கொண்டவர்கள். மனதிற்கு ஒரு விஷயத்தை போட்டு அழுத்திக்கொள்ளாமல் சட்டென்று பேசும் இயல்பை கொண்டவர்கள். ஆனால் ஆண்கள் அப்படி அல்ல, சில அல்ல பல விஷயங்களை தங்கள் துணையிடம் சொல்லாமல் மறைக்கக்கூடியவர்கள். அப்படி அவர்கள் என்ன மறைக்கிறார்கள்? அதை ஏன் செய்கிறார்கள் என்று இந்த பதிவில் காணலாம்.
நான் உன்னை காதலிக்கிறேன்..
காதல் வயப்படும் போது இந்த ஐ லவ் யூ என்ற மூன்று வார்த்தைகளை பெரும்பாலும் முதலில் சொல்வது ஆண்கள் தான் என்றாலும், அந்த காதல் கைகூடி திருமணமாகி முடிந்த பிறகு ஐ லவ் யூ என்ற வார்த்தையை பெரிய அளவில் ஆண்கள் பயன்படுத்துவதில்லை. ஒரு நாளைக்கு குறைந்தது இருமுறையாவது ஒரு பெண் தன் கணவனையோ அல்லது காதலனையோ பார்த்து ஐ லவ் யூ என்று சொல்லும் அதே நேரத்தில், ஆண்கள் அதை பெரிதாக பயன்படுத்துவதில்லை.
அதற்காக அவர்கள் மனதில் அந்த காதல் இல்லை என்று அர்த்தம் இல்லை, தங்களின் மனதுக்குள் அந்த காதல் அனைத்தையும் ஆழப்பதித்துக் கொண்டு, அந்த குடும்பத்தின் உயர்வுக்காக கடுமையாக உழைப்பார்களே அன்றி, அடிக்கடி ஐ லவ் யூ என்ற வார்த்தையை அவர்கள் மனதார சொல்லுவதில்லை. சுருங்கச்சொன்னால் காதலிக்கும்போது வெளிப்படையாகவும், காதல் கைகூடிய பிறகு அதை மனதிற்குள் மறைத்தும் வாழ்பவர்கள் பெரும்பாலான ஆண்கள்.
இந்த ராசிக்காரர்களுக்கு அதிக உள்ளுணர்வு சக்தி உள்ளதாம்.. உங்க ராசியும் லிஸ்டுல இருக்கா?
பாதுகாப்பின்மை
இன்றைய சூழலில் பல இளைஞர்களுடைய மனதில் இந்த உணர்வு அதிக அளவில் இருக்கிறது என்று தான் கூற வேண்டும். ஆனால் இது குறித்து தங்கள் துணையிடமோ அல்லது தங்கள் குடும்ப உறுப்பினர்களிடமோ பெரிய அளவில் அவர்கள் பகிர்ந்து கொள்வதில்லை.
ஒரு ஆண் என்பவனுக்கு வாழ்க்கையில் பல இடங்களில் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது, குறிப்பாக வேலை என்று வரும் பொழுது அதில் ஏற்படும் சிக்கல்களும், மன பிரச்சினைகளும் அதிக அளவில் இருக்கலாம். ஆனால் அதனால் அவர்கள் பெரும் மனக்கவலையை அவர்கள் பெரிய அளவில் வெளியே பகிர்வதில்லை. குறிப்பாக தங்கள் துணைஇடம் அதை பகிர்ந்து கொள்வதில்லை. தான் ஒரு ஆண், தான் தன் பலவீனத்தை தன் துணையிடம் காட்டி விடக்கூடாது என்ற ஒரு மனப்போக்கே அதற்கு மிகப் பெரிய காரணம்.
பொறாமை உணர்வு
இந்த பொறாமை உணர்வு என்பது, தன் துணையிடம் யார் நெருங்கி பேசினாலும் அல்லது அவர்களுக்கு வேண்டியதை செய்தாலும் இந்த பொறாமை குணம் வெளியே எட்டிப் பார்க்கும். இது அவர்கள் மேல் எழும் சந்தேகத்தால் அல்ல என்றாலும், நான் மட்டுமே தன் துணைக்கு அனைத்து விஷயங்களையும் செய்துவிட வேண்டும் என்கின்ற ஒரு மனப்போக்கு இதற்கு காரணமாக இருக்கிறது.
ஆனால் இதனை நிச்சயம் அவர்கள் தங்கள் துணையிடம் சொல்லமாட்டார்கள், ஆனால் அவர்களின் கோவமான மனநிலை இதை எளிதில் வெளிக்காட்டிவிடும்.
கெட்டவர்கள் என்று ஆண்கள் நினைப்பவர்களுடன் அவர்களின் துணை பழகும்போது.
பொதுவாக இந்த பிரச்சனை பெண்களின் ஆண் நண்பர்களால் ஏற்படுகிறது, ஆண் நண்பர்களோடு பெண்கள் இயல்பாக பேசிப்பழகும்போது, அதை காணும் அவர்களின் ஆண் துணைக்கு நிச்சயம் கோவம் வரும். அந்த ஆண் நிச்சயம் தன் துணையை தவறான கண்ணோட்டத்தில் தான் பார்க்கின்றார் என்ற எண்ணம் தோன்றும். அது சில சமயங்களில் உண்மையாகவும் இருக்கலாம்.
ஆனால் அதை குறித்தும் வெளிப்படையாக தங்கள் துணையிடம் கூறினால், தன்னை தவறாக நினைப்பார்களோ என்று நினைத்து அதை அவர்கள் வெளிப்படையாக கூறுவதில்லை.
இவர்களுக்கு தான் பாலியல் ஆசை அதிகம் இருக்குமாம்.. செக்ஸ் பற்றிய ஆச்சர்ய தகவல்கள்..