உடலுறவு கொண்ட பிறகு நிம்மதியான உறக்கம் பெறுவது குறித்து கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பலருக்கு உடல் ரீதியான உறவுக்குப் பிறகு கடுமையான தலைவலி இருக்கும். இது விசித்திரமாகத் தோன்றலாம், ஆனால் பாலியல் செயல்பாடுகளுக்கு முன் அல்லது பின் தலைவலி ஏற்படுவதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது.
உடல் உறவின் போது, உற்சாகம் அதிகரித்து, அது கழுத்து மற்றும் தலையில் அழுத்தத்தை தருகிறது. மூளைக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் தமனிகள் சரியாக வேலை செய்யாததால் இது ஏற்படுகிறது. இருப்பினும், சாதாரண சூழ்நிலையில் அதைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால் அது தொடர்ச்சியாக நடந்து, கடுமையான பிரச்னையை உருவாக்கினால் மருத்துவரிடம் செல்ல வேண்டியது அவசியம்.
இரண்டு வகையான பாலியல் தலைவலிகள் உள்ளன:
undefined
1. தலை மற்றும் கழுத்தில் மந்தமான கூச்ச வலி, அதிகரித்த பாலியல் தூண்டுதலுடன் ஏற்படுவது.
2. உடலுறவுக்கு முன் அல்லது பின் தாங்க முடியாத வலி.
சிலருக்கு இரண்டு வகையான தலைவலிகளும் ஒன்றாக இருக்கலாம். இந்த வலி உடனே குணமாகுமா என்பது மருத்துவ சிகிச்சைகளை பொருத்தே நமக்கு தெரியவரும்.
பாலியல் தலைவலி எவ்வளவு காலம் நீடிக்கும்?
இந்த வலி சில நிமிடங்கள் முதல் இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை நீடிக்கும். கடுமையான சந்தர்ப்பங்களில், ஒரு நபர் வாந்தி எடுக்கலாம். அவருக்கு மயக்கம் வரலாம். பல வகையான நரம்பியல் பிரச்சினைகள் கூட ஏற்படலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆண்களுக்கு செக்ஸ் தலைவலி அதிகம்
ஒற்றைத் தலைவலி தொடர்பான பிரச்னை உள்ளவர்களிடையே பாலியல் தலைவலி அதிகம் காணப்படுகிறது. மேலும் பெண்களுடன் ஒப்பிடும் போது ஆண்களிடையே உடலுறவுக்குப் பின் தலைவலி ஏற்படும் பிரச்னை அதிகம் நீடிக்கிறது.
பாலியல் தலைவலிக்கான காரணங்கள்
தலையில் உள்ள வலி உணர்திறன் அமைப்புகளின் சிக்கல்களால் இந்த பிரச்னை ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். பாலியல் தலைவலி என்பது மற்றொரு கோளாறுடன் தொடர்புபடுத்தப்படாத பிரச்னையாகும். தலையில் உள்ள வலி உணர்திறன் கட்டமைப்பின் அதிகப்படியான செயல்பாட்டின் காரணமாக இந்த பிரச்னை ஏற்படுகிறது. தலையின் உள் தமனியின் சுவரில் ஒரு குமிழி (இன்ட்ராக்ரானியல் அனீரிசம்) விரிவடைவது அல்லது செயல்படுவதால் செக்ஸ் தலைவலி உருவாகிறது. இது பக்கவாதத்தை ஏற்படுத்தும். கூடுதலாக, கரோனரி தமனி நோய் போன்ற சில பிரச்னைகளை விளைவிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஒவ்வொரு பெண்ணிடமும் இருக்கவேண்டிய 5 புடவைகள்..! முழு விபரம் இதோ..!!
பாலியல் தொடர்பான தலைவலி மரபணுக்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதாவது குடும்ப வரலாற்றைக் கொண்டவர்களிடையே இந்த பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மருத்துவரிடம் எப்போது செல்ல வேண்டும்?
உடலுறவின் போது தலைவலி ஏற்படுவது தொடரும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். நீங்கள் இதைச் செய்யாவிட்டால், அது தொடர்ந்து வளர்ந்து உயிருக்கு ஆபத்தானதாக மாறும். குறிப்பாக,
- மயக்கம்
- குமட்டல் அல்லது வாந்தி
- கழுத்தில் விறைப்பு அல்லது வலி
- இரட்டை பார்வை
- உணர்வின்மை அல்லது பலவீனம்
போன்ற அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். தாமதம் செய்யக்கூடாது.
பாலியல் தலைவலியை எவ்வாறு தவிர்ப்பது?
தொடர் அறிகுறிகளின் போது அல்லது பாலியல் செயல்பாடுகளின் போது வழக்கமான அல்லது அடிக்கடி தலைவலி ஏற்பட்டால், மருத்துவ உதவியை நாடுவது நல்லது. உங்களைப் பரிசோதித்து, இந்த நிலைக்கான சரியான காரணத்தைப் புரிந்து கொள்ள மருத்துவரை அணுகவும். இது தவிர, தலை, கழுத்து மற்றும் தோள்பட்டை தசைகளை தளர்த்தும் பயிற்சிகளை செய்யுங்கள். அளவோடு உடலுறவு கொள்ளுங்கள். உடலுறவு கொள்ளும்போது கட்டுப்பாட்டை மீறுபவர்களுக்கு தலைவலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த பிரச்னை உள்ளவர்கள் மது அருந்திவிட்டு உடலுறவில் ஈடுபட வேண்டாம். அது நிலைமையை மேலும் மோசமாக்கிவிடும்.